உலகப் பொதுமறை திருக்குர்ஆன் உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வருகிறது. பழமையான பாரசீகம், கிரேக்கம், ரோமன், லத்தீன் போன்ற மொழிகளிலிருந்து கடந்த ஆண்டு நேபாள மொழியிலும் அருள்மறை குர்ஆன் மொழிபெயர்க்கப் பட்டது. உலகில் வாழும் மனிதர்கள் பேசும் அனைத்து மொழிகளிலும் சத்தியத் திருமறையாம் திருக்குர்ஆன் மொழியாக்கம் செய்யப்பட்டு மக்களின் இதயங்களை சுத்திகரிக்கிறது. தற்போது இந்தியாவின் மிகப்பழமையான மொழிகளில் முக்கியம் இடம் வகிக்கும் வடமொழி என்று வர்ணிக்கப் படும் சமஸ்கிருத மொழியிலும் திருக் குர்ஆன் மொழிபெயர்க்கப்பட இருக் கிறது. ஹிந்து மதத்தின் வேத மொழி யாகக் கருதப்படும் சமஸ்கிருதத்தில் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு செய்யப் படுவது சமயங்களுக்கிடையே நன்னம் பிக்கை வளர்க்கும் முயற்சியாகும் என சமூகநல ஆர்வலர்கள் திருப்தி தெரிவிக்கிறார்கள். இந்த அரிய செயலை நிகழ்த்தி புகழ்பெறவிருப்பவர் ரஜியா சுல்தானா என்ற 21 வயது இளம்பெண் ஆவார். இவர் பேராசிரியர் முஹம்மது சுலை மானின் பேத்தியாவார். பேராசிரியர் முஹம்மது சுலைமான், திருக்குர்ஆனை ஹிந்தி மொழிக்கு மொழியாக்கம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜியா ச...