Posts

Showing posts from June 3, 2009

வாக்குப்பதிவு மோசடியை எதிர்த்து வழக்குமனிதநேய மக்கள் கட்சி உயர்நிலைக்குழு முடிவு

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு 02.06.2009 அன்று ஒருங்கிணைப்பாளர் பேரா. முனைவர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் சென்னையில் கூடி தேர்தல் முடிவுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. ஜீன்-6ம் தேதி மாநிலச் செயற்குழுவை சென்னையில் கூட்டுவதெனவும், அதைத் தொடர்ந்து திருச்சி, மதுரை, கோவை, சென்னை ஆகிய இடங்களில் மண்டலப் பொதுக் குழுக்களை நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. வாக்குப்பதிவு எந்திர மோசடிகள் குறித்து வழக்கு தொடருவதோடு, இனிவரும் தேர்தல்களின் வாக்குப்பதிவு வாக்குச்சீட்டு மூலமே நடப்பதற்கு வலுவான முயற்சிகளை முன்னெடுப்பதென முடிவெடுக்கப்பட்டது. எதிர்வரும் இடைத்தேர்தல்கள் வாக்குச்சீட்டு முறையில் இல்லாமல் வாக்குபதிவு எந்திரமுறையிலேயே நடக்கும் என்றால், அதில் போட்டியிடாமல் இருக்க அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வேண்டுகோள் வைப்பது எனவும் முடிவெடுக்கப் பட்டது.

தமுமுக சார்பில் கோவை அரசு மருத்துவமனைக்கு உதவி

Image
கோவை மாவட்ட த மு மு க. சார்பில் 02-6-2009 அன்று கோவை அரசு மருத்துவமனைக்கு ருபாய் 25,000 மதிப்புள்ள நோயாளிகளுக்கான படுக்கை மெத்தைகள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் த மு மு க. மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அசரப் தலைமையில் நடந்தது.இதில் மாநில செயலாளர் கோவை உமர் நோயாளிகளுக்கான மெத்தைகளை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் குமரனிடம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தமுமுக மாவட்ட தலைவர் பசிர் அகமது. மாவட்ட செயலாளர் ஹமிது. மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் அப்பாஸ். துனை செயலாளர் ஷாஜகான்.மற்றும் ம.ம.க இளைஞர் அணி செயலாளர் அப்பாஸ், கோவை தங்கப்பா, கவிஞர் ஹக், நுர்தின், ஜாபர்சாதிக் ஆகியோர்கள் கலந்துகொண்டார்கள்.