Posts

Showing posts with the label மயிலாடுதுறை

மயிலாடுதுறையில்: மணிசங்கர் அய்யர் தோற்றது ஏன்?

Image
மயிலாடுதுறையில் மணிசங்கர் அய்யரைக் குறிவைத்து பிரச்சார யுத் தத்தை ம.ம.க. நடத்தியது. 15 ஆண்டு களாக எம்.பி.யாக இருந்த அய்யர் மயிலாடு துறையை துபாய் ஆக்குவேன் என்று சொல்லி அதனை பாலைவனமாக மாற்றியது, விவசாயிகள் நலனை புறக் கணித்தது போன்றவற்றை மையமாக வைத்து பிரச்சாரம் செய்யப்பட்டது. வெற்றி பெற்றால் மயிலாடுதுறைக்கு என்ன செய்வோம் என்று ம.ம.க. வேட்பாளர் வெளியிட்ட தொகுதி தேர்தல் அறிக்கை மக்களை வெகுவாகக் கவர்ந்தது. அய்யருக்கு எதிராக சரியான மாற்று பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்தான் என தொகுதி முழுக்க கருத்து பரவியது.  மயிலாடுதுறையில் மணிசங்கர் அய்யர் தோற்ற தற்கு மனிதநேய மக்கள் கட்சியின் பிரச்சாரம்தான் காரணம் என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சுதர்சன நாச்சியப்பன் எம்.பி. தொலைக்காட்சி ஒன்றில் கூறியது குறிப்பிடத்தக்கது. இதைத்தான் மே 17 அன்று ஹிந்து நாளிதழும், மே 18 அன்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழும் குறிப்பிட்டிருக்கிறது.

மயிலாடுதுறையில் பேராசிரியர் இறுதிநாள் பிரச்சார காட்சிகள்

Image
மயிலாடுதுறையில் பேராசிரியர் இறுதிநாள் (11.5.2009 பிரச்சார காட்சிகள்

அவதூறு பரப்புவோர் இறைவனை அஞ்சிக் கொள்ளட்டும்-தமுமுக தலைவர்

தமுமுக தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளருமான பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்களின் அறிக்கை: நான் மயிலாடுதுறை தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறேன். வாக்கு சேகரிப்பதற்காகவும், ஆதரவு கோரியும் தொகுதியில் உள்ள அனைத்து முக்கியப் பிரமுகர்களையும், மதத் தலைவர்களையும் சந்தித்து வருகிறேன். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், கிறித்தவ பாதிரியார்கள் என பலரையும் சந்தித்தது போலத்தான் திருவாடுதுறை ஆதினம் அவர்களையும் சந்தித்தேன். திருக்குர்ஆன் மொழியாக்கப் பிரதி ஒன்றை பரிசளித்துவிட்டு அவரிடம் ஆதரவு கோரினேன். அவரும் நான் தேர்தலில் வெற்றி பெற தனது ஆதரவை தெரிவித்தார்.நான் அவரது காலில் விழவும் இல்லை. கையெடுத்து வணக்கம் செய்யவும் இல்லை. இச்செய்தியைத் ஆதினத்திடம் ஆசி பெற்றதாக அவர்களது பாணியில் தினமணி பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்தச் செய்தியை வைத்துக் கொண்டு அவதூறு பரப்புவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட சிலர் இச்செய்தியைத் திரித்து ஆதினத்தை நான் வணங்கியது போலவும், அருளாசி பெற்றது போலவும் சித்தரித்து அவதூறுச் செய்திகளைப் பரப்பி வருகின்றனர். நான் என்னுடைய மாணவ...

ராஜபக்சே போர்க் குற்றவாளி! - தமுமுக தலைவர் குற்றச்சாட்டு

Image
இலங்கையில் Genocide எனப்படும் இனப்படுகொலை செய்யும் ராஜபக்சே ஒரு போர்க் குற்றவாளியே. தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். அணிசேரா அமைப்பில் உறுதியாக செயல்பட்டு வந்த இந்தியா, தென் ஆப்பிரிக்காவில் இனவெறி அரசுக்கு எதிராக பெரும்பான்மை கறுப்பினத்தவர்கள் ஆட்சி அமைக்க உதவியது. ஆனால் தற்போது அத்தகைய வலிமையை இந்தியா இழந்து நிற்கிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ''இலங்கை அரசுக்கு ஆதரவளிக்கவில்லை'' என்றார். அடுத்த வாரமே, தாம்பரம் பகுதியில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளிக்கும் புகைப்படங்கள் வெளியாயின. மகிந்த ராஜபக்சே மயிலாடுறை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் மணிசங்கர் அய்யரின் நெருங்கிய நண்பர். அவரது இல்லத் திருமணத்திற்கு ராஜபக்சே வந்து சென்றார் என்பது ஊரறிந்த உண்மை. இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகப் பேசிவந்த ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் மாற்றிப் பேசுகிறார். தேர்தல் தேதி அறிவித்து, வேட்பாளர் பட்டியல் எல்லாம் வெளியான பிறகு தமிழக முதல்வர் கருணாநிதி 'பந்த்' அறிவிக்கிறார...

மயிலாடுதுறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த த.மு.மு.க சகோதரர்கள் விபத்தில் சிக்கினர். 2 பேருக்கு காயம்!

மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு ஆதரவாக ம.ம.க., த.மு.மு.க., தொண்டர்கள் உற்சாகத்தோடு களப்பணி ஆற்றி வருகின்றனர். இன்று நோட்டீஸ் வினியோகம் செய்வதற்காக துண்டு பிரசுரங்களோடு 4 மணி அளவில் ம.ம.க சகோதரர்கள் ஆட்டோவில் கும்பகோணத்திலிருந்து சோழபுரம் சென்று கொண்டிருந்தனர். மாணிக்க நாச்சியார் கோவில் என்ற இடமருகே சென்று கொண்டிருதபோது எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதனால் ஆட்டோவில் இருந்த சகோதரர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சோழபுரத்தை சேர்ந்த தஞ்சை மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சகோ. யாசர் என்பவரின் கால் நரம்பு துண்டாகி பெரும் காயம் ஏற்பட்டது. சோழபுரம் கிளை த.மு.மு.க செயலாளர் பக்ருதீனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தமுமுகவினர் உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றர். சகோ. யாசர் ஏற்கெனவே ஒரு கால் ஊனமானவர் அவருக்கு தற்போது மற்றொரு காலிலும் அடிபட்டதால் 5 மணிநேரம் ஆப்ரேசன் செய்ய வேண்டியுள்ளது என மருத்துவர்கள் கூறி விட்டனர். இன்று இரவு ஆப்ரேஷன் நடக்க உள்ளது. காயமடைந்த சகோதரர்களை ம.ம...