Posts

Showing posts from June 19, 2009

எகிப்தில் ஒபாமாவின் உரை தமுமுக தலைவரின் கருத்து (பிபிசி தமிழோசை)

டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யவும்

உலக அமைதிக்கு வழி...ஓரிறை கொள்கை ஒன்றே!

Image
இலண்டன் இஸ்லாமிய அழைப்பு பணி மையம் சார்பாக உலக அமைதிக்கு வழி...ஓரிறை கொள்கை ஒன்றே! எனும் தலைப்பில் இஸ்லாமிய மாநாடு பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடப்பெற்றது. மாநாட்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் Dr, M.H. ஜவஹிருல்லாஹ், JAQH அமீர் மெளலவS. கமாலுதீன் மதனி மெளலவி ஹாபிழ் யஹ்யா அஷ்ஷெய்க் M. மன்சூர் நளீமி மெளலவி முஹம்மது இஸ்மாயில் மற்றும் உலமா பெருமக்கள் கலந்துக்கொண்டு, உலக அமைதிக்கு இஸ்லாமிய கொள்கை, இஸ்லாமிய வட்டியில்ல கடன், படைத்தவனை வனங்கு;படைப்பினங்களை வனங்காதே! என்ற தலைப்புகளில் பேசினார்கள். லண்டனின் மாநாட்டிற்கு பலப்பகுதிகளில் இருந்து திரலாக கலந்துக்கொண்டனர்.

யுஜெஎன் வட்ட மேசை அமர்வில் த.மு.மு.க தலைவர்

Image
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம் ஹெச் ஜவாஹிருல்லாஹ் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குக் கொள்வதற்காக கடந்த ஜுன் 7ம் தேதி இரவு லண்டன் வந்தார். லண்டன் ஹூத்ரோ விமான நிலையத்தில் அவரை தைக்கால் ஜாகிர் ஹூசைன், காரைக்கால் டாக்டர் கபீர், லால்பேட்டை இல்யாஸ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜுன் 8 முதல் 10 வரை லண்டன் மைதன்வேல் இஸ்லாமிக் சென்டரில் நடைபெற்ற யுனிவர்சல் ஜஸ்டிஸ் நெட்வர்க் (சர்வதேச நீதி இணையம்) – யுஜெஎன் அமைப்பின் வட்ட மேசை அமர்வில் தமுமுக தலைவர் கலந்துக் கொண்டார். கடந்த ஆண்டு மலேசியாவில் உள்ள பினங்கு நகரத்தில் யுஜெஎன் அமைப்பு தொடங்கப்பட்டது. உலகின் பல்வேறு பகுதிகளில் மனித உரிமைகளுக்காக இயங்கும் முஸ்லிம் அரசு சாரா அமைப்புகளின் ஒரு இணைப்பு அமைப்பாக யுஜெஎன் உருவாக்கப்பட்டது. இதில் தமுமுகவும் இணைந்து செயல்படுகின்றது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உலகில் பல்வேறு நாடுகளில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக இலங்கை வட கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களின் பிரச்னையை தமுமுக தலைவர் விரிவாக எடுத்துரைத்தார். ஐ.நா. உட்பட ச