Posts

Showing posts with the label பத்திரிக்கை அறிக்கை

வாக்குப்பதிவு மோசடியை எதிர்த்து வழக்குமனிதநேய மக்கள் கட்சி உயர்நிலைக்குழு முடிவு

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு 02.06.2009 அன்று ஒருங்கிணைப்பாளர் பேரா. முனைவர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் சென்னையில் கூடி தேர்தல் முடிவுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. ஜீன்-6ம் தேதி மாநிலச் செயற்குழுவை சென்னையில் கூட்டுவதெனவும், அதைத் தொடர்ந்து திருச்சி, மதுரை, கோவை, சென்னை ஆகிய இடங்களில் மண்டலப் பொதுக் குழுக்களை நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. வாக்குப்பதிவு எந்திர மோசடிகள் குறித்து வழக்கு தொடருவதோடு, இனிவரும் தேர்தல்களின் வாக்குப்பதிவு வாக்குச்சீட்டு மூலமே நடப்பதற்கு வலுவான முயற்சிகளை முன்னெடுப்பதென முடிவெடுக்கப்பட்டது. எதிர்வரும் இடைத்தேர்தல்கள் வாக்குச்சீட்டு முறையில் இல்லாமல் வாக்குபதிவு எந்திரமுறையிலேயே நடக்கும் என்றால், அதில் போட்டியிடாமல் இருக்க அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வேண்டுகோள் வைப்பது எனவும் முடிவெடுக்கப் பட்டது.

தமிழகத்தின் துணை முதல்வராக மு.க. ஸ்டாலின் மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து

தமிழகத்தின் துணை முதல்வராக மு.க. ஸ்டாலின் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை தமிழகத்தின் துணை முதல்வராக திமுகவின் பொருளாளரும், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சருமான சகோதரர் மு.க. ஸ்டாலின் அவர்களை அறிவித்த தமிழக முதல்வருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். சகோதரர் ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் துணை முதல்வராக சிறப்பாக பணியாற்றி, அரசு நிர்வாக பணிகளை சுறுசுறுப்பாக இயங்க வைத்து தமிழகத்திற்கு தொண்டாற்றிட வாழ்த்துகிறோம்.

இனிவரும் தேர்தல்களில் ஓட்டுச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும்!மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் தமுமுகவின் தலைவருமான எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வெளியிடும் அறிக்கை: ஒடுக்கப்பட்ட மக்களும் அரசியல் உரிமை பெறவேண்டும், அடித்தட்டு மக்களுக்கும் அதிகாரப் பிரதிநிதித்துவம் வேண்டும், அரசியலில் லஞ்சத்தையும், ஊழலையும், மதவாதத்தையும் வேறுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த மகத்தான லட்சியங்களை முன்வைத்து மனிதநேய மக்கள் கட்சி மக்களவைத் தேர்தலில் களமிறங்கியது. மத்திய சென்னை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்டது. இத்தொகுதிகளில் ம.ம.க.வுக்கு வாக்களித்த மக்களுக்கு இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கட்சி தொடங்கி மூன்று மாதங்களில் நான்கு தொகுதிகளில் மிகப்பெரிய சக்திகளை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி களம் கண்டது. தேர்தலில் வெற்றி கிட்டாவிட்டாலும் மனிதநேய மக்கள் கட்சியின் உயர்ந்த லட்சியங்கள் எதிர்காலத்தில் வெல்ல இடையறாது பாடுபடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தேர்தல் முடிவுகள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர முறை மீது பலமான சந்தேகங்களை எழுப்பியுள்ள...

அவதூறு பரப்புவோர் இறைவனை அஞ்சிக் கொள்ளட்டும்-தமுமுக தலைவர்

தமுமுக தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளருமான பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்களின் அறிக்கை: நான் மயிலாடுதுறை தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறேன். வாக்கு சேகரிப்பதற்காகவும், ஆதரவு கோரியும் தொகுதியில் உள்ள அனைத்து முக்கியப் பிரமுகர்களையும், மதத் தலைவர்களையும் சந்தித்து வருகிறேன். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், கிறித்தவ பாதிரியார்கள் என பலரையும் சந்தித்தது போலத்தான் திருவாடுதுறை ஆதினம் அவர்களையும் சந்தித்தேன். திருக்குர்ஆன் மொழியாக்கப் பிரதி ஒன்றை பரிசளித்துவிட்டு அவரிடம் ஆதரவு கோரினேன். அவரும் நான் தேர்தலில் வெற்றி பெற தனது ஆதரவை தெரிவித்தார்.நான் அவரது காலில் விழவும் இல்லை. கையெடுத்து வணக்கம் செய்யவும் இல்லை. இச்செய்தியைத் ஆதினத்திடம் ஆசி பெற்றதாக அவர்களது பாணியில் தினமணி பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்தச் செய்தியை வைத்துக் கொண்டு அவதூறு பரப்புவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட சிலர் இச்செய்தியைத் திரித்து ஆதினத்தை நான் வணங்கியது போலவும், அருளாசி பெற்றது போலவும் சித்தரித்து அவதூறுச் செய்திகளைப் பரப்பி வருகின்றனர். நான் என்னுடைய மாணவ...