இழப்புகள் இன்றி எதிர்காலம் இல்லை!
தேர்தல் தோல்விகளுக்குப் பின் னால் ஒரு சில அபிமானிகள் பழைய பல்லவியைப் பாடுகின்றனர். பேசாமல், வாய்மூடி திமுக தர முன்வந்த ஒரு தொகுதியை ஏற்றுக் கொண்டு போயி ருக்கலாமே... என்று பேசுகிறார்கள். நமது சமுதாயத்தை அடிமைத்தன மாக எடை போடுகிறார்களே... என்ற சொரணையில்தான் 'தன்மான அரசி யல்' என்ற முடிவை எடுத்தோம். முஸ்லிம் லீக் பாணி அடிமை அரசியலை நாமும் செய்ய வேண்டி யிருந்தால் புதிய அரசியல் கட்சியே தேவையில்லை. இரண்டு மத்திய அமைச்சர் பதவி களை இழந்துவிட்டுத்தான் பாமக, புதிய கூட்டணியை அமைத்தது. இன்று இழப்புகளை சந்தித்திருக்கிறது. ஆனால், எதிர்காலத்தை இழக்க வில்லை. அதுபோல் மத்திய அரசை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இடதுசாரிகள், புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள். இன்று சரிபாதி இடங்களை இழந்திருக்கிறார்கள். பாமகவும், இடதுசாரிகளும் பழையதை நினைத்து ஒடுங்கிவிடவில்லை. அதை இப்போதும் சரி என்று கூறி நம்பிக்கை யோடு அடுத்தக் கட்டத்திற்கு நகர் கிறார்கள். இதை முஸ்லிம் சமுதாயம் கவனிக்க வேண்டும். இன்று தனித்து நின்றோம். சமுதாயத்தில் எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறோம். புதிய நம்பிக்கையை ஊட்டியிருக்கிறோம். அந்த வகைய...