ராஜபக்சே போர்க் குற்றவாளி! - தமுமுக தலைவர் குற்றச்சாட்டு

இலங்கையில் Genocide எனப்படும் இனப்படுகொலை செய்யும் ராஜபக்சே ஒரு போர்க் குற்றவாளியே. தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். அணிசேரா அமைப்பில் உறுதியாக செயல்பட்டு வந்த இந்தியா, தென் ஆப்பிரிக்காவில் இனவெறி அரசுக்கு எதிராக பெரும்பான்மை கறுப்பினத்தவர்கள் ஆட்சி அமைக்க உதவியது. ஆனால் தற்போது அத்தகைய வலிமையை இந்தியா இழந்து நிற்கிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ''இலங்கை அரசுக்கு ஆதரவளிக்கவில்லை'' என்றார். அடுத்த வாரமே, தாம்பரம் பகுதியில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளிக்கும் புகைப்படங்கள் வெளியாயின. மகிந்த ராஜபக்சே மயிலாடுறை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் மணிசங்கர் அய்யரின் நெருங்கிய நண்பர். அவரது இல்லத் திருமணத்திற்கு ராஜபக்சே வந்து சென்றார் என்பது ஊரறிந்த உண்மை. இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகப் பேசிவந்த ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் மாற்றிப் பேசுகிறார். தேர்தல் தேதி அறிவித்து, வேட்பாளர் பட்டியல் எல்லாம் வெளியான பிறகு தமிழக முதல்வர் கருணாநிதி 'பந்த்' அறிவிக்கிறார...