Posts

Showing posts with the label ஈழம்

முற்றுபெற்று விட்டதா ஈழ விடுதலைப் போராட்டம்?

1980களில் தொடங்கிய தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் இறுதி முடிவை தழுவியிருக்கிறது. எல்.டி.டி.ஈ, ப்ளாட், டெலோ, ஈரோஸ், ஈ.என்.டி.எல்.எப்., இ.பி.ஆர்.எல்.எப். போன்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கங்கள் சிங்கள பேரின வாதத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தன. ஒவ்வொரு இயக்கமும் ஏதாவது ஒருவகையில் தனிச் சிறப்பு பெற்றிருந்தது. இதில் பலர் இந்தியாவிலும் பாலஸ் தீனத்திலும் ஆயுதப் பயிற்சியைப் பெற்றனர். இந்திய உளவுத்துறை 'டெலோ' அமைப் புக்கு பேராதரவை வழங்கி பயிற்சி கொடுத்தது. தமிழக உளவு அமைப்புகள் விடுதலைப் புலிகளை ஆதரித்து பயிற்சி அளித்தன. ஒரு கட்டத்தில் ஆறு அமைப்புகளின் தலைவர்களான பிரபாகரன், சபா ரத்தினம், பத்மநாபா, உமா மகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் ஒன்றாக நின்று கைகளை உயர்த்தி பத்திரிகையாளர்களுக்கு மத்தியில் தங்கள் ஒற்றுமையை வெளிக்காட்டினர். தமிழகமே பூரித்தது. எம்.ஜி.ஆர். புலிகளை ஆதரித்ததும், அந்தக் கோபத்தில் கருணாநிதி டெலோ அமைப்பின் தலைவரான சபா ரத்தி னத்தை ஆதரித்ததும் ஈழப் பிரச்சினை யில் குழு மோதல்களுக்கு வித்திட்டது. பிரபாகரன் மிகச்சிறந்த போர்க்கலை நிபுணராக அடையாளம் காணப்பட்டார். உமா மகேஸ்வரனும், சபா...