மத்திய சென்னையில் போட்டியிடாமல் வேறு தொகுதி மாறினால்....பேரம் பேசிய தயாநிதி மாறன் கும்பல் அம்பலப் படுத்தும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்...
''தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியின் எழுச்சி தமிழக அரசியலில் காலகாலமாக கோலோச்சி வரும் ஏதேச்சதிகார வர்க்கத்தினரை பீதியடைய வைத்து புலம்ப வைத்தது. பரம்பரை பரம்பரையாக மக்களின் தேவைகளை புறக்கணித்து அரசியல் அதிகாரத்தை சுவைத்து வரும் சக்திகளின் பதவி ஆசையையும், பணத்திமிரையும், ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தை கிள்ளுக்கீரையாக நினைத்து பேரம் பேசிய ஓர் இழி செயலை மத்திய சென்னை மக்களவைத் தொகுதியின் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் செ.ஹைதர் அலி தோலுரித்துக் காட்டியுள்ளார். 07.05.2009 ஆம் தேதி வெளியாகி உள்ள நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் வேட்பாளர் ஹைதர்அலியின் நேர்காணல் வெளியாகியிருந்ததது. அதில் மத்திய சென்னை மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் ஹைதர் அலி பேட்டியளித்திருந்தார் அதில், ஹைதர் அலி எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் இது குறித்து கூறும்போது ''தன்னையும் தனது சகாக்களையும் தயாநிதிமாறனின் ஆட்கள் அணுகி மத்திய சென்னையில் போட்டியிட வேண்டாம் என வற்புறுத்தியதாக தெரிவித்தார். அதோடு பெரும் தொகை தருவதாகவும் வேறு தொகுதியில் போட்டியிடுங்கள் என்று...