Posts

Showing posts with the label BJP

பாஜக அணிக்கு தாவிய தெலுங்கானா கட்சி உடைகிறது!

ஆந்திராவில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதிக்கு (டி.ஆர்.எஸ்.) குறைந்த இடங்களே கிடைத்துள்ளதால் கட்சியின் அதிருப்தியாளர்களால் அக்கட்சி உடையும் நிலையில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கம் வேண்டும் என தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் கோரி வருகிறார். கடந்த தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்த இக்கட்சி, தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாத தால் அங்கிருந்து விலகியது. தெலுங்கு தேசம், இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து மூன்றாவது கூட்டணியின் சார்பில் இந்த தேர்தலில் போட்டியிட்டது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி. ஆனால் தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து கொண்டார் சந்திரசேகர ராவ். தங்களது கட்சித் தலைவரின் எதேச் சதிகாரப் போக்கால் அவரது கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். ஏற்கனவே சந்திரச...

ஒரிசாவில் பா.ஜ.க. வேட்பாளர் 9 பேர் டெபாசிட் இழந்தனர்

ஒரிசா மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற கிறிஸ்தவர்களுக்கு எதிரான கலவரத்தை சங்பரிவார் சக்திகள் அரசியல் ஆதாயத்திற்காக முன்னெடுத்தன. இதனைத் தொடர்ந்து நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளத்திற்கு மிகப்பெரும் நெருக்கடி ஏற்பட்டது. சில கட்சிகள் மாநிலத்தில் ஆட்சியைக் கலைத்து விட்டு கவர்னர் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தின. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் ஆளுங்கட்சியிடம் கூடுதல் இடங்களை பாஜக கேட்டது. பிஜு ஜனதா தளம் கூடுதல் இடங்களைத் தர மறுக்கவே பாஜக, பிஜு ஜனதா தளத்துடன் 11 ஆண்டுகள் கொண்டிருந்த அரசியல் உறவை முறித்துக் கொண்டது. அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவையும் விலக்கிக் கொண்டது. ஆயினும் நவீன் பட்நாயக், தேசியவாத காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சியை காப்பாற்றிக் கொண்டார். இதனிடையே மாநிலத்தில் உள்ள 21 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பாஜக தனித்துப் போட்டியிட்டது. பாஜகவுக்காக, பாஜகவில் அடுத்த பிரதமர் வேட்பாளர் என கூறப்பட்ட நரேந்திர மோடி, அத்வானி, ராஜ்நாத்சிங் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்...