Posts

Showing posts from June 2, 2009

ஊடகங்களை வெல்லுவோம் வாருங்கள்!

இன்று இன்பர்மேஷன் டெக்னாலஜி என்று சொல்லப்படக்கூடிய ஐ.டி துறைக்கு நிகராக வருமானத்தை அளிக்கக் கூடிய துறையாக மீடியா துறை இருந்து வருகிறது. ஆனால் இன்றைய அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர் உலகளவிலும் ஐ.டி துறை பின்ன டைவு அடைந்திருப்பதையும், பிரபல மான ஐ.டி நிறுவனங்களே தங்களின் ஊழியர்களை அன்றாடம் வெளியே அனுப்பி வருகிறது. ஆனால் அதற்கு பகரமாக ஊடகத்துறையின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றது. இந்த ஊடகத்துறையின் தொடர்பாக முதலில் என்னென்ன கல்விகள் தமிழகத்தில் இருந்து வருகின்றது என்று பார்க்கலாம். விஷுவல் கம்யூனிகேசன், ஜெர்னலிசம், எலக்ட்ரானிக்ஸ் மீடியா, மாஸ் மீடியா அண்ட் கம்யூனிகேசன்ஸ் ஆகிய படிப்புகளை தமிழ கத்தில் பல்வேறு பல் கலைக் கழகங்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் பயிற்று விக்கப்பட்டு வருகின்றன. விஷுவல் கம்யூனி கேஷன்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மீடியா ஆகிய இரண்டு படிப்பு களும் பி.எஸ்.சி., மற்றும் எம்.எஸ்.சி படிப்புகளாக வழங்கப்பட்டு வருகின்றன. பி.எஸ்.சி படிப்பதற்கு பிளஸ் டூவில் எந்த குருப் படித்தவர்களும் இதில் சேரலாம். அது போலவே இளநிலை பட்டம் முடித்தவர்கள் யார் வேண்டுமானாலு...

சொன்னதை செய்யுமா காங்கிரஸ்?

சமூக, பொருளாதார தளங்களில் இந்திய முஸ்லிம்களின் பிற்பட்டத் தன்மையை ஆய்வு செய்வதற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கடந்த ஆட்சிக் காலத்தில் நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப் பட்டது. அது தனது பரிந்துரைகளையும் சமர்பித்தது. நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிக்கப் பட்டப் பிறகும், சச்சார்க்குழு பரிந்துரைகளை நடைமுறைப் படுத்த ஐ.மு.கூட்டணி அரசு உரிய முயற்சிகளை எடுக்கவில்லை. சச்சார் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற டெல்லியில் த.மு.மு.க. மாபெரும் பேரணியையும் நடத்தியது. மத்திய அரசிடம் பல்வேறு வழிகளில் மன்றாடிப் பார்த்தும், சச்சார் குழு பரிந்துரைகளை நிறைவேற்றுவதற் கான அறிகுறி ஆட்சியின் அந்திமகாலம் வரை தென்படவில்லை. மறுபடியும், மத்தியில் பெரும்பான்மை ஆதரவோடு ஆட்சியைப் பிடித்திருக் கிறது காங்கிரஸ் கட்சி. சிறுபான்மை மக்களின் ஒட்டு மொத்த ஓட்டுக்களை பெற்றே அசுர பலத்தை பெற்றிருக்கிறது. இப்போதாவது காங்கிரஸ் சிறுபான்மை மக்களுக்கு தந்த வாக்குறுதிகளை நிறை வேற்ற வேண்டும். சிறுபான்மை முஸ்­ம் களின் கல்வி மற்றும் பொருளாதார நிலைகளை பற்றி ஆராய்ந்து அறிக்கை தந்த நீதிபதி சச்சார் கமிட்டியின் பர...