15வது மக்களவைத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி பீடம் ஏறியிருக்கிறது. பா.ஜ.க.வுக்கும் காங்கிரசுக்கும் கொள்கைகளில் சிறிய அளவு வித்தியாசம்தான் இருந்தாலும், பாஜகவுக்கு காங்கிரசு கட்சி பரவாயில்லை என்ற அளவில் சிலர் நிம்மதி அடையலாம். எனினும் லாலுபிரசாத் யாதவ், முலாயம்சிங் யாதவ், இடதுசாரிகள், தெலுங்குதேசம் என மூன்றாவது, நான்காவது அணிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளைக் கொண்ட ஒரு புதிய அணி ஆட்சியமைத்திருந்தால் அது ஒடுக்கப் பட்ட, நலிந்த மக்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். இது நடைபெறாவிட்டாலும், பாசிச சக்திகள் முடக்கப்பட்டது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இன்றைய நிலையில் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையிலான ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சி பீஹாரில் 12 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியை சந்தித்திருக்கிறது. 1989ல் ராம்விலாஸ் பாஸ்வான் தனது சொந்தத் தொகுதியான ஹாஜிபூரில் நான்கரை லட்சத்துக் கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி ஏழு தொகுதிகளில் போட்டியிட்டு அன