Posts

Showing posts with the label கடிதம்

மருத்துவ கல்லூரி சேர்க்கை கலந்தாய்வுகளில் முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரட்சனைகள் குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் செயலாளர் முதல்வருக்கு கடிதம்

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு பின்வரும் கடிதத்தை அனுப்பியுள்ளார்; ''நடைபெற்று வரும் மருத்துவ கல்லூரிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வுகளில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் மாணவர்கள் எதிர்நோக்கும் ஒரு பிரச்சனையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். எங்கள் நீண்டக் கால கோரிக்கையான இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றிய நீங்கள் இந்த குளறுபடியையும் நீக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீடு அளித்து உங்கள் தலைமையிலான அரசு நிறைவேற்றிய சட்டத்தில் திறந்த போட்டி (ஒ.சி)க்கான தகுதியை பெறும் முஸ்லிம் போட்டியாளர்ளுக்கு ஒ.சி. ஒதுக்கீட்டில் தான் இடம் அளிக்க வேண்டும். தகுதியின் அடிப்படையில் ஓ.சி. ஒதுக்கீட்டில் முஸ்லிம்கள் இடம் பெறும் காரணத்தினால் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் பெறும் முஸ்லிம்களின் எண்ணிக்கை எந்த காரணத்தைக் கொண்டு குறைந்து விடக் கூடாது என்று முஸ்லிம்கள் இடஒதுக்கீடு தொடர்பான அவசர சட்டத்தின் விதி 5 குறிப்பிடுகின்றது. (நகல் இணைக்கப்பட்டுள்ளது)இடஒதுக்கீடு தொடர்பான இந்த அரசா...