Posts

Showing posts with the label election 2009

Election-2009 வாக்குரிமை மறுக்கப்பட்ட தலித் மக்கள்!

Image
இரும்பு மங்கை என்றும் தலித் மக்களின் பெருந் தலைவி என்றும் மாயாவதி அகில இந்திய அளவிலும் புகழப்பட்டாலும் தலித் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் இன்னும் வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. விடுதலை பெற்ற 60 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்நாட்டின் உழைக்கும் வர்க்கத்தின் உரிமை மறுக்கப்படும் நிலை தொடர்ந்து வருகிறது. தலித் மக்களின் உரிமைகள் பறிக்கும் விவகாரங்கள் குறித்து தலித் உரிமை காக்கும் அமைப்பு 500 முறையீடுகளை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளது. 1)2009 மக்களவைத் தேர்தலில் ஏழை தலித் வாக்களிக்கச் சென்ற போது தடுத்து நிறுத்தியதாக உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த புள்ளிகள். 2) அரசியல்வாதிகள் 3) அரசியல் (கு) தொண்டர்கள் 4) தேர்தல் பணியாளர்கள் 5) காவல்துறை அதிகாரிகள் தலித் மக்களின் உரிமைகளை ஆதிக்க சாதிவெறியினர் ...

அசத்தும் அசதுத்தீன் உவைசி!

Image
ஹைதராபாத் மக்களவைத் தொகுதியை மீண்டும் ஒரு முறை கைப்பற்றியுள்ளது மஜ்லீலிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி. இக்கட்சியின் தலை வரான அசதுத்தீன் உவைசி வெற்றி பெற்றார். ஹைதராபாத்மக்களவைத் தொகுதியை மஜ்லீலிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி கைப்பற்றியிருப்பது எட்டாவது முறை என்பது குறிப்பிடத் தக்கது. அசதுத்தீன் உவைசி இரண்டாவது தடவையாக வெற்றி பெற்றிருக்கிறார். ஆறுதடவை அசதுத்தீனின் தந்தை சலாஹுதீன் உவைசி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 2009 மக்களவைத் தேர்தலில் உவைசி தன்னை எதிர்த்துக் போட்டியிட்ட தெலுங்கு தேச வேட்பாளர் ஜாகித் அலிகானை தோற்கடித்தார். இவர் சியாசத் என்ற உர்து செய்தி ஏட்டின் ஆசிரியராவார். தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவுடன் போட்டியிட்டார். இவரை அசதுத்தீன் உவைசி ஒருலட்சத்து 13 ஆயிரத்து 865 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு ஹைதராபாத் நாடாளுமன்ற தொகுதியில் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாகியது. 50லிருந்து 70 சதவீதம் வரை முஸ்லிம் வாக்காளர்களின் எண் ணிக்கை அதிகரித்துள்ள...

தேவை அதிரடி ஆய்வு!

2009 நாடாளுமன்ற தேர்தல் மதவாத சக்திகளையும் பிராந்திய கட்சிகளையும் வீழ்த்தி முடக்கி மூலையில் வைத்து விட்டது. இது தேசிய அளவிலான தீர்ப்பு. மக்கள் மதவாதத்திற்கு எதிராகு மிக தீர்க்கமாகவே தீர்ப்பளித்துள்ளனர் என்பதை தெளிவுபடுத்துகிறது. எதிர்காலப் பிரதமர்களாக தங்களை வர்ணித்துக் கொண்டவர்களின் நிலை தங்களது தற்போதைய அந்தஸ்தை காப்பாற்றிக் கொண்டால் போதும் என்னும் நிலையில் கொண்டு போய் அவர்களை விட்டிருக்கிறது. 1991க்குப் பிறகு முதன்முறையாக ஒரு தேசிய கட்சி 200க்கு மேற்பட்ட இடங்களைக் கைப்ற்றியது. 2004ல் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2009 நாடாளுமன்ற தேர்தலில் 21 இடங்களைக் கைப்பற்றி குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தியது. இவையெல்லாம் காங்கிரஸ் மீது மக்கள் வைத்த நம்பிக்கையின் விளைவாக இந்த வெற்றி கிடைத்தது என காங்கிரஸ்காரர்கள் கூறினாலும் பாஜகவை புறக்கணிக்க நினைக்கும் இந்திய மக்களின் தற்காலிக மாற்று ஏற்பாடாகவே இது அமைந்திருக்கிறது என்பதை தற்போது வெற்றி பெற்றிருப்பவர்கள் உணர்ந்து கொண்டால் அவர்களுக்கு நல்லது.இந்த நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம்களின் பிரநிதித்துவம் கடந்...

நாடாளுமன்றத்தில் தேவ்பந்த் அறிஞர்கள்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் மவ்லவி ஹிஃப்சுர் ரஹ்மான் மற்றும் மவ்லானா அபுல் கலாம் ஆசாத் போன்ற மார்க்க அறிஞர்கள் அரும்பாடு பட்டார்கள். பின்னர் அவர்களது தியாகத்திற்கு பரிசாக சட்டமன்ற உறுப்பினர் பதவியும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளும் அவர்களைத் தேடிவந்தன. மத்திய அமைச்சரானார் ஆசாத் அது ஆயிற்று அறுபதாண்டு காலம். மார்க்க அறிஞர்கள் அரசியலில் சிறப்பிடம் பெறுவது என்பது இனி நடக்கவே நடக்காதோ என ஏங்கி தவித்த நிலையில் புகழ்பெற்ற தேவ் பந்த் மார்க்க கல்வி சாலையிலிருந்து உருவான இரண்டு மார்க்க அறிஞர்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. அஸ்ஸாமில் மவ்லவி பத்ருதீன் அஜ்மலில் வெற்றி பெற்றார். மவ்லவி அஸ்ராருல் ஹக் காசிமி பிகார் மாநிலம் கிஸன் கஞ்ச் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்றிருக்கிறார். மவ்லவி பத்ருதீன் துப்ரி தொகுதியில் காங்கிரஸின் அன்வர் ஹுஸைனை வென்றார். மவ்லவி அஸ்ரருல் ஹக் காசிமி லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் முக்கிய தலை வரான முன்னாள் மத்திய அமைச்சர் முஹம்மது தஸ்லீமுதீனை தோற்கடித்தார். 81 ஆயிரம் வோட்டு வித்தியாசத்தில் வென்ற அஸ்ராருல் ஹக் காசிமி டெல்லியைத் தளமாகக் கொண்...

Muslims in Parliament of India-2009

Image
இந்திய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள முஸ்லிம் எம்.பிகளின் தொகுப்புபடம் பெரியதாக தெரிவதற்கு படத்தின் மேல் கிளிக் செய்யவும்

அஸாருதீன் வெற்றி சொல்லும் செய்தி!

Image
உத்தரப்பிரதேச மாநிலம் மொரா பாத்தில் போட்டியிட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முஹம்மது அசாருதீன் வெற்றி பெற்றிருக்கிறார். பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரசில் இணைந்த அவர் ஹைதராபாத்திலிருந்து போட்டி யிடுவார் என அரசியல் பார்வையாளர் கள் எதிர்பார்த்தனர். ஆனால் காங்கிரஸ் தலைமை தனக்கு பலவீன மாக உள்ள உத்தரப்பிரதேசத்திற்கு அவரை அழைத்துச் சென்று மொராபாத்தில் போட்டியிட வைத்தது. வேட்பு மனுத் தாக்கல் செய்ததில் இருந்தே கள நிலவரம் அஸாருதீனுக்கு சாதக மாகவே இருந்தது. முஹம்மது அஸாருதீன் கிரிக்கெட் விளையாட்டில் மின்னும் நட்சத்திர மாக இருந்தபோது அவர் விளை யாட்டில் மேலும் பிரபலமாகி ஓய்வு பெற்றபின் அரசியலில் இறங்கி முக்கியத்துவம் பெற்றுவிட்டால் என்ன செய்வது என வயிறெரிந்த சில சக்திகள் அவர் கிரிக்கெட் சூதாட்டத் தில் ஈடுபட்டார் என பழிகள் சுமத்தி அவரை கிரிக்கெட் வாழ்க்கையை விட்டு முழுமையாக விடைபெற விடாமல் மனம் வெதும்பி வெளியேறச் செய்தனர். தான் குற்றமற்றவன் என பின்னர் நிரூபித்தார். வருடங்கள் பல உருண் டோடி விட்டன. அஸாருதீன் மிகவும் உயரத்திற்கு போவார் என எண்ணி அவர் மீது அவதூறுச் சேற்றை வாரி இறைத்தவர்கள...

ராம்விலாஸ் பாஸ்வான்-சாதனை வெற்றியும் வேதனைத் தோல்வியும்!

Image
இந்தியாவின் தலித் பெரும் தலைவரும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் இந்த மக்களவைத் தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான ஹாஜிபூரில் தோல்வியைத் தழுவியிருக்கிறார். 1989ல் இதே தொகுதியில் ராம்விலாஸ் பாஸ்வான் பெற்ற வெற்றி அசாதாரணமானது. ஏறக்குறைய ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாஸ் வான், கின்னஸ் சாதனையாளர் களின் பட்டியலிலும் இடம் பெற்றார். 2009ல் நிகழ்ந்த தேர்தலில் அவரது 'செல்ல' ஹாஜிபூர் தொகுதியில் 37 ஆயிரம் வாக்கு கள் வித்தியாசத் தில் தோல்வியைத் தழுவியுள்ளார். வீட்டுக்கு வீடு பாஸ்வானின் புகைப்படம் தொங்கும் என்றும், ஹாஜிபூரின் மாணவர்கள், இளைஞர்கள் பாஸ்வான் படம் போட்ட பனியனை அணிந்து கொண்டு செல்வது வழக்கம் என்றும் பாஸ்வான் செல்வாக்கை சிலாகித்துப் பேசுவோர் உண்டு. அத்தனை செல்வாக்கு மிகுந்த பாஸ்வான் தற்போது தோல்வியைத் தழுவியிருக்கிறார். பாஸ்வானின் தோல்வி குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ''இது ஒரு விளையாட்டு போன்றது. அரசியலில் வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வரும்'' என்றார். தான் தோல்வி அடைந்தாலும் ஹாஜிபூர் மக்களுக் காக உழைப்பதை நிறுத்தப் ப...

அரசு அதிகாரிகளா? திமுக பணியாளர்களா?

வாக்குச் சாவடியில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் பெரும்பாலும் ஆளும் கட்சிக்கே சாதகமாக நடந்து கொள்கின்றனர். குறிப்பாக திமுகவுக்கு சாதகமாகவே அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். அதனாலேயே திமுக ஆட்சிக்கு வரும்போதெல் லாம் அரசு ஊழியர்களின் சம்பளமும் மற்ற படிகளும் உயர்த்தப்படுகின்றன. அதற்கு விசுவாசமாகவே இவர்கள் தேர்தல் நேரத்தில் நடந்து கொள்கின்றனர். மதுரையில் ஓட்டு போடு வதற்காக சுந்தரராஜபுரம் வாக்குச் சாவடிக்கு மு.க.அழகிரி வந்தபோது அங்கு பணியில் இருந்த அரசு அதிகாரிகள் அனைவரும் எழுந்து நின்று கைக்கூப்பி வணக்கம் தெரிவித்துள்ளனர். பின்னர் அவர் வாக்களித்துவிட்டு வெளியே செல்லும்வரை யாரும் உட் காரவே இல்லையாம். இதைவிட வேறு என்ன சொல்ல முடியும் இவர்களின் நடுநிலை(!)த் தன்மைக்கு?  மேலும் திருமங்கலம் இடைத் தேர்தலில் இவர்கள் ஆற்றிய சேவையும் அனை வரும் அறிந்ததே! மாநிலத் தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா போன்றவர்கள் நடுநிலையாக இருந்தாலும் இதுபோன்ற அலுவலர் களை வைத்துக் கொண்டு எப்படி தேர்தலை நியாயமாக நடத்த முடியும். அதிலும் இதற்கு முன் இருந்த கோபால் சாமி பி.ஜே.பி.க்கு நெருக்கமானவர் என்றும் கூறப்பட்டது. இப்போது வந்துள்ள...

இழப்புகள் இன்றி எதிர்காலம் இல்லை!

தேர்தல் தோல்விகளுக்குப் பின் னால் ஒரு சில அபிமானிகள் பழைய பல்லவியைப் பாடுகின்றனர். பேசாமல், வாய்மூடி திமுக தர முன்வந்த ஒரு தொகுதியை ஏற்றுக் கொண்டு போயி ருக்கலாமே... என்று பேசுகிறார்கள். நமது சமுதாயத்தை அடிமைத்தன மாக எடை போடுகிறார்களே... என்ற சொரணையில்தான் 'தன்மான அரசி யல்' என்ற முடிவை எடுத்தோம். முஸ்லிம் லீக் பாணி அடிமை அரசியலை நாமும் செய்ய வேண்டி யிருந்தால் புதிய அரசியல் கட்சியே தேவையில்லை. இரண்டு மத்திய அமைச்சர் பதவி களை இழந்துவிட்டுத்தான் பாமக, புதிய கூட்டணியை அமைத்தது. இன்று இழப்புகளை சந்தித்திருக்கிறது. ஆனால், எதிர்காலத்தை இழக்க வில்லை. அதுபோல் மத்திய அரசை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இடதுசாரிகள், புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள். இன்று சரிபாதி இடங்களை இழந்திருக்கிறார்கள். பாமகவும், இடதுசாரிகளும் பழையதை நினைத்து ஒடுங்கிவிடவில்லை. அதை இப்போதும் சரி என்று கூறி நம்பிக்கை யோடு அடுத்தக் கட்டத்திற்கு நகர் கிறார்கள். இதை முஸ்லிம் சமுதாயம் கவனிக்க வேண்டும். இன்று தனித்து நின்றோம். சமுதாயத்தில் எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறோம். புதிய நம்பிக்கையை ஊட்டியிருக்கிறோம். அந்த வகைய...

வெற்றியை இழந்திருக்கிறோம் களத்தை இழக்கவில்லை!

Image
கண்மணிகளே... அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) தேர்தல் பரபரப்புகள் ஓய்ந்து, புதிய ஆட்சியின் மந்திரிசபை குறித்து பரபரப்புகள் நிலவும் நேரத்தில் இக்கடிதம் வரைகிறேன். எல்லோரும் வெற்றி உலாவரும் நேரத்தில் உங்கள் முகத்தில் ஒருவித சோர்வு நிலவக்கூடும். வெற்றியையும் லி தோல்வியையும் கருத்தில் கொண்டுதான் நாம் தேர்தல் களத்துக்கு வந்தோம். 'தோல்வி தான் வெற்றிக்கான படிக்கல்' என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாம் தனித்து நின்று தேர்தலை சந்தித்ததே மிகப்பெரிய வெற்றியாகும். பணபலமும், அதிகார பலமுமின்றி இருபெரும் கூட்டணிகளை சமாளித்திருக் கிறோம். அதிகார முறைகேடுகளை எதிர்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு தொகுதியிலும் ஆளும் கட்சியின் சார்பில் பல கோடிகள் வாரி இறைக்கப்பட்டது. ஜெயலலிதா மீது உள்ள கோபத்தில் அரசு ஊழியர்களில் சிலரும் வாக்குப் பதிவின் போது, ஆளுங் கட்சியின் அராஜகங்களுக்கு துணை போயினர் அல்லது கண்டும் காணாமல் இருந்தனர். நமக்கு விழுந்த வாக்குகளை ஆளும் தரப்புக்கு மாற்றும் வகையில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் திட்டமிட்டு தில்லுமுல்லுகள் செய்யப்பட்டதால், 67 ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகளை மட்டுமே நாம் பெற்றதுபோல்...

தமிழக தேர்தல் தில்லுமுல்லுகள் குறித்து முழுமையான விசாரணை தேவை

Image
மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. இந்த முடிவை எதிர்பார்த்துதான் நாம் போட்டியிட்டோம். இருபெரும் கூட்டணிகளையும், அவர்களது பணபலத்தையும் எதிர்த்து வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல என்பது நமக்கு தெரியும். ஆனால், ஒவ்வொரு தொகுதியிலும் 75 ஆயிரம் தொடங்கி 1 லட்சம் வரை வாக்குகளைப் பெறுவோம் என எதிர்பார்த்தோம். ஆனால் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக குறைவான வாக்குகளை நாம் பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை நம்மால் நம்ப முடியவில்லை, ஏற்க முடியவில்லை. உதாரணத்திற்கு, மத்திய சென்னை தொகுதியில் துறைமுகம் பகுதியிலும், பொள்ளாச்சி தொகுதியில் குனியமுத்தூர் பகுதியிலும், ராமநாதபுரம் தொகுதியில் மண்டபத்திலும், மயிலாடுதுறை தொகுதியில் கும்பகோணத்திலும் ஒரு வாக்குச் சாவடியில் குறைந்தது ஆயிரம் வாக்காளர்கள் ம.ம.க. வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர். ஆனால் மிகமிகக் குறைவான வாக்குகளே கணக்கில் வருகிறது. 'வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி நடந்துள்ளது' என்ற ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு உண்மையானதுதான் என்பது இதன்மூலம் தெரிய வருகிறது. (இதுகுறித்து தினமணி...

இனிவரும் தேர்தல்களில் ஓட்டுச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும்!மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் தமுமுகவின் தலைவருமான எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வெளியிடும் அறிக்கை: ஒடுக்கப்பட்ட மக்களும் அரசியல் உரிமை பெறவேண்டும், அடித்தட்டு மக்களுக்கும் அதிகாரப் பிரதிநிதித்துவம் வேண்டும், அரசியலில் லஞ்சத்தையும், ஊழலையும், மதவாதத்தையும் வேறுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த மகத்தான லட்சியங்களை முன்வைத்து மனிதநேய மக்கள் கட்சி மக்களவைத் தேர்தலில் களமிறங்கியது. மத்திய சென்னை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்டது. இத்தொகுதிகளில் ம.ம.க.வுக்கு வாக்களித்த மக்களுக்கு இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கட்சி தொடங்கி மூன்று மாதங்களில் நான்கு தொகுதிகளில் மிகப்பெரிய சக்திகளை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி களம் கண்டது. தேர்தலில் வெற்றி கிட்டாவிட்டாலும் மனிதநேய மக்கள் கட்சியின் உயர்ந்த லட்சியங்கள் எதிர்காலத்தில் வெல்ல இடையறாது பாடுபடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தேர்தல் முடிவுகள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர முறை மீது பலமான சந்தேகங்களை எழுப்பியுள்ள...

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகளின் எண்ணிக்கை

செ.ஹைதர் அலி (மத்திய சென்னை) 13,160 பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (மயிலாடுதுறை) 19, 816 எஸ். சலிமுல்லாஹ் கான் (இராமநாதபுரம்) 21, 439 இ. உமர் (பொள்ளாச்சி) 13, 933

காயமடைந்த ம.ம.க தொண்டர்கள் சிகிச்கைக்காக அப்போலோவில் அனுமதி

இன்று (13-05-09) நடைபெற்ற வாக்குப்பதிவின் போது திமுக குண்டர்களின் கொலைவெறித் தாக்குதலில் காயமடைந்தோர்களை சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். சிகிச்சை பெறுபவர்களை தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி ம.ம.க பொதுச் செயலாளர் அப்துல் சமது ஆகியோர் உடல்நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தனர். சிகிச்சை பெறுபவர்களை ம.ம.க பொருளாளர் ஹாருன் ரசீத் உடன் இருந்து கவனித்து வருகிறார். சிகிச்சை பெற்று வருபவர்களை ஐ.என்.டி.ஜெ தலைவர் பாக்கர், அதிமுக திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் பதர் சையது, முஸ்லிம் தொண்டு இயக்கத்pன் பொதுச் செயலாளர் முகம்மது ஹனிபா ஆகியோர் உடல்நலம் விசாரித்தனர்.

மறுஓட்டுப் பதிவு நடத்த வேண்டும் ம.ம.க கோரிக்கை

Image
மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி பகுதியில் இன்று காலை சுமார் 11.00 மணியளவில் திருவல்லிக்கேணியில் திமுக பகுதி செயலாளரும் மற்றும் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான காமராஜ், திமுகச் சேர்ந்த சேரன் ஆகியோர் தலைமையில் திமுக குண்டர்கள் 200க்கு மேற்பட்டோர் திருவல்லிக்கேணி என்.கே.டி. பள்ளி வாக்குச்சாவடி எண் 97, 98, 99, 100, 102, 104, 110 உட்பட்ட பத்து வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி கள்ள ஓட்டு போடுவதாக தகவல் வந்ததையடுத்து ம.ம.க. வேட்பாளர் ஹைதர் அலி அவர்கள் அங்கு சென்றுள்ளார். அப்போது திமுக குண்டர்கள் வீச்சரிவாள், கத்தி, கடப்பாரை, உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மனிதநேய மக்கள் கட்சியின் பிரமுகர்கள் பயணம் செய்த கார்களை (Safari Car (Ash Colour) No.PY01 AA 1977 & Bolero Car (White Colour) No. TN 21 AX 9001) துவம்சம் செய்துவிட்டு, கார்களில் இருந்த திரு. ஜாகிர் உசேன், ஹசன், மீரான் மொய்தீன், காஜா, பாரூக், சலாவுதீன், ஹைதர் அலி, வசீம், ஜாகிர் உசேன் மற்றும் மூஸா உள்ளிட்ட நபர்களை கொலை செய்யும் நோக்கத்துடன் கொலை வெறித் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது எமது கட்சி வ...

தமுமுக மற்றும் மமக தலைமை நிர்வாகிகள் ஓட்டளித்த காட்சிகள்

Image
வாக்குச் சாவடிகளை சோதனை செய்யும் தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளரும் தமுமுகவின் பொதுச் செயலாளருமான செ. ஹைதர் அலி முத்தால்பேட்டை மேல்நிலைப் பள்ளியில் ஓட்டளித்தார். இராமநாதபுரம் ம.ம.க வேட்பாளர் சலிமுல்லாஹ்கான் இராமநாதபுரம் எம்.எஸ்.கே உயர்நிலைப் பள்ளியில் வாக்களித்த காட்சி

மயிலாடுதுறையில் பேராசிரியர் இறுதிநாள் பிரச்சார காட்சிகள்

Image
மயிலாடுதுறையில் பேராசிரியர் இறுதிநாள் (11.5.2009 பிரச்சார காட்சிகள்

பொள்ளாச்சியில் உமர் தீவிர வாக்கு சேகரிப்பு

Image
மனிதநேய மக்கள் கட்சியின் பொள்ளாச்சி வேட்பாளரும் தமுமுகவின் மாநிலச் செயலாளருமான இ.உமர் இறுதிகட்ட வாக்குச் சேகரிப்பு

மத்திய சென்னையில் பொதுச் செயலாளர் சூறாவளி பிரச்சாரம்

Image
மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளரும் தமுமுகவின் பொதுச் செயலாருமான செ.ஹைதர் அலி வாட்டி எடுக்கும் கத்தரி வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரம் செய்தார்

எந்தவித எதிர்பார்ப்புமின்றி 14 ஆண்டுகளாக மக்கள் சேவை : ம .நே. ம. க., வேட்பாளர் சலிமுல்லாகான் பேட்டி

Image
எந்த எதிர்பார்ப்புமின்றி மனிதநேய மக்கள் கட்சி 14 ஆண்டுகளாக மக்கள் சேவை செய்து வருவதாக அதன் ராமநாதபுரம்வேட்பாளர் சலிமுல்லாகான் தெரிவித்தார். "தினமலர்' நிருபருக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி: ராமநாதபுரம் தொகுதியில் அனைத்து சமுதாய மக்களும் எங்கள் கட்சியினரை அன்புடன் வரவேற்று, தங்களது ஓட்டு மனித நேய மக்கள் கட்சிக்கே என கூறியுள்ளனர். எங்கள் கட்சி தொண்டர்கள் தன்னலம் பாராமலும், பசியறியாமலும் ஆற்றிய பணிகளால் இன்று தொகுதி முழுவதும் மக்கள் மனித நேய மக்கள் கட்சி பற்றி பேசி வருவதை காணமுடிகிறது.எனது வெற்றி உறுதி என்பதால் மற்ற கட்சியினரிடம் எங்களை பற்றி தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர். என் மேல் தவறான குற்றச்சாட்டுகளை துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு முகவரியில்லாமல் வினியோகிக்கின்றனர். குற்றச்சாட்டு கூறுபவர்கள் உண்மையானவர்களாக இருந்தால் என்னுடன் நேருக்கு நேர் பொது மேடையில் விவாதிக்க தயாரா? எனது பொது வாழ்க்கையில் நான் யாருக்கும் எப்போதும் கெடுதல் செய்யவில்லை . என் மீது கூறப்பட்ட குற்றசாட்டை நிருபித்தால், நான் வெற்றி பெற்றால் எனது பதவியை ராஜினாமா செய்ய தயார். மனித நேய மக்கள் கட்சி கடந்த 14 ஆ...