சரிகிறது மோடி செல்வாக்கு!

மோடியை பாஜகவின் நட்சத்திர தலைவராக அக்கட்சியினர் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடினர். கட்சி யினர் பாராட்டியது போதாது என்று ஊட கங்கள் கூட மோடி புகழ் பாடின. மோடிக்கு இந்தியா முழுவதும் செல்வாக்கு இருப்பதாக கன்னாபின்னாவென கதை பின்னப்பட் டன. மோடி வருங்காலப் பிரதமர் என்றே அனைத்து ஊடகங் களும் குறிப்பிட்டன. அத்வானியை பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என அறிவித்த பின்னரும் கூட மோடியை முன்னிறுத்திய சங்பரி வார் கும்பல் வெறித்தனமான பிரச்சாரத் தில் ஈடுபட்டது. கொடூர இனப்படு கொலையாளன் மோடியை, தேர்ந்த பொருளாதார மேதை போல வர்ணித்து, சிலாகித்து மகிழ்ந்த சங்கும்பல் மோடிக்கு அகில இந்திய அளவில் செல்வாக்கு பெருகுகிறது என கதை விட்டனர். இறுதியில் எல்லாம் கடைந்தெடுத்த கயமைக் கதைகள் என்பதும், அவர்கள் விட்ட கலர் கலரான ரீலுக்கு யாரும் மயங்கவில்லை என்பதும் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தெளிவானது. நாடெங்கும் படுதோல்வி அடைந்ததோடு மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலும் பலத்த சரிவை சந்தித்தது. 2004ல் பெற்ற ஓட்டு வீதத்தை விட நடைபெற்று முடிந்திருக்கும் தேர்தலில் குறைவாகவே பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலைமை ய...