Posts

எகிப்தில் ஒபாமாவின் உரை தமுமுக தலைவரின் கருத்து (பிபிசி தமிழோசை)

டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யவும்

உலக அமைதிக்கு வழி...ஓரிறை கொள்கை ஒன்றே!

Image
இலண்டன் இஸ்லாமிய அழைப்பு பணி மையம் சார்பாக உலக அமைதிக்கு வழி...ஓரிறை கொள்கை ஒன்றே! எனும் தலைப்பில் இஸ்லாமிய மாநாடு பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடப்பெற்றது. மாநாட்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் Dr, M.H. ஜவஹிருல்லாஹ், JAQH அமீர் மெளலவS. கமாலுதீன் மதனி மெளலவி ஹாபிழ் யஹ்யா அஷ்ஷெய்க் M. மன்சூர் நளீமி மெளலவி முஹம்மது இஸ்மாயில் மற்றும் உலமா பெருமக்கள் கலந்துக்கொண்டு, உலக அமைதிக்கு இஸ்லாமிய கொள்கை, இஸ்லாமிய வட்டியில்ல கடன், படைத்தவனை வனங்கு;படைப்பினங்களை வனங்காதே! என்ற தலைப்புகளில் பேசினார்கள். லண்டனின் மாநாட்டிற்கு பலப்பகுதிகளில் இருந்து திரலாக கலந்துக்கொண்டனர்.

யுஜெஎன் வட்ட மேசை அமர்வில் த.மு.மு.க தலைவர்

Image
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம் ஹெச் ஜவாஹிருல்லாஹ் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குக் கொள்வதற்காக கடந்த ஜுன் 7ம் தேதி இரவு லண்டன் வந்தார். லண்டன் ஹூத்ரோ விமான நிலையத்தில் அவரை தைக்கால் ஜாகிர் ஹூசைன், காரைக்கால் டாக்டர் கபீர், லால்பேட்டை இல்யாஸ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜுன் 8 முதல் 10 வரை லண்டன் மைதன்வேல் இஸ்லாமிக் சென்டரில் நடைபெற்ற யுனிவர்சல் ஜஸ்டிஸ் நெட்வர்க் (சர்வதேச நீதி இணையம்) – யுஜெஎன் அமைப்பின் வட்ட மேசை அமர்வில் தமுமுக தலைவர் கலந்துக் கொண்டார். கடந்த ஆண்டு மலேசியாவில் உள்ள பினங்கு நகரத்தில் யுஜெஎன் அமைப்பு தொடங்கப்பட்டது. உலகின் பல்வேறு பகுதிகளில் மனித உரிமைகளுக்காக இயங்கும் முஸ்லிம் அரசு சாரா அமைப்புகளின் ஒரு இணைப்பு அமைப்பாக யுஜெஎன் உருவாக்கப்பட்டது. இதில் தமுமுகவும் இணைந்து செயல்படுகின்றது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உலகில் பல்வேறு நாடுகளில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக இலங்கை வட கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களின் பிரச்னையை தமுமுக தலைவர் விரிவாக எடுத்துரைத்தார். ஐ.நா. உட்பட ச...

உலக அமைதிக்கு வழி...ஓரிறை கொள்கை ஒன்றே!!

நாள் : 14.06.2009 ஞாயிறு 4:00- PM T PM To 9:00 PM இடம்: PLASHET SCHOOL { OLD BUILDING }Plashet Grove, East Ham, LONDON E6 1DG சிறப்பு விருந்தினர் Dr, M.H.ஜவாஹிருல்லாஹ் { தலைவர் தமுமுக } சிறப்புப் பேச்சாளர்கள்: மெளலவி S.கமாலுதீன் மதனி { அமீர் JAQH,தமிழ்நாடு } மெளலவி ஹாபிழ் யஹ்யாஅஷ்ஷெய்க் M.மன்சூர் நளீமிமெளலவி H.M.மின்ஹாஜ் இஸ்லாமிய அழைப்புப் பணி மையம் லண்டன்

லண்டனில் த.மு.மு.க தலைவர்

Image
தமிழகத்தில் இரத்ததான முகாம்கள், கண்சிகிச்சை முகாம்கள், கல்விச் சேவைகள், இலவச மருத்துவ முகாம்கள், அவசர ஊர்தி அர்பணித்தல், சுனாமி நிவாரணப் பணிகள் என்று மாநிலத்தில் பரவலாக அனைத்து சமூக மக்களுக்கும் கடந்த 14 வருடங்களாக மிகச் சிறப்பான முறையில் சேவைகள் செய்து வரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இந்திய எல்லையைத் தாண்டி வெளிநாட்டின் பல பகுதிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பிரிட்டன் பயணம் செய்துள்ள தமுமுக தலைவர் முனைவர் ஜவஹிருல்லாஹ் அவர்கள் லண்டனில் வசிக்கும் நமது சமுதாயத்தவர்கள் ஏற்பாடு செய்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அமைப்பின் கிளை துவக்குவது சம்மந்தமாக பல்வேறு அமர்வுகளில் மக்களை சந்தித்து ஆலோசனை செய்துவருகின்றார்.

புதுவலசையில் 66வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

Image
இராமநாதபுரதம் மாவட்டம் புதுவலசையில் தமுமுகவின் சார்பாக 66வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப் பட்டது. இதனை தமுமுகவின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அர்ப்பணித்தார். இந்த ஆம்புலன்ஸை புதுவலசை தாஸின் அறக்கட்டளையின் நிறுவனர் தாஸின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமுமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை செய்யது, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சலிமுல்லாஹ் கான், இராமநாதபுரம் கிழக்கு மாவட்டத் தலைவர் சாதிக் பாட்ஷர் மாவட்டச் செயலாளர் தஸ்பிக் அலி மற்றும் மேற்கு மாவட்டத் தலைவர் சல்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் போது புதுவலசை கிளையின் சார்பாக கல்வி உதவிகளும் வழங்கப் பட்டன. இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் 1200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இராமநாதபுரத்தில் கல்வி உதவி

Image
இராமநாதபுரம் நகர தமுமுக சார்பில் கல்வி உதவிகள் வழங்கப் பட்டன. ரூ. 2லட்சம் மதிப்புள்ள கல்வி உதவிகளை பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி வழங்கினார். தமுமுக தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை செய்யது, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சலிமுல்லாஹ்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.