Posts

காயமடைந்த ம.ம.க தொண்டர்கள் சிகிச்கைக்காக அப்போலோவில் அனுமதி

இன்று (13-05-09) நடைபெற்ற வாக்குப்பதிவின் போது திமுக குண்டர்களின் கொலைவெறித் தாக்குதலில் காயமடைந்தோர்களை சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். சிகிச்சை பெறுபவர்களை தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி ம.ம.க பொதுச் செயலாளர் அப்துல் சமது ஆகியோர் உடல்நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தனர். சிகிச்சை பெறுபவர்களை ம.ம.க பொருளாளர் ஹாருன் ரசீத் உடன் இருந்து கவனித்து வருகிறார். சிகிச்சை பெற்று வருபவர்களை ஐ.என்.டி.ஜெ தலைவர் பாக்கர், அதிமுக திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் பதர் சையது, முஸ்லிம் தொண்டு இயக்கத்pன் பொதுச் செயலாளர் முகம்மது ஹனிபா ஆகியோர் உடல்நலம் விசாரித்தனர்.

மறுஓட்டுப் பதிவு நடத்த வேண்டும் ம.ம.க கோரிக்கை

Image
மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி பகுதியில் இன்று காலை சுமார் 11.00 மணியளவில் திருவல்லிக்கேணியில் திமுக பகுதி செயலாளரும் மற்றும் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான காமராஜ், திமுகச் சேர்ந்த சேரன் ஆகியோர் தலைமையில் திமுக குண்டர்கள் 200க்கு மேற்பட்டோர் திருவல்லிக்கேணி என்.கே.டி. பள்ளி வாக்குச்சாவடி எண் 97, 98, 99, 100, 102, 104, 110 உட்பட்ட பத்து வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி கள்ள ஓட்டு போடுவதாக தகவல் வந்ததையடுத்து ம.ம.க. வேட்பாளர் ஹைதர் அலி அவர்கள் அங்கு சென்றுள்ளார். அப்போது திமுக குண்டர்கள் வீச்சரிவாள், கத்தி, கடப்பாரை, உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மனிதநேய மக்கள் கட்சியின் பிரமுகர்கள் பயணம் செய்த கார்களை (Safari Car (Ash Colour) No.PY01 AA 1977 & Bolero Car (White Colour) No. TN 21 AX 9001) துவம்சம் செய்துவிட்டு, கார்களில் இருந்த திரு. ஜாகிர் உசேன், ஹசன், மீரான் மொய்தீன், காஜா, பாரூக், சலாவுதீன், ஹைதர் அலி, வசீம், ஜாகிர் உசேன் மற்றும் மூஸா உள்ளிட்ட நபர்களை கொலை செய்யும் நோக்கத்துடன் கொலை வெறித் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது எமது கட்சி வ...

தமுமுக மற்றும் மமக தலைமை நிர்வாகிகள் ஓட்டளித்த காட்சிகள்

Image
வாக்குச் சாவடிகளை சோதனை செய்யும் தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளரும் தமுமுகவின் பொதுச் செயலாளருமான செ. ஹைதர் அலி முத்தால்பேட்டை மேல்நிலைப் பள்ளியில் ஓட்டளித்தார். இராமநாதபுரம் ம.ம.க வேட்பாளர் சலிமுல்லாஹ்கான் இராமநாதபுரம் எம்.எஸ்.கே உயர்நிலைப் பள்ளியில் வாக்களித்த காட்சி

மயிலாடுதுறையில் பேராசிரியர் இறுதிநாள் பிரச்சார காட்சிகள்

Image
மயிலாடுதுறையில் பேராசிரியர் இறுதிநாள் (11.5.2009 பிரச்சார காட்சிகள்

பொள்ளாச்சியில் உமர் தீவிர வாக்கு சேகரிப்பு

Image
மனிதநேய மக்கள் கட்சியின் பொள்ளாச்சி வேட்பாளரும் தமுமுகவின் மாநிலச் செயலாளருமான இ.உமர் இறுதிகட்ட வாக்குச் சேகரிப்பு

மத்திய சென்னையில் பொதுச் செயலாளர் சூறாவளி பிரச்சாரம்

Image
மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளரும் தமுமுகவின் பொதுச் செயலாருமான செ.ஹைதர் அலி வாட்டி எடுக்கும் கத்தரி வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரம் செய்தார்

எந்தவித எதிர்பார்ப்புமின்றி 14 ஆண்டுகளாக மக்கள் சேவை : ம .நே. ம. க., வேட்பாளர் சலிமுல்லாகான் பேட்டி

Image
எந்த எதிர்பார்ப்புமின்றி மனிதநேய மக்கள் கட்சி 14 ஆண்டுகளாக மக்கள் சேவை செய்து வருவதாக அதன் ராமநாதபுரம்வேட்பாளர் சலிமுல்லாகான் தெரிவித்தார். "தினமலர்' நிருபருக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி: ராமநாதபுரம் தொகுதியில் அனைத்து சமுதாய மக்களும் எங்கள் கட்சியினரை அன்புடன் வரவேற்று, தங்களது ஓட்டு மனித நேய மக்கள் கட்சிக்கே என கூறியுள்ளனர். எங்கள் கட்சி தொண்டர்கள் தன்னலம் பாராமலும், பசியறியாமலும் ஆற்றிய பணிகளால் இன்று தொகுதி முழுவதும் மக்கள் மனித நேய மக்கள் கட்சி பற்றி பேசி வருவதை காணமுடிகிறது.எனது வெற்றி உறுதி என்பதால் மற்ற கட்சியினரிடம் எங்களை பற்றி தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர். என் மேல் தவறான குற்றச்சாட்டுகளை துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு முகவரியில்லாமல் வினியோகிக்கின்றனர். குற்றச்சாட்டு கூறுபவர்கள் உண்மையானவர்களாக இருந்தால் என்னுடன் நேருக்கு நேர் பொது மேடையில் விவாதிக்க தயாரா? எனது பொது வாழ்க்கையில் நான் யாருக்கும் எப்போதும் கெடுதல் செய்யவில்லை . என் மீது கூறப்பட்ட குற்றசாட்டை நிருபித்தால், நான் வெற்றி பெற்றால் எனது பதவியை ராஜினாமா செய்ய தயார். மனித நேய மக்கள் கட்சி கடந்த 14 ஆ...