வெற்றியை இழந்திருக்கிறோம் களத்தை இழக்கவில்லை!

கண்மணிகளே... அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) தேர்தல் பரபரப்புகள் ஓய்ந்து, புதிய ஆட்சியின் மந்திரிசபை குறித்து பரபரப்புகள் நிலவும் நேரத்தில் இக்கடிதம் வரைகிறேன். எல்லோரும் வெற்றி உலாவரும் நேரத்தில் உங்கள் முகத்தில் ஒருவித சோர்வு நிலவக்கூடும். வெற்றியையும் லி தோல்வியையும் கருத்தில் கொண்டுதான் நாம் தேர்தல் களத்துக்கு வந்தோம். 'தோல்வி தான் வெற்றிக்கான படிக்கல்' என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாம் தனித்து நின்று தேர்தலை சந்தித்ததே மிகப்பெரிய வெற்றியாகும். பணபலமும், அதிகார பலமுமின்றி இருபெரும் கூட்டணிகளை சமாளித்திருக் கிறோம். அதிகார முறைகேடுகளை எதிர்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு தொகுதியிலும் ஆளும் கட்சியின் சார்பில் பல கோடிகள் வாரி இறைக்கப்பட்டது. ஜெயலலிதா மீது உள்ள கோபத்தில் அரசு ஊழியர்களில் சிலரும் வாக்குப் பதிவின் போது, ஆளுங் கட்சியின் அராஜகங்களுக்கு துணை போயினர் அல்லது கண்டும் காணாமல் இருந்தனர். நமக்கு விழுந்த வாக்குகளை ஆளும் தரப்புக்கு மாற்றும் வகையில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் திட்டமிட்டு தில்லுமுல்லுகள் செய்யப்பட்டதால், 67 ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகளை மட்டுமே நாம் பெற்றதுபோல்...