Posts

ஒரிசாவில் பா.ஜ.க. வேட்பாளர் 9 பேர் டெபாசிட் இழந்தனர்

ஒரிசா மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற கிறிஸ்தவர்களுக்கு எதிரான கலவரத்தை சங்பரிவார் சக்திகள் அரசியல் ஆதாயத்திற்காக முன்னெடுத்தன. இதனைத் தொடர்ந்து நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளத்திற்கு மிகப்பெரும் நெருக்கடி ஏற்பட்டது. சில கட்சிகள் மாநிலத்தில் ஆட்சியைக் கலைத்து விட்டு கவர்னர் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தின. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் ஆளுங்கட்சியிடம் கூடுதல் இடங்களை பாஜக கேட்டது. பிஜு ஜனதா தளம் கூடுதல் இடங்களைத் தர மறுக்கவே பாஜக, பிஜு ஜனதா தளத்துடன் 11 ஆண்டுகள் கொண்டிருந்த அரசியல் உறவை முறித்துக் கொண்டது. அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவையும் விலக்கிக் கொண்டது. ஆயினும் நவீன் பட்நாயக், தேசியவாத காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சியை காப்பாற்றிக் கொண்டார். இதனிடையே மாநிலத்தில் உள்ள 21 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பாஜக தனித்துப் போட்டியிட்டது. பாஜகவுக்காக, பாஜகவில் அடுத்த பிரதமர் வேட்பாளர் என கூறப்பட்ட நரேந்திர மோடி, அத்வானி, ராஜ்நாத்சிங் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்...

நாடாளுமன்றத்தில் தேவ்பந்த் அறிஞர்கள்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் மவ்லவி ஹிஃப்சுர் ரஹ்மான் மற்றும் மவ்லானா அபுல் கலாம் ஆசாத் போன்ற மார்க்க அறிஞர்கள் அரும்பாடு பட்டார்கள். பின்னர் அவர்களது தியாகத்திற்கு பரிசாக சட்டமன்ற உறுப்பினர் பதவியும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளும் அவர்களைத் தேடிவந்தன. மத்திய அமைச்சரானார் ஆசாத் அது ஆயிற்று அறுபதாண்டு காலம். மார்க்க அறிஞர்கள் அரசியலில் சிறப்பிடம் பெறுவது என்பது இனி நடக்கவே நடக்காதோ என ஏங்கி தவித்த நிலையில் புகழ்பெற்ற தேவ் பந்த் மார்க்க கல்வி சாலையிலிருந்து உருவான இரண்டு மார்க்க அறிஞர்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. அஸ்ஸாமில் மவ்லவி பத்ருதீன் அஜ்மலில் வெற்றி பெற்றார். மவ்லவி அஸ்ராருல் ஹக் காசிமி பிகார் மாநிலம் கிஸன் கஞ்ச் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்றிருக்கிறார். மவ்லவி பத்ருதீன் துப்ரி தொகுதியில் காங்கிரஸின் அன்வர் ஹுஸைனை வென்றார். மவ்லவி அஸ்ரருல் ஹக் காசிமி லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் முக்கிய தலை வரான முன்னாள் மத்திய அமைச்சர் முஹம்மது தஸ்லீமுதீனை தோற்கடித்தார். 81 ஆயிரம் வோட்டு வித்தியாசத்தில் வென்ற அஸ்ராருல் ஹக் காசிமி டெல்லியைத் தளமாகக் கொண்...

துபையில் ரத்த தான முகாம்

Image
துபை முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக கடந்த 22.05.2009 அன்று மாபெரும் ரத்த தான முகாம் துபை அல்லிவாசல் மருத்துவமனையில் நடை பெற்றது. துபை முமுக நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். முஸ்லிமல்லாத சகோதரர்களும் இம் முகாமில் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். இம்முகாமில் முமுக துபை மண்டலத் தலைவர் அப்துல் ஹாதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். துபை மண்டல மருத்துவரணி செயலாளர் திருப்பந்துருத்தி அப்துல் ரவூப் மக்களை ஒருங்கிணைத்தார். மதுக்கூர் சேக் பரீத், கொள்ளுமேடு ஜாகிர் உசேன், மேலப் பாளையம் அப்துல் கரீம் ஆகிய சகோ தரர்கள் வாகன வசதிகளை சிறப்பான முறையில் செய்திருந்தார்கள்.

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடிகள் (வீடியோ)

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நடைபெற்ற குளறுபடிகள் பற்றி தமுமுக பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி ஜெயா தொலைக்காட்சியில் கலந்து கொண்டு உரையாடிய வீடியோ தொகுப்பு.

Muslims in Parliament of India-2009

Image
இந்திய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள முஸ்லிம் எம்.பிகளின் தொகுப்புபடம் பெரியதாக தெரிவதற்கு படத்தின் மேல் கிளிக் செய்யவும்

திருவனந்தபுரம் அருகே மோதல்! -போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 4 முஸ்லிம்கள் பலி!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பீமாபள்ளி மற்றும் வலியதுறை பகுதியில் மீனவர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் வலியதுறை பகுதியில் மீனவர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் வலியதுறை பகுதியைச் சேர்ந்த சிலர் பீமாபள்ளி பகுதிக்குச் சென்று குடிபோதையில் ரகளை செய்துள்ளனர். இதனால் இருதரப்பினரி டையே மோதல் வெடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பீமாபள்ளியில் உள்ள வீடுகளுக்கு மீனவர்கள் தீ வைக்கப்பட்டது. இதில் 5 வீடுகள் தீயில் சாம்பலாயின. இதுபற்றி தகவல் அறிந்த தும் வலியதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசார் மீதும் அவர்கள் கல் வீசினர். இதில் இரண்டு உதவி ஆய்வாளர்கள் காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு திருவனந்தபுரம் சஞ்சய் கவுல் விரைந்து சென்றார். கலவரத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் பீமாபள்ளி பகுதியைச் சேர்ந்த சிலர் வலியதுறை பகுதிக்குச் சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த 2 படகுகளுக்கு தீ வைத்தனர். இதனால் இருதரப்பினரும் மீண்டும் மோதிக் கொண்டனர்.  இதனைத் தொடர்ந்து போலீச...

ராம்பூரும்..... காஜியாபாத்தும்.........

உத்தரப்பிரதேச மாநிலம் முஸ்லிம் வாக்காளர்கள் நிறைந்த மாநிலமாகும். முஸ்லிம்களின் வாக்குகளை அறுவடை செய்தே முலாயமின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் ஆட்சி அதிகாரத்தை அனுபவித்து வந்தன. இந்த இரண்டு அணிகளை நம்பிய முஸ்லிம்களும் தங்களது அரசியல் அதிகாரம் குறித்த எவ்வித அக்கறையும் இல்லாது ஓட்டு போடுவதை மட்டுமே முக்கியக் கடமையாக நினைத்துக் கொண்டே வாழ்ந்தனர். தங்களது மண் ணும், தங்களது அரசியல் பிரதிநிதித்துவ மும் வீணடிக்கப்படுவதைக் கண்டு சிறிதும் சிந்தனையின்றி வாழ்ந்து வந்ததன் விளைவாக முஸ்லிம் வாக்காளர்கள் நிறைந்த தொகுதிகளில் முஸ்லிம் அல்லா தவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் பரிதாப நிலை ஏற்படுகிறது. அதற்கு உத்தரப்பிரதேசத்தில் மட்டு மல்ல, இந்தியா முழுவதும் உதாரணங்கள் உண்டு. எனினும் உ.பி.யில் நாம் கண் முன்னால் கவனிக்கும் எடுத்துக்காட்டு களாக ராம்பூரும் காஜியாபாத்தும் அமைந்துள்ளன. முதலில் காஜியாபாத்தைப் பார்ப்போம். நான்கரை லட்சம் முஸ்லிம் வாக்காளர் களைக் கொண்ட இந்த தொகுதியில் இருந்து பாஜகவின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத்சிங் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். முஸ்லிம்களின் வாக்கு வலிமை க...