Posts

Showing posts from May 26, 2009

ஒரிசாவில் பா.ஜ.க. வேட்பாளர் 9 பேர் டெபாசிட் இழந்தனர்

ஒரிசா மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற கிறிஸ்தவர்களுக்கு எதிரான கலவரத்தை சங்பரிவார் சக்திகள் அரசியல் ஆதாயத்திற்காக முன்னெடுத்தன. இதனைத் தொடர்ந்து நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளத்திற்கு மிகப்பெரும் நெருக்கடி ஏற்பட்டது. சில கட்சிகள் மாநிலத்தில் ஆட்சியைக் கலைத்து விட்டு கவர்னர் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தின. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் ஆளுங்கட்சியிடம் கூடுதல் இடங்களை பாஜக கேட்டது. பிஜு ஜனதா தளம் கூடுதல் இடங்களைத் தர மறுக்கவே பாஜக, பிஜு ஜனதா தளத்துடன் 11 ஆண்டுகள் கொண்டிருந்த அரசியல் உறவை முறித்துக் கொண்டது. அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவையும் விலக்கிக் கொண்டது. ஆயினும் நவீன் பட்நாயக், தேசியவாத காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சியை காப்பாற்றிக் கொண்டார். இதனிடையே மாநிலத்தில் உள்ள 21 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பாஜக தனித்துப் போட்டியிட்டது. பாஜகவுக்காக, பாஜகவில் அடுத்த பிரதமர் வேட்பாளர் என கூறப்பட்ட நரேந்திர மோடி, அத்வானி, ராஜ்நாத்சிங் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்

நாடாளுமன்றத்தில் தேவ்பந்த் அறிஞர்கள்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் மவ்லவி ஹிஃப்சுர் ரஹ்மான் மற்றும் மவ்லானா அபுல் கலாம் ஆசாத் போன்ற மார்க்க அறிஞர்கள் அரும்பாடு பட்டார்கள். பின்னர் அவர்களது தியாகத்திற்கு பரிசாக சட்டமன்ற உறுப்பினர் பதவியும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளும் அவர்களைத் தேடிவந்தன. மத்திய அமைச்சரானார் ஆசாத் அது ஆயிற்று அறுபதாண்டு காலம். மார்க்க அறிஞர்கள் அரசியலில் சிறப்பிடம் பெறுவது என்பது இனி நடக்கவே நடக்காதோ என ஏங்கி தவித்த நிலையில் புகழ்பெற்ற தேவ் பந்த் மார்க்க கல்வி சாலையிலிருந்து உருவான இரண்டு மார்க்க அறிஞர்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. அஸ்ஸாமில் மவ்லவி பத்ருதீன் அஜ்மலில் வெற்றி பெற்றார். மவ்லவி அஸ்ராருல் ஹக் காசிமி பிகார் மாநிலம் கிஸன் கஞ்ச் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்றிருக்கிறார். மவ்லவி பத்ருதீன் துப்ரி தொகுதியில் காங்கிரஸின் அன்வர் ஹுஸைனை வென்றார். மவ்லவி அஸ்ரருல் ஹக் காசிமி லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் முக்கிய தலை வரான முன்னாள் மத்திய அமைச்சர் முஹம்மது தஸ்லீமுதீனை தோற்கடித்தார். 81 ஆயிரம் வோட்டு வித்தியாசத்தில் வென்ற அஸ்ராருல் ஹக் காசிமி டெல்லியைத் தளமாகக் கொண்

துபையில் ரத்த தான முகாம்

Image
துபை முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக கடந்த 22.05.2009 அன்று மாபெரும் ரத்த தான முகாம் துபை அல்லிவாசல் மருத்துவமனையில் நடை பெற்றது. துபை முமுக நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். முஸ்லிமல்லாத சகோதரர்களும் இம் முகாமில் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். இம்முகாமில் முமுக துபை மண்டலத் தலைவர் அப்துல் ஹாதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். துபை மண்டல மருத்துவரணி செயலாளர் திருப்பந்துருத்தி அப்துல் ரவூப் மக்களை ஒருங்கிணைத்தார். மதுக்கூர் சேக் பரீத், கொள்ளுமேடு ஜாகிர் உசேன், மேலப் பாளையம் அப்துல் கரீம் ஆகிய சகோ தரர்கள் வாகன வசதிகளை சிறப்பான முறையில் செய்திருந்தார்கள்.