Posts

Showing posts with the label media

எந்தவித எதிர்பார்ப்புமின்றி 14 ஆண்டுகளாக மக்கள் சேவை : ம .நே. ம. க., வேட்பாளர் சலிமுல்லாகான் பேட்டி

Image
எந்த எதிர்பார்ப்புமின்றி மனிதநேய மக்கள் கட்சி 14 ஆண்டுகளாக மக்கள் சேவை செய்து வருவதாக அதன் ராமநாதபுரம்வேட்பாளர் சலிமுல்லாகான் தெரிவித்தார். "தினமலர்' நிருபருக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி: ராமநாதபுரம் தொகுதியில் அனைத்து சமுதாய மக்களும் எங்கள் கட்சியினரை அன்புடன் வரவேற்று, தங்களது ஓட்டு மனித நேய மக்கள் கட்சிக்கே என கூறியுள்ளனர். எங்கள் கட்சி தொண்டர்கள் தன்னலம் பாராமலும், பசியறியாமலும் ஆற்றிய பணிகளால் இன்று தொகுதி முழுவதும் மக்கள் மனித நேய மக்கள் கட்சி பற்றி பேசி வருவதை காணமுடிகிறது.எனது வெற்றி உறுதி என்பதால் மற்ற கட்சியினரிடம் எங்களை பற்றி தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர். என் மேல் தவறான குற்றச்சாட்டுகளை துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு முகவரியில்லாமல் வினியோகிக்கின்றனர். குற்றச்சாட்டு கூறுபவர்கள் உண்மையானவர்களாக இருந்தால் என்னுடன் நேருக்கு நேர் பொது மேடையில் விவாதிக்க தயாரா? எனது பொது வாழ்க்கையில் நான் யாருக்கும் எப்போதும் கெடுதல் செய்யவில்லை . என் மீது கூறப்பட்ட குற்றசாட்டை நிருபித்தால், நான் வெற்றி பெற்றால் எனது பதவியை ராஜினாமா செய்ய தயார். மனித நேய மக்கள் கட்சி கடந்த 14 ஆ...

மத்திய சென்னையில் போட்டியிடாமல் வேறு தொகுதி மாறினால்....பேரம் பேசிய தயாநிதி மாறன் கும்பல் அம்பலப் படுத்தும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்...

Image
''தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியின் எழுச்சி தமிழக அரசியலில் காலகாலமாக கோலோச்சி வரும் ஏதேச்சதிகார வர்க்கத்தினரை பீதியடைய வைத்து புலம்ப வைத்தது. பரம்பரை பரம்பரையாக மக்களின் தேவைகளை புறக்கணித்து அரசியல் அதிகாரத்தை சுவைத்து வரும் சக்திகளின் பதவி ஆசையையும், பணத்திமிரையும், ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தை கிள்ளுக்கீரையாக நினைத்து பேரம் பேசிய ஓர் இழி செயலை மத்திய சென்னை மக்களவைத் தொகுதியின் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் செ.ஹைதர் அலி தோலுரித்துக் காட்டியுள்ளார். 07.05.2009 ஆம் தேதி வெளியாகி உள்ள நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் வேட்பாளர் ஹைதர்அலியின் நேர்காணல் வெளியாகியிருந்ததது. அதில் மத்திய சென்னை மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் ஹைதர் அலி பேட்டியளித்திருந்தார் அதில், ஹைதர் அலி எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் இது குறித்து கூறும்போது ''தன்னையும் தனது சகாக்களையும் தயாநிதிமாறனின் ஆட்கள் அணுகி மத்திய சென்னையில் போட்டியிட வேண்டாம் என வற்புறுத்தியதாக தெரிவித்தார். அதோடு பெரும் தொகை தருவதாகவும் வேறு தொகுதியில் போட்டியிடுங்கள் என்று...