Posts

Showing posts from May 13, 2009

காயமடைந்த ம.ம.க தொண்டர்கள் சிகிச்கைக்காக அப்போலோவில் அனுமதி

இன்று (13-05-09) நடைபெற்ற வாக்குப்பதிவின் போது திமுக குண்டர்களின் கொலைவெறித் தாக்குதலில் காயமடைந்தோர்களை சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். சிகிச்சை பெறுபவர்களை தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி ம.ம.க பொதுச் செயலாளர் அப்துல் சமது ஆகியோர் உடல்நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தனர். சிகிச்சை பெறுபவர்களை ம.ம.க பொருளாளர் ஹாருன் ரசீத் உடன் இருந்து கவனித்து வருகிறார். சிகிச்சை பெற்று வருபவர்களை ஐ.என்.டி.ஜெ தலைவர் பாக்கர், அதிமுக திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் பதர் சையது, முஸ்லிம் தொண்டு இயக்கத்pன் பொதுச் செயலாளர் முகம்மது ஹனிபா ஆகியோர் உடல்நலம் விசாரித்தனர்.

மறுஓட்டுப் பதிவு நடத்த வேண்டும் ம.ம.க கோரிக்கை

Image
மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி பகுதியில் இன்று காலை சுமார் 11.00 மணியளவில் திருவல்லிக்கேணியில் திமுக பகுதி செயலாளரும் மற்றும் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான காமராஜ், திமுகச் சேர்ந்த சேரன் ஆகியோர் தலைமையில் திமுக குண்டர்கள் 200க்கு மேற்பட்டோர் திருவல்லிக்கேணி என்.கே.டி. பள்ளி வாக்குச்சாவடி எண் 97, 98, 99, 100, 102, 104, 110 உட்பட்ட பத்து வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி கள்ள ஓட்டு போடுவதாக தகவல் வந்ததையடுத்து ம.ம.க. வேட்பாளர் ஹைதர் அலி அவர்கள் அங்கு சென்றுள்ளார். அப்போது திமுக குண்டர்கள் வீச்சரிவாள், கத்தி, கடப்பாரை, உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மனிதநேய மக்கள் கட்சியின் பிரமுகர்கள் பயணம் செய்த கார்களை (Safari Car (Ash Colour) No.PY01 AA 1977 & Bolero Car (White Colour) No. TN 21 AX 9001) துவம்சம் செய்துவிட்டு, கார்களில் இருந்த திரு. ஜாகிர் உசேன், ஹசன், மீரான் மொய்தீன், காஜா, பாரூக், சலாவுதீன், ஹைதர் அலி, வசீம், ஜாகிர் உசேன் மற்றும் மூஸா உள்ளிட்ட நபர்களை கொலை செய்யும் நோக்கத்துடன் கொலை வெறித் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது எமது கட்சி வ...

தமுமுக மற்றும் மமக தலைமை நிர்வாகிகள் ஓட்டளித்த காட்சிகள்

Image
வாக்குச் சாவடிகளை சோதனை செய்யும் தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளரும் தமுமுகவின் பொதுச் செயலாளருமான செ. ஹைதர் அலி முத்தால்பேட்டை மேல்நிலைப் பள்ளியில் ஓட்டளித்தார். இராமநாதபுரம் ம.ம.க வேட்பாளர் சலிமுல்லாஹ்கான் இராமநாதபுரம் எம்.எஸ்.கே உயர்நிலைப் பள்ளியில் வாக்களித்த காட்சி