12:43 PM

(2) Comments

மருத்துவ கல்லூரி சேர்க்கை கலந்தாய்வுகளில் முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரட்சனைகள் குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் செயலாளர் முதல்வருக்கு கடிதம்

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு பின்வரும் கடிதத்தை அனுப்பியுள்ளார்;
''நடைபெற்று வரும் மருத்துவ கல்லூரிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வுகளில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் மாணவர்கள் எதிர்நோக்கும் ஒரு பிரச்சனையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். எங்கள் நீண்டக் கால கோரிக்கையான இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றிய நீங்கள் இந்த குளறுபடியையும் நீக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீடு அளித்து உங்கள் தலைமையிலான அரசு நிறைவேற்றிய சட்டத்தில் திறந்த போட்டி (ஒ.சி)க்கான தகுதியை பெறும் முஸ்லிம் போட்டியாளர்ளுக்கு ஒ.சி. ஒதுக்கீட்டில் தான் இடம் அளிக்க வேண்டும். தகுதியின் அடிப்படையில் ஓ.சி. ஒதுக்கீட்டில் முஸ்லிம்கள் இடம் பெறும் காரணத்தினால் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் பெறும் முஸ்லிம்களின் எண்ணிக்கை எந்த காரணத்தைக் கொண்டு குறைந்து விடக் கூடாது என்று முஸ்லிம்கள் இடஒதுக்கீடு தொடர்பான அவசர சட்டத்தின் விதி 5 குறிப்பிடுகின்றது. (நகல் இணைக்கப்பட்டுள்ளது)இடஒதுக்கீடு தொடர்பான இந்த அரசாணையின் விதிமுறைக்கு முரணாக தற்போது மருத்துவ பட்டப்படிப்பிற்கான சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது. ஓ.சி. தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் மருத்துவ கல்லுரியில் ஒ.சி. பிரிவில் இடம் இல்லை என்று கூறப்பட்டு அவர்கள் தங்களை பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் ஒதுக்கீட்டிற்கு மாற்றிக் கொண்டால் அவர்கள் விரும்பும் மருத்துவக் கல்லூரியில் இடம் தருகிறோம் என்று அறிவுறுத்தப்படுகின்றது. இவ்வாறு இடம் அளிக்கப்பட்டால் பிற்படுத்தபட்ட முஸ்லிம் ஒதுக்கீட்டில் தேர்வுச் செய்யப்படும் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். இது வரை இந்த குளறுபடியின் காரணமாக பி.சி.எம். ஒதுக்கீட்டில் தேர்வுச் செய்யப்பட்ட 10 மாணவர்களுக்கு இடம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவ பட்டப்படிப்பில் சேரும் ஒட்டுமொத்தமான முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விடுகின்றது.
மாண்புமிகு முதல்வர் அவர்கள் இக்குளறுபடியை தீர்க்க உடனடியாக தலையிட்டு ஒ.சி. பிரிவில் தகுதிப் பெற்றுள்ள முஸ்லிம் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் மருத்துவக் கல்லுரியில் இடம் கிடைக்கும் அதே வேளையில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வுச் செய்யப்பட்ட அனைத்து முஸ்லிம் மாணவர்களுக்கும் மருத்துவக் கல்லுரியில் இடம் கிடைப்பதற்கும் ஆவண செய்யுமாறும் கடந்த சில தினங்களாக நடைபெற்ற கலந்தாய்வில் ஏற்பட்ட குளறுபடியை திருத்துமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

8:11 PM

(0) Comments

ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவுப் போக்கு:மத்திய அரசுக் கண்டித்து தமுமுக மாபெரும் ஆர்ப்பாட்டம்


ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு அளிக்கும் விதமாகவும், ஓரினச் சேர்க்கைக்கு தண்டனை வழங்கும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377லிஐ நீக்க முயலும் மத்திய அரசின் செயலைக் கண்டித்து தமுமுகவின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 06,07,2009 மாலை 5 மணியளவில் சென்னை மெமோரியல் ஹால் அருகில் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சி அமைப்புச் செயலாளர் ஜைனுல் ஆப்தீன், மாநில வர்த்தகர் அணிச் செயலாளர் யாசின். மாநில தொண்டரணிச் செயலாளர் முகம்மது ரஃபி, மாநில மாணவரணிச் செயலாளர் ஜைனுல் ஆப்தீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். வட சென்னை மற்றும் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், ''ஓரினச் சேர்க்கை செயலுக்கு வக்காலத்து வாங்கும் அவசியம் என்ன வந்தது? மேற்குலகை தனது புதிய வழிகாட்டியாக கொண்டு விளங்கும் ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசுக்கு அநாகரீக பாதையில் செல்லும் அவசியம் என்ன? கோவாவிலும், சென்னை மகாபலிபுரத்திலும் மேற்கு நாடுகளைச் சேர்ந்த வக்கிர பேர்வழிகள் சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் இங்கு வந்து தங்களது பாலியல் முறைகேடுகளுக்கு வடிகால் தேடும் போக்கு'' ஆகியன பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.


1:59 PM

(0) Comments

டெல்லியில் 400 ஆண்டுகால பள்ளிவாசலின் கட்டிடப் பகுதிகள் தகர்ப்பு! தமுமுக கடும் கண்டனம்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வெளியிடும் கண்டன அறிக்கை:
இந்தியத் திருநாட்டின் தலைநகர் டெல்லியின் மெஹரெலி பகுதியில் உள்ள 400 ஆண்டுகால பழமைவாய்ந்த திபியா வாலி பள்ளிவாசலை இடித்துத் தள்ள முயன்ற டெல்லி பெருநகர வளர்ச்சிக்குழும அதிகாரிகளையும், டெல்லி மாநில அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பள்ளிவாசலைத் தகர்க்கும் நோக்கத்துடன் நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்ட கனரக வாகனங்களுடன் பள்ளிவாசலை முற்றுகையிட்ட டெல்லி பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளும், காவல்துறையினரும் சிறுபான்மை மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பள்ளிவாசலோடு சேர்ந்த பகுதிகளைத் தகர்த்து தரைமட்டமாக்கி இருக்கிறார்கள்.

டெல்லியை நவீனப்படுத்தப் போகிறோம் என்ற பெயரில் அதிகார வர்க்கம் செய்த இந்த அடாத செயல் மன்னிக்க முடியாதது. தேசத்தின் வரலாற்று அடையாளங்களை அழிக்கும் குறுகிய மனப்பான்மை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

திபியாவாலி பள்ளிவாசலின் தகர்க்கப்பட்ட பகுதிகள் மீண்டும் கட்டித் தரப்பட்டு முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் உத்தரவிட்ட அரசுகள் நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

மக்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கும் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தொழுகை நடைபெற்று வந்த பள்ளிவாசல் ஒன்றை ரயில்வேத்துறை தகர்த்து தரைமட்டமாக்கியது. இந்தியத் திருநாட்டின் தலைநகரில் இத்தகைய அடாத செயல்கள் நடப்பது வேதனைக்குரியது.

இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால், தவறுகள் சரிசெய்யப்படாவிட்டால் காங்கிரஸ் அரசு கடும் மக்கள் போராட்டங்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்.

10:15 AM

(0) Comments

நக்கீரன் மற்றும் திலகவதி I.P.S-யின் முஸ்லிம் விரோதப் போக்கை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டம்.





சென்னையில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக நக்கீரன் இதழுக்கு பேட்டியளித்த காவல்துறை உயர் அதிகாரி திலகவதி ஐ.பி.எஸ். அவர்கள் ''இஸ்லாமியர்களுக்கு கொலை செய்வது ஒன்றும் புதிதல்ல'' என்று பேட்டியளித்துள்ளார். தனியொரு நபரின் செயலுக்கு முஸ்லிம்கள் அனைவரையும் இழித்துரைப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.







முஸ்லிம் மத துவேசத்தை உருவாக்கத் துணிந்த காவல்துறை உயர் அதிகாரி திலகவதி ஐ.பி,எஸ்.ஐக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று (24.06.2009) மாலை 4.00 மணியளவில் சென்னை மெமோரியல் ஹால் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாய், தமுமுக மாநில மாணவரணிச் செயலாளர் ஜெயினுலாப்தீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். மனிதநேய மக்கள் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். ஹாருன் ரசீது, தமுமுக மாநிலச் செயலாளர் காஞ்சி ஜுனைது, வட சென்னை மற்றும் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





ஆர்ப்பாட்டத்தில், ''காவல்துறையில் உயர் அதிகாரியாகவும், ஓர் எழுத்தாளராகவும் இருப்பவர் இவ்வாறு பொறுப்பற்று பேசலாமா? அமைதி மார்க்கமான இஸ்லாத்தை வன்முறை மார்க்கமாக சித்தரிப்பது மெத்தப்படித்த அதிகாரிக்கு அழகா?'' என்று கேள்விகள் எழுப்பப்பட்டன. இத்தகைய பொறுப்பற்ற சமூக கருத்துக்கு திலகவதி ஐ.பி.எஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் முஸ்லிம்களை வம்புக்கு இழுத்த நக்கீரன் பத்திரிக்கையும் வெளியிட்ட செய்தியை வாபஸ் பெற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் போராட்டங்கள் தீவிரப் படுத்தப்பட்டு சட்டரீதியான நடவடிக்கையும் முடுக்கப் படும் என அறிவிக்கப் பட்டது.



இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

10:10 PM

(0) Comments

உலக அமைதிக்கு வழி...ஓரிறை கொள்கை ஒன்றே!


இலண்டன் இஸ்லாமிய அழைப்பு பணி மையம் சார்பாக உலக அமைதிக்கு வழி...ஓரிறை கொள்கை ஒன்றே! எனும் தலைப்பில் இஸ்லாமிய மாநாடு பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடப்பெற்றது.


மாநாட்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர்
Dr, M.H. ஜவஹிருல்லாஹ், JAQH அமீர் மெளலவS. கமாலுதீன் மதனி மெளலவி ஹாபிழ் யஹ்யா அஷ்ஷெய்க் M. மன்சூர் நளீமி மெளலவி முஹம்மது இஸ்மாயில் மற்றும் உலமா பெருமக்கள் கலந்துக்கொண்டு, உலக அமைதிக்கு இஸ்லாமிய கொள்கை, இஸ்லாமிய வட்டியில்ல கடன், படைத்தவனை வனங்கு;படைப்பினங்களை வனங்காதே! என்ற தலைப்புகளில் பேசினார்கள்.


லண்டனின் மாநாட்டிற்கு பலப்பகுதிகளில் இருந்து திரலாக கலந்துக்கொண்டனர்.

10:08 PM

(0) Comments

யுஜெஎன் வட்ட மேசை அமர்வில் த.மு.மு.க தலைவர்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம் ஹெச் ஜவாஹிருல்லாஹ் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குக் கொள்வதற்காக கடந்த ஜுன் 7ம் தேதி இரவு லண்டன் வந்தார். லண்டன் ஹூத்ரோ விமான நிலையத்தில் அவரை தைக்கால் ஜாகிர் ஹூசைன், காரைக்கால் டாக்டர் கபீர், லால்பேட்டை இல்யாஸ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.



ஜுன் 8 முதல் 10 வரை லண்டன் மைதன்வேல் இஸ்லாமிக் சென்டரில் நடைபெற்ற யுனிவர்சல் ஜஸ்டிஸ் நெட்வர்க் (சர்வதேச நீதி இணையம்) – யுஜெஎன் அமைப்பின் வட்ட மேசை அமர்வில் தமுமுக தலைவர் கலந்துக் கொண்டார். கடந்த ஆண்டு மலேசியாவில் உள்ள பினங்கு நகரத்தில் யுஜெஎன் அமைப்பு தொடங்கப்பட்டது.

உலகின் பல்வேறு பகுதிகளில் மனித உரிமைகளுக்காக இயங்கும் முஸ்லிம் அரசு சாரா அமைப்புகளின் ஒரு இணைப்பு அமைப்பாக யுஜெஎன் உருவாக்கப்பட்டது. இதில் தமுமுகவும் இணைந்து செயல்படுகின்றது.

3 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உலகில் பல்வேறு நாடுகளில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக இலங்கை வட கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களின் பிரச்னையை தமுமுக தலைவர் விரிவாக எடுத்துரைத்தார். ஐ.நா. உட்பட சர்வதேச அரங்குகளில் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சனை முன்னெடுத்துச் செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது. பிரிட்டன், மலேசியா, இந்தோனேசியா, பிரான்சு, டென்மார்க், நார்வே, தென் ஆப்ரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்குக் கொண்டார்கள்.



ஐ.நா. வினால் அங்கிகரிக்கப்பட்ட மனித உரிமை அமைப்பான இஸ்லாமிக் ஹூமைன் ரைட்ஸ் கமிசன் மற்றும் சிட்டிசன் இன்டர்நேசனல் அமைப்பு ஆகியவை இணைந்து இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.



பிரிட்டனில் உள்ள லீஸ்டர் நகரில் இயங்கும் இஸ்லாமிக் பவுன்டேசன் நிறுவனத்திற்கு கடந்த வெள்ளி (ஜுன் 11) அன்று தமுமுக தலைவர் வருகை புரிந்தார் 1973ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பிரட்டனில் மிக சிறப்பாக இஸ்லாமிய பிரச்சாரப் பணிகளை செய்து வருகின்றது.



ஆங்கிலத்தில் முன்னூருக்கும் மேலான நூல்களை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை இயக்குனர் மனாசிர் ஹசன் தமுமுக தலைவரை வரவேற்று நிறுவனத்தின் பணிகளை விளக்கியதுடன் தமுமுகவின் சேவைகளையும் கேட்டறிந்தார். மதிய விருந்தும் அளித்தார் இந்த நிறுவனத்தின செயல் இயக்குனரான சென்னையை சேர்ந்த இர்சாத் பாகியும் இந்த சந்திப்பின் போது உடனிருந்தார்.



இந்த நிறுவனத்தின் சார்பாக ஒரு உயர் கல்வி நிறுவனமும் இயங்கி வருகின்றது. அங்கு இஸ்லாமிய வங்கியியல் குறித்த முதுகலை பட்டப்படிப்பும் டாக்டர் பட்டத்திற்காக பல்வேறு ஆய்வு பாடங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. தமுமுக தலைவருடன் தைக்கால் ஜாகிர் ஹூசைனும் பிரபல மருத்துவர் டாக்டர் அஜ்மலும் உடன் சென்றிருந்தார்கள்.




லீஸ்டரில் வெள்ளி மாலை அங்கு வாழும் தமிழக மற்றும் இலங்கை சகோதர்கள் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில தமுமுக தலைவர் பங்குக் கொண்டார். இலங்கை மவ்லவி இஸ்மாயில் நளீமி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இதில் தமிழக நிலவரங்கள் மற்றும் இலங்கை நிலவரங்கள் குறித்து மிக ஆர்வமாக பங்குக் கொண்டோர் தமுமுக தலைவரிடம் கலந்துரையாடினர்.

11:41 AM

(1) Comments

உலக அமைதிக்கு வழி...ஓரிறை கொள்கை ஒன்றே!!

mmk

நாள் : 14.06.2009 ஞாயிறு 4:00- PM T PM To 9:00 PM

இடம்: PLASHET SCHOOL { OLD BUILDING }Plashet Grove, East Ham, LONDON E6 1DG


சிறப்பு விருந்தினர் Dr, M.H.ஜவாஹிருல்லாஹ் { தலைவர் தமுமுக }
சிறப்புப் பேச்சாளர்கள்:

மெளலவி S.கமாலுதீன் மதனி { அமீர் JAQH,தமிழ்நாடு }
மெளலவி ஹாபிழ் யஹ்யாஅஷ்ஷெய்க் M.மன்சூர் நளீமிமெளலவி H.M.மின்ஹாஜ்

இஸ்லாமிய அழைப்புப் பணி மையம் லண்டன்

11:34 AM

(0) Comments

லண்டனில் த.மு.மு.க தலைவர்

mmk





தமிழகத்தில் இரத்ததான முகாம்கள், கண்சிகிச்சை முகாம்கள், கல்விச் சேவைகள், இலவச மருத்துவ முகாம்கள், அவசர ஊர்தி அர்பணித்தல், சுனாமி நிவாரணப் பணிகள் என்று மாநிலத்தில் பரவலாக அனைத்து சமூக மக்களுக்கும் கடந்த 14 வருடங்களாக மிகச் சிறப்பான முறையில் சேவைகள் செய்து வரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இந்திய எல்லையைத் தாண்டி வெளிநாட்டின் பல பகுதிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.




அந்த வகையில் பிரிட்டன் பயணம் செய்துள்ள தமுமுக தலைவர் முனைவர் ஜவஹிருல்லாஹ் அவர்கள் லண்டனில் வசிக்கும் நமது சமுதாயத்தவர்கள் ஏற்பாடு செய்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அமைப்பின் கிளை துவக்குவது சம்மந்தமாக பல்வேறு அமர்வுகளில் மக்களை சந்தித்து ஆலோசனை செய்துவருகின்றார்.



6:35 PM

(0) Comments

புதுவலசையில் 66வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

இராமநாதபுரதம் மாவட்டம் புதுவலசையில் தமுமுகவின் சார்பாக 66வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப் பட்டது. இதனை தமுமுகவின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அர்ப்பணித்தார். இந்த ஆம்புலன்ஸை புதுவலசை தாஸின் அறக்கட்டளையின் நிறுவனர் தாஸின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமுமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை செய்யது, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சலிமுல்லாஹ் கான், இராமநாதபுரம் கிழக்கு மாவட்டத் தலைவர் சாதிக் பாட்ஷர் மாவட்டச் செயலாளர் தஸ்பிக் அலி மற்றும் மேற்கு மாவட்டத் தலைவர் சல்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் போது புதுவலசை கிளையின் சார்பாக கல்வி உதவிகளும் வழங்கப் பட்டன. இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் 1200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


6:27 PM

(0) Comments

இராமநாதபுரத்தில் கல்வி உதவி


இராமநாதபுரம் நகர தமுமுக சார்பில் கல்வி உதவிகள் வழங்கப் பட்டன. ரூ. 2லட்சம் மதிப்புள்ள கல்வி உதவிகளை பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி வழங்கினார். தமுமுக தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை செய்யது, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சலிமுல்லாஹ்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

6:24 PM

(0) Comments

ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்த ம.ம.க கோரிக்கை


நன்றி : மலேசிய நண்பன்

8:43 PM

(0) Comments

வழக்கறிஞராக வேண்டுமா?

mmk

சமூகத்தில் நடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்கவும், மனித உரிமைகளைக் காத்திடவும் துடிப்புள்ள வழக்கறிஞராக ஆசையா? உங்களுக்கு உதவ தமுமுக மாணவரணி தயாராக இருக்கிறது. சட்டக் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு ஆலோசனையும், தகுதியுள்ள ஏழை மாணவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக கல்விக் கட்டணமும் இலவசமாய் வழங்கப்பட்டு வருகின்றன.
தொடர்புக்கு :
காஞ்சி மு. ஜைனுல் ஆபிதீன் M.A., B.L.,
(மாநில மாணவரணி செயலாளர்)
செல் 99942 92932

12:34 PM

(0) Comments

வாக்குப்பதிவு மோசடியை எதிர்த்து வழக்குமனிதநேய மக்கள் கட்சி உயர்நிலைக்குழு முடிவு

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை

மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு 02.06.2009 அன்று ஒருங்கிணைப்பாளர் பேரா. முனைவர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் சென்னையில் கூடி தேர்தல் முடிவுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. ஜீன்-6ம் தேதி மாநிலச் செயற்குழுவை சென்னையில் கூட்டுவதெனவும், அதைத் தொடர்ந்து திருச்சி, மதுரை, கோவை, சென்னை ஆகிய இடங்களில் மண்டலப் பொதுக் குழுக்களை நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
வாக்குப்பதிவு எந்திர மோசடிகள் குறித்து வழக்கு தொடருவதோடு, இனிவரும் தேர்தல்களின் வாக்குப்பதிவு வாக்குச்சீட்டு மூலமே நடப்பதற்கு வலுவான முயற்சிகளை முன்னெடுப்பதென முடிவெடுக்கப்பட்டது. எதிர்வரும் இடைத்தேர்தல்கள் வாக்குச்சீட்டு முறையில் இல்லாமல் வாக்குபதிவு எந்திரமுறையிலேயே நடக்கும் என்றால், அதில் போட்டியிடாமல் இருக்க அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வேண்டுகோள் வைப்பது எனவும் முடிவெடுக்கப் பட்டது.

12:29 PM

(0) Comments

தமுமுக சார்பில் கோவை அரசு மருத்துவமனைக்கு உதவி


கோவை மாவட்ட த மு மு க. சார்பில் 02-6-2009 அன்று கோவை அரசு மருத்துவமனைக்கு ருபாய் 25,000 மதிப்புள்ள நோயாளிகளுக்கான படுக்கை மெத்தைகள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் த மு மு க. மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அசரப் தலைமையில் நடந்தது.இதில் மாநில செயலாளர் கோவை உமர் நோயாளிகளுக்கான மெத்தைகளை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் குமரனிடம் வழங்கினர்.


இந்த நிகழ்ச்சியில் தமுமுக மாவட்ட தலைவர் பசிர் அகமது. மாவட்ட செயலாளர் ஹமிது. மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் அப்பாஸ். துனை செயலாளர் ஷாஜகான்.மற்றும் ம.ம.க இளைஞர் அணி செயலாளர் அப்பாஸ், கோவை தங்கப்பா, கவிஞர் ஹக், நுர்தின், ஜாபர்சாதிக் ஆகியோர்கள் கலந்துகொண்டார்கள்.