தமுமுக தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளருமான பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்களின் அறிக்கை: நான் மயிலாடுதுறை தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறேன். வாக்கு சேகரிப்பதற்காகவும், ஆதரவு கோரியும் தொகுதியில் உள்ள அனைத்து முக்கியப் பிரமுகர்களையும், மதத் தலைவர்களையும் சந்தித்து வருகிறேன். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், கிறித்தவ பாதிரியார்கள் என பலரையும் சந்தித்தது போலத்தான் திருவாடுதுறை ஆதினம் அவர்களையும் சந்தித்தேன். திருக்குர்ஆன் மொழியாக்கப் பிரதி ஒன்றை பரிசளித்துவிட்டு அவரிடம் ஆதரவு கோரினேன். அவரும் நான் தேர்தலில் வெற்றி பெற தனது ஆதரவை தெரிவித்தார்.நான் அவரது காலில் விழவும் இல்லை. கையெடுத்து வணக்கம் செய்யவும் இல்லை. இச்செய்தியைத் ஆதினத்திடம் ஆசி பெற்றதாக அவர்களது பாணியில் தினமணி பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்தச் செய்தியை வைத்துக் கொண்டு அவதூறு பரப்புவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட சிலர் இச்செய்தியைத் திரித்து ஆதினத்தை நான் வணங்கியது போலவும், அருளாசி பெற்றது போலவும் சித்தரித்து அவதூறுச் செய்திகளைப் பரப்பி வருகின்றனர். நான் என்னுடைய மாணவ
மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு பின்வரும் கடிதத்தை அனுப்பியுள்ளார்; ''நடைபெற்று வரும் மருத்துவ கல்லூரிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வுகளில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் மாணவர்கள் எதிர்நோக்கும் ஒரு பிரச்சனையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். எங்கள் நீண்டக் கால கோரிக்கையான இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றிய நீங்கள் இந்த குளறுபடியையும் நீக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீடு அளித்து உங்கள் தலைமையிலான அரசு நிறைவேற்றிய சட்டத்தில் திறந்த போட்டி (ஒ.சி)க்கான தகுதியை பெறும் முஸ்லிம் போட்டியாளர்ளுக்கு ஒ.சி. ஒதுக்கீட்டில் தான் இடம் அளிக்க வேண்டும். தகுதியின் அடிப்படையில் ஓ.சி. ஒதுக்கீட்டில் முஸ்லிம்கள் இடம் பெறும் காரணத்தினால் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் பெறும் முஸ்லிம்களின் எண்ணிக்கை எந்த காரணத்தைக் கொண்டு குறைந்து விடக் கூடாது என்று முஸ்லிம்கள் இடஒதுக்கீடு தொடர்பான அவசர சட்டத்தின் விதி 5 குறிப்பிடுகின்றது. (நகல் இணைக்கப்பட்டுள்ளது)இடஒதுக்கீடு தொடர்பான இந்த அரசா
Comments
Post a Comment