தமிழக தேர்தல் தில்லுமுல்லுகள் குறித்து முழுமையான விசாரணை தேவை
மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. இந்த முடிவை எதிர்பார்த்துதான் நாம் போட்டியிட்டோம். இருபெரும் கூட்டணிகளையும், அவர்களது பணபலத்தையும் எதிர்த்து வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல என்பது நமக்கு தெரியும். ஆனால், ஒவ்வொரு தொகுதியிலும் 75 ஆயிரம் தொடங்கி 1 லட்சம் வரை வாக்குகளைப் பெறுவோம் என எதிர்பார்த்தோம். ஆனால் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக குறைவான வாக்குகளை நாம் பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை நம்மால் நம்ப முடியவில்லை, ஏற்க முடியவில்லை. உதாரணத்திற்கு, மத்திய சென்னை தொகுதியில் துறைமுகம் பகுதியிலும், பொள்ளாச்சி தொகுதியில் குனியமுத்தூர் பகுதியிலும், ராமநாதபுரம் தொகுதியில் மண்டபத்திலும், மயிலாடுதுறை தொகுதியில் கும்பகோணத்திலும் ஒரு வாக்குச் சாவடியில் குறைந்தது ஆயிரம் வாக்காளர்கள் ம.ம.க. வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர். ஆனால் மிகமிகக் குறைவான வாக்குகளே கணக்கில் வருகிறது. 'வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி நடந்துள்ளது' என்ற ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு உண்மையானதுதான் என்பது இதன்மூலம் தெரிய வருகிறது. (இதுகுறித்து தினமணி...