Posts

Showing posts from July 6, 2009

ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவுப் போக்கு:மத்திய அரசுக் கண்டித்து தமுமுக மாபெரும் ஆர்ப்பாட்டம்

Image
ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு அளிக்கும் விதமாகவும், ஓரினச் சேர்க்கைக்கு தண்டனை வழங்கும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377லிஐ நீக்க முயலும் மத்திய அரசின் செயலைக் கண்டித்து தமுமுகவின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 06,07,2009 மாலை 5 மணியளவில் சென்னை மெமோரியல் ஹால் அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சி அமைப்புச் செயலாளர் ஜைனுல் ஆப்தீன், மாநில வர்த்தகர் அணிச் செயலாளர் யாசின். மாநில தொண்டரணிச் செயலாளர் முகம்மது ரஃபி, மாநில மாணவரணிச் செயலாளர் ஜைனுல் ஆப்தீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். வட சென்னை மற்றும் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், ''ஓரினச் சேர்க்கை செயலுக்கு வக்காலத்து வாங்கும் அவசியம் என்ன வந்தது? மேற்குலகை தனது புதிய வழிகாட்டியாக கொண்டு விளங்கும் ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசுக்கு அநாகரீக பாதையில் செல்லும் அவசியம் என்ன? கோவாவிலும், சென்னை மகாபலிபுரத்திலும் மேற்கு நாடுகளைச் சேர்ந்த வக்கிர பேர்வழிகள் சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் இங்கு வந்து தங்...