Posts

உலக அமைதிக்கு வழி...ஓரிறை கொள்கை ஒன்றே!!

நாள் : 14.06.2009 ஞாயிறு 4:00- PM T PM To 9:00 PM இடம்: PLASHET SCHOOL { OLD BUILDING }Plashet Grove, East Ham, LONDON E6 1DG சிறப்பு விருந்தினர் Dr, M.H.ஜவாஹிருல்லாஹ் { தலைவர் தமுமுக } சிறப்புப் பேச்சாளர்கள்: மெளலவி S.கமாலுதீன் மதனி { அமீர் JAQH,தமிழ்நாடு } மெளலவி ஹாபிழ் யஹ்யாஅஷ்ஷெய்க் M.மன்சூர் நளீமிமெளலவி H.M.மின்ஹாஜ் இஸ்லாமிய அழைப்புப் பணி மையம் லண்டன்

லண்டனில் த.மு.மு.க தலைவர்

Image
தமிழகத்தில் இரத்ததான முகாம்கள், கண்சிகிச்சை முகாம்கள், கல்விச் சேவைகள், இலவச மருத்துவ முகாம்கள், அவசர ஊர்தி அர்பணித்தல், சுனாமி நிவாரணப் பணிகள் என்று மாநிலத்தில் பரவலாக அனைத்து சமூக மக்களுக்கும் கடந்த 14 வருடங்களாக மிகச் சிறப்பான முறையில் சேவைகள் செய்து வரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இந்திய எல்லையைத் தாண்டி வெளிநாட்டின் பல பகுதிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பிரிட்டன் பயணம் செய்துள்ள தமுமுக தலைவர் முனைவர் ஜவஹிருல்லாஹ் அவர்கள் லண்டனில் வசிக்கும் நமது சமுதாயத்தவர்கள் ஏற்பாடு செய்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அமைப்பின் கிளை துவக்குவது சம்மந்தமாக பல்வேறு அமர்வுகளில் மக்களை சந்தித்து ஆலோசனை செய்துவருகின்றார்.

புதுவலசையில் 66வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

Image
இராமநாதபுரதம் மாவட்டம் புதுவலசையில் தமுமுகவின் சார்பாக 66வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப் பட்டது. இதனை தமுமுகவின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அர்ப்பணித்தார். இந்த ஆம்புலன்ஸை புதுவலசை தாஸின் அறக்கட்டளையின் நிறுவனர் தாஸின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமுமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை செய்யது, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சலிமுல்லாஹ் கான், இராமநாதபுரம் கிழக்கு மாவட்டத் தலைவர் சாதிக் பாட்ஷர் மாவட்டச் செயலாளர் தஸ்பிக் அலி மற்றும் மேற்கு மாவட்டத் தலைவர் சல்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் போது புதுவலசை கிளையின் சார்பாக கல்வி உதவிகளும் வழங்கப் பட்டன. இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் 1200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இராமநாதபுரத்தில் கல்வி உதவி

Image
இராமநாதபுரம் நகர தமுமுக சார்பில் கல்வி உதவிகள் வழங்கப் பட்டன. ரூ. 2லட்சம் மதிப்புள்ள கல்வி உதவிகளை பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி வழங்கினார். தமுமுக தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை செய்யது, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சலிமுல்லாஹ்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்த ம.ம.க கோரிக்கை

Image
நன்றி : மலேசிய நண்பன்

வழக்கறிஞராக வேண்டுமா?

சமூகத்தில் நடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்கவும், மனித உரிமைகளைக் காத்திடவும் துடிப்புள்ள வழக்கறிஞராக ஆசையா? உங்களுக்கு உதவ தமுமுக மாணவரணி தயாராக இருக்கிறது. சட்டக் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு ஆலோசனையும், தகுதியுள்ள ஏழை மாணவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக கல்விக் கட்டணமும் இலவசமாய் வழங்கப்பட்டு வருகின்றன. தொடர்புக்கு : காஞ்சி மு. ஜைனுல் ஆபிதீன் M.A., B.L., (மாநில மாணவரணி செயலாளர்) செல் 99942 92932

வாக்குப்பதிவு மோசடியை எதிர்த்து வழக்குமனிதநேய மக்கள் கட்சி உயர்நிலைக்குழு முடிவு

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு 02.06.2009 அன்று ஒருங்கிணைப்பாளர் பேரா. முனைவர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் சென்னையில் கூடி தேர்தல் முடிவுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. ஜீன்-6ம் தேதி மாநிலச் செயற்குழுவை சென்னையில் கூட்டுவதெனவும், அதைத் தொடர்ந்து திருச்சி, மதுரை, கோவை, சென்னை ஆகிய இடங்களில் மண்டலப் பொதுக் குழுக்களை நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. வாக்குப்பதிவு எந்திர மோசடிகள் குறித்து வழக்கு தொடருவதோடு, இனிவரும் தேர்தல்களின் வாக்குப்பதிவு வாக்குச்சீட்டு மூலமே நடப்பதற்கு வலுவான முயற்சிகளை முன்னெடுப்பதென முடிவெடுக்கப்பட்டது. எதிர்வரும் இடைத்தேர்தல்கள் வாக்குச்சீட்டு முறையில் இல்லாமல் வாக்குபதிவு எந்திரமுறையிலேயே நடக்கும் என்றால், அதில் போட்டியிடாமல் இருக்க அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வேண்டுகோள் வைப்பது எனவும் முடிவெடுக்கப் பட்டது.