Posts

Showing posts with the label கட்டுரை

குர்ஆனை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்த ரஜியா சுல்தானா

உலகப் பொதுமறை திருக்குர்ஆன் உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வருகிறது. பழமையான பாரசீகம், கிரேக்கம், ரோமன், லத்தீன் போன்ற மொழிகளிலிருந்து கடந்த ஆண்டு நேபாள மொழியிலும் அருள்மறை குர்ஆன் மொழிபெயர்க்கப் பட்டது. உலகில் வாழும் மனிதர்கள் பேசும் அனைத்து மொழிகளிலும் சத்தியத் திருமறையாம் திருக்குர்ஆன் மொழியாக்கம் செய்யப்பட்டு மக்களின் இதயங்களை சுத்திகரிக்கிறது. தற்போது இந்தியாவின் மிகப்பழமையான மொழிகளில் முக்கியம் இடம் வகிக்கும் வடமொழி என்று வர்ணிக்கப் படும் சமஸ்கிருத மொழியிலும் திருக் குர்ஆன் மொழிபெயர்க்கப்பட இருக் கிறது. ஹிந்து மதத்தின் வேத மொழி யாகக் கருதப்படும் சமஸ்கிருதத்தில் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு செய்யப் படுவது சமயங்களுக்கிடையே நன்னம் பிக்கை வளர்க்கும் முயற்சியாகும் என சமூகநல ஆர்வலர்கள் திருப்தி தெரிவிக்கிறார்கள். இந்த அரிய செயலை நிகழ்த்தி புகழ்பெறவிருப்பவர் ரஜியா சுல்தானா என்ற 21 வயது இளம்பெண் ஆவார். இவர் பேராசிரியர் முஹம்மது சுலை மானின் பேத்தியாவார். பேராசிரியர் முஹம்மது சுலைமான், திருக்குர்ஆனை ஹிந்தி மொழிக்கு மொழியாக்கம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜியா ச...

Muslims in Parliament of India-2009

Image
இந்திய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள முஸ்லிம் எம்.பிகளின் தொகுப்புபடம் பெரியதாக தெரிவதற்கு படத்தின் மேல் கிளிக் செய்யவும்

திருவனந்தபுரம் அருகே மோதல்! -போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 4 முஸ்லிம்கள் பலி!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பீமாபள்ளி மற்றும் வலியதுறை பகுதியில் மீனவர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் வலியதுறை பகுதியில் மீனவர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் வலியதுறை பகுதியைச் சேர்ந்த சிலர் பீமாபள்ளி பகுதிக்குச் சென்று குடிபோதையில் ரகளை செய்துள்ளனர். இதனால் இருதரப்பினரி டையே மோதல் வெடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பீமாபள்ளியில் உள்ள வீடுகளுக்கு மீனவர்கள் தீ வைக்கப்பட்டது. இதில் 5 வீடுகள் தீயில் சாம்பலாயின. இதுபற்றி தகவல் அறிந்த தும் வலியதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசார் மீதும் அவர்கள் கல் வீசினர். இதில் இரண்டு உதவி ஆய்வாளர்கள் காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு திருவனந்தபுரம் சஞ்சய் கவுல் விரைந்து சென்றார். கலவரத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் பீமாபள்ளி பகுதியைச் சேர்ந்த சிலர் வலியதுறை பகுதிக்குச் சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த 2 படகுகளுக்கு தீ வைத்தனர். இதனால் இருதரப்பினரும் மீண்டும் மோதிக் கொண்டனர்.  இதனைத் தொடர்ந்து போலீச...

ராம்விலாஸ் பாஸ்வான்-சாதனை வெற்றியும் வேதனைத் தோல்வியும்!

Image
இந்தியாவின் தலித் பெரும் தலைவரும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் இந்த மக்களவைத் தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான ஹாஜிபூரில் தோல்வியைத் தழுவியிருக்கிறார். 1989ல் இதே தொகுதியில் ராம்விலாஸ் பாஸ்வான் பெற்ற வெற்றி அசாதாரணமானது. ஏறக்குறைய ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாஸ் வான், கின்னஸ் சாதனையாளர் களின் பட்டியலிலும் இடம் பெற்றார். 2009ல் நிகழ்ந்த தேர்தலில் அவரது 'செல்ல' ஹாஜிபூர் தொகுதியில் 37 ஆயிரம் வாக்கு கள் வித்தியாசத் தில் தோல்வியைத் தழுவியுள்ளார். வீட்டுக்கு வீடு பாஸ்வானின் புகைப்படம் தொங்கும் என்றும், ஹாஜிபூரின் மாணவர்கள், இளைஞர்கள் பாஸ்வான் படம் போட்ட பனியனை அணிந்து கொண்டு செல்வது வழக்கம் என்றும் பாஸ்வான் செல்வாக்கை சிலாகித்துப் பேசுவோர் உண்டு. அத்தனை செல்வாக்கு மிகுந்த பாஸ்வான் தற்போது தோல்வியைத் தழுவியிருக்கிறார். பாஸ்வானின் தோல்வி குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ''இது ஒரு விளையாட்டு போன்றது. அரசியலில் வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வரும்'' என்றார். தான் தோல்வி அடைந்தாலும் ஹாஜிபூர் மக்களுக் காக உழைப்பதை நிறுத்தப் ப...

தமிழக தேர்தல் தில்லுமுல்லுகள் குறித்து முழுமையான விசாரணை தேவை

Image
மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. இந்த முடிவை எதிர்பார்த்துதான் நாம் போட்டியிட்டோம். இருபெரும் கூட்டணிகளையும், அவர்களது பணபலத்தையும் எதிர்த்து வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல என்பது நமக்கு தெரியும். ஆனால், ஒவ்வொரு தொகுதியிலும் 75 ஆயிரம் தொடங்கி 1 லட்சம் வரை வாக்குகளைப் பெறுவோம் என எதிர்பார்த்தோம். ஆனால் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக குறைவான வாக்குகளை நாம் பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை நம்மால் நம்ப முடியவில்லை, ஏற்க முடியவில்லை. உதாரணத்திற்கு, மத்திய சென்னை தொகுதியில் துறைமுகம் பகுதியிலும், பொள்ளாச்சி தொகுதியில் குனியமுத்தூர் பகுதியிலும், ராமநாதபுரம் தொகுதியில் மண்டபத்திலும், மயிலாடுதுறை தொகுதியில் கும்பகோணத்திலும் ஒரு வாக்குச் சாவடியில் குறைந்தது ஆயிரம் வாக்காளர்கள் ம.ம.க. வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர். ஆனால் மிகமிகக் குறைவான வாக்குகளே கணக்கில் வருகிறது. 'வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி நடந்துள்ளது' என்ற ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு உண்மையானதுதான் என்பது இதன்மூலம் தெரிய வருகிறது. (இதுகுறித்து தினமணி...