அண்ணா சமாதியில் புதிய பராசக்தி
அபு ஹுசைன், துபை கேள்வி: பல தொகுதிகளில் வாக்காளர்களுக்கு கோடி கோடியாக பணம் பட்டுவாடா செய்யப்பட உள்ளதாக செய்திகள் வருகின்றவே...? பதில்: நாற்பது தொகுதிகளிலும் பணம் பட்டுவாடா செய்யப்பட உள்ளதாக செய்திகள் வருகின்றன. தேர்தல் ஆணையம் இவ்விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். முகம்மது இப்ராகிம், பரங்கிப்பேட்டை கேள்வி: தேர்தல் கள அனுபவத்தில் ம.ம.க.வினரின் உழைப்பு எப்படி இருக்கிறது? பதில்: நமது தொண்டர்களின் அர்ப்பணிப்பு நமது கண்களை ஈரமாக்குகிறது. தங்கள் வருமானத்தையும், சொந்த வேலைகளையும் கூட பத்து நாட்களுக்கு ஒதுக்கி வைத்துவிட்டு அவர்கள் ஆற்றும் களப்பணி மகத்தானது. கூலிக்கு வேலை செய்யும் பிற கட்சித் தொண்டர்களுக்கு மத்தியில் தியாகத்துடனும், சமுதாய ஆர்வத்துடனும் அவர்கள் கடும் வெயிலில் காட்டும் களப்பணிகள் பிறருக்கு முன்மாதிரியாக இருக்கிறது. இத்தகைய சகோதரர்கள் இருப்பதால் தான், நமது கட்சி யாரையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டதாக இருக்கிறது. எஸ். ரியாஸ், கரூர் கேள்வி: ம.ம.க.வை மட்டும் குறிவைத்து ஜெயினுலாபிதீன் எதிர்ப்பு பிரச்சாரம் நடத்துவதை அவரது தொண்டர்கள் ஏற்கவில்லை போல் தெரிகிறதே...?...