Posts

Showing posts with the label தலையங்கம்

சொன்னதை செய்யுமா காங்கிரஸ்?

சமூக, பொருளாதார தளங்களில் இந்திய முஸ்லிம்களின் பிற்பட்டத் தன்மையை ஆய்வு செய்வதற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கடந்த ஆட்சிக் காலத்தில் நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப் பட்டது. அது தனது பரிந்துரைகளையும் சமர்பித்தது. நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிக்கப் பட்டப் பிறகும், சச்சார்க்குழு பரிந்துரைகளை நடைமுறைப் படுத்த ஐ.மு.கூட்டணி அரசு உரிய முயற்சிகளை எடுக்கவில்லை. சச்சார் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற டெல்லியில் த.மு.மு.க. மாபெரும் பேரணியையும் நடத்தியது. மத்திய அரசிடம் பல்வேறு வழிகளில் மன்றாடிப் பார்த்தும், சச்சார் குழு பரிந்துரைகளை நிறைவேற்றுவதற் கான அறிகுறி ஆட்சியின் அந்திமகாலம் வரை தென்படவில்லை. மறுபடியும், மத்தியில் பெரும்பான்மை ஆதரவோடு ஆட்சியைப் பிடித்திருக் கிறது காங்கிரஸ் கட்சி. சிறுபான்மை மக்களின் ஒட்டு மொத்த ஓட்டுக்களை பெற்றே அசுர பலத்தை பெற்றிருக்கிறது. இப்போதாவது காங்கிரஸ் சிறுபான்மை மக்களுக்கு தந்த வாக்குறுதிகளை நிறை வேற்ற வேண்டும். சிறுபான்மை முஸ்­ம் களின் கல்வி மற்றும் பொருளாதார நிலைகளை பற்றி ஆராய்ந்து அறிக்கை தந்த நீதிபதி சச்சார் கமிட்டியின் பர...

தேவை அதிரடி ஆய்வு!

2009 நாடாளுமன்ற தேர்தல் மதவாத சக்திகளையும் பிராந்திய கட்சிகளையும் வீழ்த்தி முடக்கி மூலையில் வைத்து விட்டது. இது தேசிய அளவிலான தீர்ப்பு. மக்கள் மதவாதத்திற்கு எதிராகு மிக தீர்க்கமாகவே தீர்ப்பளித்துள்ளனர் என்பதை தெளிவுபடுத்துகிறது. எதிர்காலப் பிரதமர்களாக தங்களை வர்ணித்துக் கொண்டவர்களின் நிலை தங்களது தற்போதைய அந்தஸ்தை காப்பாற்றிக் கொண்டால் போதும் என்னும் நிலையில் கொண்டு போய் அவர்களை விட்டிருக்கிறது. 1991க்குப் பிறகு முதன்முறையாக ஒரு தேசிய கட்சி 200க்கு மேற்பட்ட இடங்களைக் கைப்ற்றியது. 2004ல் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஒன்பது இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2009 நாடாளுமன்ற தேர்தலில் 21 இடங்களைக் கைப்பற்றி குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தியது. இவையெல்லாம் காங்கிரஸ் மீது மக்கள் வைத்த நம்பிக்கையின் விளைவாக இந்த வெற்றி கிடைத்தது என காங்கிரஸ்காரர்கள் கூறினாலும் பாஜகவை புறக்கணிக்க நினைக்கும் இந்திய மக்களின் தற்காலிக மாற்று ஏற்பாடாகவே இது அமைந்திருக்கிறது என்பதை தற்போது வெற்றி பெற்றிருப்பவர்கள் உணர்ந்து கொண்டால் அவர்களுக்கு நல்லது.இந்த நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம்களின் பிரநிதித்துவம் கடந்...

வெற்றியின் படிக்கட்டு-மக்கள் உரிமை தலையங்கம்

15வது மக்களவைத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி பீடம் ஏறியிருக்கிறது. பா.ஜ.க.வுக்கும் காங்கிரசுக்கும் கொள்கைகளில் சிறிய அளவு வித்தியாசம்தான் இருந்தாலும், பாஜகவுக்கு காங்கிரசு கட்சி பரவாயில்லை என்ற அளவில் சிலர் நிம்மதி அடையலாம். எனினும் லாலுபிரசாத் யாதவ், முலாயம்சிங் யாதவ், இடதுசாரிகள், தெலுங்குதேசம் என மூன்றாவது, நான்காவது அணிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளைக் கொண்ட ஒரு புதிய அணி ஆட்சியமைத்திருந்தால் அது ஒடுக்கப் பட்ட, நலிந்த மக்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். இது நடைபெறாவிட்டாலும், பாசிச சக்திகள் முடக்கப்பட்டது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இன்றைய நிலையில் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையிலான ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சி பீஹாரில் 12 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியை சந்தித்திருக்கிறது. 1989ல் ராம்விலாஸ் பாஸ்வான் தனது சொந்தத் தொகுதியான ஹாஜிபூரில் நான்கரை லட்சத்துக் கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி ஏழு தொகுதிகளில் போட்டியிட்டு அன...