முற்றுபெற்று விட்டதா ஈழ விடுதலைப் போராட்டம்?

1980களில் தொடங்கிய தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் இறுதி முடிவை தழுவியிருக்கிறது. எல்.டி.டி.ஈ, ப்ளாட், டெலோ, ஈரோஸ், ஈ.என்.டி.எல்.எப்., இ.பி.ஆர்.எல்.எப். போன்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கங்கள் சிங்கள பேரின வாதத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தன.

ஒவ்வொரு இயக்கமும் ஏதாவது ஒருவகையில் தனிச் சிறப்பு பெற்றிருந்தது. இதில் பலர் இந்தியாவிலும் பாலஸ் தீனத்திலும் ஆயுதப் பயிற்சியைப் பெற்றனர்.

இந்திய உளவுத்துறை 'டெலோ' அமைப் புக்கு பேராதரவை வழங்கி பயிற்சி கொடுத்தது. தமிழக உளவு அமைப்புகள் விடுதலைப் புலிகளை ஆதரித்து பயிற்சி அளித்தன.

ஒரு கட்டத்தில் ஆறு அமைப்புகளின் தலைவர்களான பிரபாகரன், சபா ரத்தினம், பத்மநாபா, உமா மகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் ஒன்றாக நின்று கைகளை உயர்த்தி பத்திரிகையாளர்களுக்கு மத்தியில் தங்கள் ஒற்றுமையை வெளிக்காட்டினர். தமிழகமே பூரித்தது.

எம்.ஜி.ஆர். புலிகளை ஆதரித்ததும், அந்தக் கோபத்தில் கருணாநிதி டெலோ அமைப்பின் தலைவரான சபா ரத்தி னத்தை ஆதரித்ததும் ஈழப் பிரச்சினை யில் குழு மோதல்களுக்கு வித்திட்டது.
பிரபாகரன் மிகச்சிறந்த போர்க்கலை நிபுணராக அடையாளம் காணப்பட்டார். உமா மகேஸ்வரனும், சபாரத்தினமும் சர்வ தேச போராட்ட வரலாறுகளை அறிந்த நுட்பமிகுந்த தலைவர்களாக அறியப்பட்ட னர். பத்மநாபாவோ மார்க்சிய பார்வையு டன் கூடிய போராட்டத்தை முன்னெடுப் பதில் தன்னை வெளிக்காட்டிக் கொண்டார்.

இப்படி ஆளுமைமிக்க போராளித் தலைவர்கள் ஈழப் போராட்டத்தை வெளி உலகுக்கு கொண்டு வந்தனர். குட்டிமணி, தங்கதுரை போன்றவர்கள் இவர்களுக்கு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருந்தனர்.

ஈழத் தந்தை என போற்றப்பட்ட செல்வா, சமீபகால அரசியல் தலைவராக மதிக்கப்பட்டு புலிகளால் கொல்லப்பட்ட அமிர்தலிங்கம், உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட திலீபன் போன்றோர் ஈழப் போராட்டத்தின் அரசியல் முகங்களாக திகழ்ந்தனர்.

ஒரு கட்டத்தில் தமிழ் போராட்ட அமைப்புகளுக்குள் ஏற்பட்ட மோதல் களும், அதில் உமா மகேஸ்வரன், சபா ரத்தினம், பத்மநாபா என பல தலைவர் கள் கொல்லப்பட்டதும் ஈழ வரலாற்றில் கரும்புள்ளிகளாகும். இந்தக் குழு மோதல்களில் விடுதலைப் புலிகளே இறுதியாக வென்றனர்.

தமிழகத்தில் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அன்று கொடுத்த ஐந்து கோடி ரூபாய் நிதி (இன்று 50 கோடிக்கு சமம்) புலிகளின் வளர்ச்சியில் மாபெரும் உதவியாக இருந்தது.

அனைவரையும் ஒடுக்கிவிட்டு ஒட்டு மொத்த ஈழ விடுதலை யின் கதாநாயகனாக பிரபாகரன் உருவா னார். அவரது ஆளுமை, போர்த் திறன், கட்டுப் பாடு மற்றும் ஒழுக்கத்துடன் புலிகளை உருவாக்கிய திறமை, சர்வதேச தொடர்பு, நிதி உருவாக்கம், ஆயுத கொள்முதலுக் கான தொடர்பு ஆகியன பலவகையிலும் புலிகள் அமைப்பை அரசுக்கு இணை யான அமைப்பாக மாறியது.

ஈழத் தமிழர்களின் ஏகப் பிரதிநிதியாக பிரபாகரனும், விடுதலைப் புலிகளும் உருவானார்கள். இடையில் அங்கே கிட்டுவுக்கும், மாத்தையாவுக்கும் ஏற்பட்ட அதிகாரப் போட்டி புலிகளை சலனப் படுத்தியது. ஒரு கட்டத்தில் மாத்தை யாவுக்கு பிரபாகரன் மரண தண்டனை வழங்கினார்.
1987ல் இந்திய ராணுவம் இலங்கைக்குச் சென்ற போது, ஒரு கட்டத்தில் புலிகளும் இந்திய ராணுவமும் மோத வேண்டிய நிலை ஏற்பட்டது.

உலகின் மிகப்பெரிய ராணுவமான இந்தியப் படையை பிரபாகரன் திணறடித் தார் என்பது உண்மை. சுமார் 2 ஆயிரம் இந்திய வீரர்கள் உயிர் துறந்தனர்.

இந்திய ராணுவத்தை எதிர்த்ததன் மூலம் பிரபாகரனும், விடுதலைப் புலிகளும் தங்கள் ராணுவ வலிமையை உலகுக்கு உணர்த்தினர்.

தியாகம், இணையற்ற உழைப்பு, கட்டுப்பாடு என தமிழர்களின் கவனத்தை ஈர்த்த விடுதலைப் புலிகள் முறையான அரசியல் இயக்கத்தை வளர்த்தெடுக்கத் தவறியது அவர்களது வரலாற்று பிழையாகும்.

இலங்கை ராணுவத்தை ஓட ஓட விரட்டியதோடு, கிளிநொச்சியை தலை நகராகக் கொண்டு, அறிவிக் கப்படாத ஒரு தேச நிர்வாகத் தையே புலிகள் வழி நடத்தி னர். தமிழ் ஈழ வங்கி, தமிழீழ காவல்துறை, அரசியல் தலைமையகம், நீதிமன்றம், மருத்துவமனை, கல்விக் கூடங்கள், நிவாரண முகாம் கள், போர் பயிற்சியகங்கள் என புலிகள் உலகத் தமிழர் களை வியக்க வைத்தனர்.

ஆனால், அவர்கள் செய்த சில தவறுகள் என்றோ நிகழ வேண்டிய தனி ஈழ தாயகத்தை முகிழவிடாமல் தடுத்து விட்டது.

  • கிழக்கு இலங்கையில் காத்தான் குடியில் முஸ்லிம்கள் மீது நடத்திய படுகொலைகள்.

  • இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றது.

  • ஈழத் தமிழர்களின் அபிமான தலைவர்களில் ஒருவரான அமிர்தலிங்கத்தைக் கொன்றது.

  • சக தமிழ் போராளி அமைப்பு களையும், போராளிகளையும் இரக்கமின்றி கொன்றது.
இந்த நான்கு காரணங்கள்தான் புலிகள் மீது பலரின் கோபத்தை திருப்பியது; இலங்கை பொதுமக்களின் அனுதாபத்தை இழக்க வைத்தது; இந்தியாவை எதிரியாக்கியது. 

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் ஈழத் தோடு ஒன்றி வாழ்ந்த தமிழக மக்கள் ராஜீவ் படுகொலைக்குப் பின்னர் புலிகளை நூறு சதவீதம் நிராகரித்தது புலிகளே எதிர்பாராத ஒன்று.

ஜெயவர்த்தனே, பிரேமதாசா, சந்திரிகா என எல்லா இலங்கை பிரதமர்களும் புலிகளோடு போரிட்டனர். பிரபாகரன் மல்லுக் கட்டினார். பின்னர் நார்வே நாடு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் தனி நாட்டுக்கான உத்தரவாதம் இல்லையென்பதால் பிரபாகரன் பின் வாங்கினார். அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. இந்த காலக்கட்டத் தில்தான் புலிகள் அமைப்பில் முரண் பாடுகள் வெடித்து சாதிய ஏற்றத்தாழ்வு கள் வெளிப்பட்டன. வன்னி தமிழர்கள், கிழக்குப் பகுதி தமிழர்கள் என்ற பாகுபாடுகளினால் கருணா தலைமையிலான புலிகள் குழு பிளவுபட்டனர். இது ஈழத் தமிழர்கள் எதிர்பாராத ஒன்று.

புலிகள் அமைப்பிலிருந்து ஒரு குழு பெரிய அளவில் விலகியது இது இரண்டாவது முறை. ஏற்கனவே உமா மகேஸ்வரன், பிரபாகரனிடமிருந்து கருத்து வேறுபாடுகளினால் பிரிந்தபோது புலிகள் அமைப்பு பெரிய அளவில் பலகீன மடைந்தது. அப்போது பிரபாகரனே மனமுடைந்து டெலோ அமைப்பில் சேரும் மனநிலைக்கு ஆளானார் என்பது பலருக்கும் தெரியாது.

ஆனால், கருணாவின் பிரிவு புலிகளையே அழிவுக்கு உள்ளாக்கிவிட்டது. பிரபாகரனின் மறைவிடம் உட்பட அனைத்து விவகாரங்களையும் அறிந்த கருணா, அதை அப்படியே இலங்கை ராணுவத்திடம் விவரித்த பிறகுதான் முழுமையான போருக்கு பல நாடுகளின் உதவியுடன் இலங்கை தயாரானது.

இந்த காலக்கட்டத்தில் புலிகளின் மூளையாகத் திகழ்ந்த ஆன்டன் பால சிங்கம் மரணமடைந்ததால் புலிகளின் சர்வதேச தொடர்பு பின்னடைவை சந்தித்தது.

அதே காலக்கட்டத்தில் போரும் உக்கிரமாகத் தொடங்கியது. புலிகளின் அமைதி முகமாக காட்சியளித்த தமிழ்ச் செல்வன் கொல்லப்பட்டதிலிருந்து புலிகள் தொடர் சரிவை சந்தித்து வந்தனர்.

புலிகளின் தலைநகரான கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றியது. புலிகளையும், பிரபாகரனையும் ராணுவம் துரத்தியது.

இடையில் தமிழக அரசியல் களத்தில் ஈழ ஆதரவு போராட்டங்கள் வெடித்த போது, சமாதான நாடகங்களும், போலியான போர் நிறுத்தங்களும் அறிவிக்கப் பட்டன.

ஈழப் போர் தமிழ்நாட்டில் அரசியல் படுத்தப்பட்டது. யார் உண்மையான ஈழ ஆதரவாளர்? என்ற போராட்டத்தில் கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ் உள்ளிட்ட பலரும் தங்களை
முன்னிலைப்படுத்திக் கொண்டனர். 

ஆனால் வைகோ, திருமாவளவன், பழ.நெடுமாறன் ஆகியோரை நம்பிய ஈழத் தமிழர்கள் இந்த மூவரையும் ஏனோ நம்பவில்லை.

மறுபுறம் உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்கள் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் மனிதாபிமான போராட்டங்களை நடத்தினர்.

இஸ்ரேலுக்கு ஒரு ஆபத்து என்றால், ஓடோடி உதவி செய்யும் அமெரிக்கா ஈழ விவகாரத்தில் மவுனம் காத்தது. ஐ.நா. அவை கூட போதிய நடவடிக்கை எதை யும் எடுக்கவில்லை.

ஆனால் இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், சீனா போன்ற எதிரும் புதிரு மான அரசியல் கருத்துக்களைக் கொண்ட நாடுகள் இலங்கை ராணுவத்துக்கு உதவி செய்தது. இலங்கையை உக்கிரமாக தூண்டிவிட்டது.

எல்லா வழிகளும் அடைக்கப்பட்ட நிலையில் புலிகள் போர் நிறுத்தத்திற்கு தயாரானதும், இலங்கை அரசு அவர் களை நம்பவில்லை. காரணம் புலிகளின் கடந்தகால செயல்பாடுகள் அப்படி!

ஆனால், போரி னால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் உண வின்றியும், மருந்து களின்றி யும் அவதிப் பட்ட துயரத்தை சர்வதேச சமூகம் வேடிக்கைப் பார்த் தது கொடூரமானது.

இப்போது மே 18 அன்று விடுதலைப் புலிகள் அழிக்கப் பட்டதாகவும், பிரபாகரன், அவர் மகன் சார்லஸ் ஆன்டனி, அரசியல் பிரிவு தலைவர் நடேசன், ரமேஷ் உள்ளிட்டோர் கொல்லப்பட்ட தாகவும் இலங்கை அரசு அறிவித்திருக் கிறது.

போர் முனையில் இவர்கள் கொல்லப் பட்டிருப்பது உலகமெங்கும் வாழும் தமிழர்களை மிகப்பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

30 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஒரு விடுதலைப் போராட்டம் தோல்வி யில் முடிந்தது ஒரு பெரும் சோகமாகும்.

பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கு (பி.எல்.ஓ) பிறகு உலகில் கவனத்திற்குரிய போராளிக் குழுவாக எல்.டி.டி.ஈ. அமைப்பு அடையாளம் காணப்பட்டது.

இவர்களின் சிறப்பு அம்சம் தரைப் படையைத் தவிர கடற்படையையும், விமானப் படையையும் உருவாக்கிய தாகும். இது புலிகளின் மீதான மதிப்பீடு களை உயர்த்தியது.

இன்று பிரபாகரன் கொல்லப்பட்டிருக் கலாம். உலகமெங்கும் வாழும் ஈழத் தமிழர்களுக்கு இது ஒரு கறுப்பு வாரமாக இருக்கும். தமிழகத்தில் ஒரு மிகப்பெரும் சோகம் பரவும்.

ஈழத் தமிழர்களின் தமிழ் ஈழ கனவுகள் உடைக்கப்பட்டிருக்கிறது. அவர் களுக்கு பிரபாகரன் ஒரு யாசர் அராஃபத்தாகவும், ஒரு சேகுவேரா ஆகவும் திகழ்ந்தார்.

இனி அவர்களது அரசியல், வாழ் வுரிமை, சமூக நீதி எல்லாம் என்னவாகும் என்று தெரியவில்லை.

பிரபாகரன் மீது நமக்கு மாற்றுக் கருத்து உண்டு. விமர்சனங்கள் உண்டு. புலிகளின் அரசியல் தவறுகள் மீது மாறாத கோபம் உண்டு.

ஆனால், அவர்கள் நடத்தியது ஒரு விடுதலைப் போராட்டம் என்பதில் ஐயமில்லை. ஒரு இன மக்களின் விடுத லைப் போராட்டம் ஏகாதிபத்திய சக்தி களின் கொடூரக் கரங்களால் ஒழிக்கப் பட்டிருப்பது எதிர்பார்க்காத ஒன்று. ஆனால் இது முற்றுப்புள்ளி அல்ல...

Comments

  1. நன்றாக விளக்கமளித்துள்ளீர்கள் தங்களது கருத்தும் எனது கருத்தும் பெரும்பாலும் ஒத்துள்ளது.
    என்னைப்பொரறுத்த வரை அன்பு தலைவர் நேருவின் வாரிசை அழித்ததுதான் சரியில்லை இதை விட ஒரு ராஜீவ் காந்திக்காகவா? என்று நக்கலாக சொன்னவார்த்தைகளும் தான் இன்னும் அதிக கோபத்தை உண்டாக்கியது.
    சரி இனிமேலாவது தமிழர்கள் தமிழர்களை அதாவது சக இனத்தவரை அழிக்காமல் ஒற்றுமையா இருந்தால் சரி

    ReplyDelete
  2. I have some doubts on that video. In this video he is very young.

    ReplyDelete
  3. ஆனால் இது முற்றுப்புள்ளி அல்ல,

    ReplyDelete
  4. ஆஹh....ஆஹh.... என்ன ஒரு அறிவார்ந்த ஒரு பதிவு.....உணர்சசிகளை து]ண்டிவிட்டு ஆரவாரம் செய்யும் ஏகப்பட்ட பதிவுகளில் நடுநிலையுடன் நின்று பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் அம்சங்களை சுட்டிக் காட்டி உள்ளீர்கள்... என்னுடைய சந்தேகங்கள் பலவற்றிக்கு விடை அளித்துள்ளீர்கள்....
    நன்றி..
    -கஷேந்திரன், விருதுநகர், தமிழ்நாடு.

    ReplyDelete
  5. ஆஹh....ஆஹh.... என்ன ஒரு அறிவார்ந்த ஒரு பதிவு.....உணர்சசிகளை து]ண்டிவிட்டு ஆரவாரம் செய்யும் ஏகப்பட்ட பதிவுகளில் நடுநிலையுடன் நின்று பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் அம்சங்களை சுட்டிக் காட்டி உள்ளீர்கள்... என்னுடைய சந்தேகங்கள் பலவற்றிக்கு விடை அளித்துள்ளீர்கள்....
    நன்றி..
    -கஷேந்திரன், விருதுநகர், தமிழ்நாடு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

துறைமுகத்தில் மோட்டார் சைக்கிள் பேரணி

வழக்கறிஞராக வேண்டுமா?

தமிழகத்தின் துணை முதல்வராக மு.க. ஸ்டாலின் மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து