ஊடகங்களை வெல்லுவோம் வாருங்கள்!
இன்று இன்பர்மேஷன் டெக்னாலஜி என்று சொல்லப்படக்கூடிய ஐ.டி துறைக்கு நிகராக வருமானத்தை அளிக்கக் கூடிய துறையாக மீடியா துறை இருந்து வருகிறது. ஆனால் இன்றைய அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர் உலகளவிலும் ஐ.டி துறை பின்ன டைவு அடைந்திருப்பதையும், பிரபல மான ஐ.டி நிறுவனங்களே தங்களின் ஊழியர்களை அன்றாடம் வெளியே அனுப்பி வருகிறது. ஆனால் அதற்கு பகரமாக ஊடகத்துறையின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றது.
இந்த ஊடகத்துறையின் தொடர்பாக முதலில் என்னென்ன கல்விகள் தமிழகத்தில் இருந்து வருகின்றது என்று பார்க்கலாம்.
விஷுவல் கம்யூனிகேசன், ஜெர்னலிசம், எலக்ட்ரானிக்ஸ் மீடியா, மாஸ் மீடியா அண்ட் கம்யூனிகேசன்ஸ் ஆகிய படிப்புகளை தமிழ கத்தில் பல்வேறு பல் கலைக் கழகங்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் பயிற்று விக்கப்பட்டு வருகின்றன.
விஷுவல் கம்யூனி கேஷன்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மீடியா ஆகிய இரண்டு படிப்பு களும் பி.எஸ்.சி., மற்றும் எம்.எஸ்.சி படிப்புகளாக வழங்கப்பட்டு வருகின்றன. பி.எஸ்.சி படிப்பதற்கு பிளஸ் டூவில் எந்த குருப் படித்தவர்களும் இதில் சேரலாம். அது போலவே இளநிலை பட்டம் முடித்தவர்கள் யார் வேண்டுமானாலும் எம்.எஸ்.சி விஸ்காம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மீடியாவைப் படிக்கலாம்.
இந்த விஸ்காம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மீடியா படிப்புகளில் இணை யதள வடிவமைப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு, மல்டி மீடியா, அனிமினேஷன் ஆகியவை பாடத்திட்டங் களாகும். இதனை படித்து முடித்து விட்டால் தொலைக்காட்சிகள், வானொலிகள், விளம்பர தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமில்லாமல் பல்வேறு அனைத்து ஊடகங்களிலும் நுழைவதற்கு இந்த படிப்புகள் ஒரு விசிடிங் கார்டு போன்று ஆகும். இதனைப் படித்து விட்டு வேலையில் சேர்பவர் களுக்கு ஆரம்ப நிலை சம்பளமே குறைந்தது ரூ.10,000க்கு மேல் கிடைக் கும். மேலும் வளைகுடா நாடுகளில் இந்த படிப்பு களுக்கு மவுசு அதிகமாக உள்ளது. ஊதியமும் மாதத்திற்கு லகரங்களில் கிடைக்கும்.
ஜெர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் படிப்புகளைப் பொறுத்த மட்டிலும் பத்திரிக்கை துறையில் நுழைய விரும்புபவர்கள் இதனை தேர்ந் தெடுக்கலாம். ஆரம்ப நிலை ஊதியமாக குறைந்தது ரூ.7,000 கிடைக்கும். இதுவே ஆங்கில ஊடகங்களாயின் ஆரம்ப நிலை ஊதியமே ரூ. 20,000க்கு குறையாது.மேற்கண்ட ஊடகப் படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்க விரும்புபவர்கள் ஏதேனும் ஒருதுறையை முன்னரே தேர்ந்தெடுத்து அதில் சிறப்பு பயிற்சி பெறுவதே நன்று. படிக்கும் போதே பகுதி நேரம் வேலையை தேர்ந்தெடுக்கும் வசதியும் இந்தப் படிப்புகளில் உண்டு.
இந்த படிப்பினை வழங்கும் கல்வி நிறுவனங்கள்..
1) புதுக்கல்லூரி, சென்னை
2) லயோலோ கல்லூரி, சென்னை
3) சதக் கல்லூரி, சென்னை
4) அண்ணா பல்கலைக் கழகம்
5) சென்னை பல்கலைக் கழகம்
6) காமராஜர் பல்கலைக் கழகம்
7) ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜெர்னலிசம், சென்னை
Comments
Post a Comment