அஸாருதீன் வெற்றி சொல்லும் செய்தி!

உத்தரப்பிரதேச மாநிலம் மொரா பாத்தில் போட்டியிட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முஹம்மது அசாருதீன் வெற்றி பெற்றிருக்கிறார். பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரசில் இணைந்த அவர் ஹைதராபாத்திலிருந்து போட்டி யிடுவார் என அரசியல் பார்வையாளர் கள் எதிர்பார்த்தனர். ஆனால் காங்கிரஸ் தலைமை தனக்கு பலவீன மாக உள்ள உத்தரப்பிரதேசத்திற்கு அவரை அழைத்துச் சென்று மொராபாத்தில் போட்டியிட வைத்தது. வேட்பு மனுத் தாக்கல் செய்ததில் இருந்தே கள நிலவரம் அஸாருதீனுக்கு சாதக மாகவே இருந்தது. முஹம்மது அஸாருதீன் கிரிக்கெட் விளையாட்டில் மின்னும் நட்சத்திர மாக இருந்தபோது அவர் விளை யாட்டில் மேலும் பிரபலமாகி ஓய்வு பெற்றபின் அரசியலில் இறங்கி முக்கியத்துவம் பெற்றுவிட்டால் என்ன செய்வது என வயிறெரிந்த சில சக்திகள் அவர் கிரிக்கெட் சூதாட்டத் தில் ஈடுபட்டார் என பழிகள் சுமத்தி அவரை கிரிக்கெட் வாழ்க்கையை விட்டு முழுமையாக விடைபெற விடாமல் மனம் வெதும்பி வெளியேறச் செய்தனர். தான் குற்றமற்றவன் என பின்னர் நிரூபித்தார். வருடங்கள் பல உருண் டோடி விட்டன. அஸாருதீன் மிகவும் உயரத்திற்கு போவார் என எண்ணி அவர் மீது அவதூறுச் சேற்றை வாரி இறைத்தவர்கள...