சரிகிறது மோடி செல்வாக்கு!
மோடியை பாஜகவின் நட்சத்திர தலைவராக அக்கட்சியினர் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடினர். கட்சி யினர் பாராட்டியது போதாது என்று ஊட கங்கள் கூட மோடி புகழ் பாடின. மோடிக்கு இந்தியா முழுவதும் செல்வாக்கு இருப்பதாக கன்னாபின்னாவென கதை பின்னப்பட் டன. மோடி வருங்காலப் பிரதமர் என்றே அனைத்து ஊடகங் களும் குறிப்பிட்டன.
அத்வானியை பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என அறிவித்த பின்னரும் கூட மோடியை முன்னிறுத்திய சங்பரி வார் கும்பல் வெறித்தனமான பிரச்சாரத் தில் ஈடுபட்டது. கொடூர இனப்படு கொலையாளன் மோடியை, தேர்ந்த பொருளாதார மேதை போல வர்ணித்து, சிலாகித்து மகிழ்ந்த சங்கும்பல் மோடிக்கு அகில இந்திய அளவில் செல்வாக்கு பெருகுகிறது என கதை விட்டனர். இறுதியில் எல்லாம் கடைந்தெடுத்த கயமைக் கதைகள் என்பதும், அவர்கள் விட்ட கலர் கலரான ரீலுக்கு யாரும் மயங்கவில்லை என்பதும் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தெளிவானது. நாடெங்கும் படுதோல்வி அடைந்ததோடு மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலும் பலத்த சரிவை சந்தித்தது.
2004ல் பெற்ற ஓட்டு வீதத்தை விட நடைபெற்று முடிந்திருக்கும் தேர்தலில் குறைவாகவே பெற்றுள்ளது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 261 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
2004லம் பாஜக படுதோல்வியை சந்தித்தது. அதைவிட மூன்றரை சதவீத வாக்குகளைக் குறைவாகப் பெற்றுள்ளது பாஜக. பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடை யிலான வாக்குகள் வித்தியாசம் 10 சதவீத மாக உள்ளது. பாஜகவில் இப்போது முக்க லும் முனகலும் கேட்கத் தொடங்கியுள்ளன.
---------------------------------
மோடியால்தான் தோற்றோம்-சரத்யாதவ் சலிப்பு
நரேந்திர மோடியை தேவை யில்லாமல் முன்னிறுத்தியதால் தேசிய ஜனநாயகக் கூட்டணி தோல்வியைத் தழுவியது என தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான சரத் யாதவ் கூறியிருக்கிறார்.
பாஜகவுக்கு என்ற சொல்லிக் கொள்ளும்படியாக செல்வாக்கு இல்லாத நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளைப் பெறுவதற் காக கூட்டணி அமைத்து கொல் லைப்புற வழியாக வாக்குகளைப் பெறுவதே மதவாத பாஜகவின் வாடிக்கை. இந்நிலையில் ஓரளவு கிடைக்கக் கூடிய சொற்ப வாக்களை யும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் வேலையை பாஜக செய்கிறதே என பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் வேதனைப்பட்ட கதை நாடெங்கும் அரசியல் பார்வையாளர்களால் வியப்புடன் உற்று நோக்கப்படுகிறது.
மோடியை வாக்கு குவிக்கும் மாய இயந்திரம் போல் பாஜகவும், மீடியாக்களும் முன் நிறுத்தியபோது பாஜகவுடன் கூட்டணி வைத்த சில கட்சிகள் அலறின.
பாஜகவுடன் கூட்டணி வைத்ததற் காக வாக்கு வங்கியை இழந்து பரிதவிக்கும் அந்தக் கட்சிகள் மோடியை தூக்கிப் பிடிக்கும் பாவத்திற்கும் சாட்சியாக இருப்பதா என வேதனையடைந்த அந்தக் கட்சிகள் பயந்தது போலவே நடைபெற்றது.
பின்னர் ஏன் சரத் யாதவ் அலறமாட்டார்?
Comments
Post a Comment