பாஜக அணிக்கு தாவிய தெலுங்கானா கட்சி உடைகிறது!

ஆந்திராவில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதிக்கு (டி.ஆர்.எஸ்.) குறைந்த இடங்களே கிடைத்துள்ளதால் கட்சியின் அதிருப்தியாளர்களால் அக்கட்சி உடையும் நிலையில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கம் வேண்டும் என தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் கோரி வருகிறார். கடந்த தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்த இக்கட்சி, தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாத தால் அங்கிருந்து விலகியது.


தெலுங்கு தேசம், இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து மூன்றாவது கூட்டணியின் சார்பில் இந்த தேர்தலில் போட்டியிட்டது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி. ஆனால் தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து கொண்டார் சந்திரசேகர ராவ்.


தங்களது கட்சித் தலைவரின் எதேச் சதிகாரப் போக்கால் அவரது கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். ஏற்கனவே சந்திரசேகர ராவின் செயல்பாடுகள் பிடிக்காமல் இக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த பிரகாஷ், கட்சியிலிருந்து விலகினார். இக்கட்சியின் மற்றொரு ததலவரான திலீப் குமார், சந்திரசேகர ராவ் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளார். கட்சியிலிருந்து விலகி புதிய கட்சியை ஆரம்பித்து தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வற்புறுத்தப் போவதாக திலீப் குமார் தெரிவித்துள்ளார்.


தெலுங்கானா தனி மாநில கோரிக்கையில் தீவிரம் காட்டும் ககாதியா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் ஜெயக்குமார், மக்கள் போர்ப்படை நக்சல் இயக்கத்தின் தலைவராக இருந்த பல்லதீர் கட்டார் ஆகியோர் இவரது புதிய கட்சி யில் இணைவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments

Post a Comment

Popular posts from this blog

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகளின் எண்ணிக்கை

அவதூறு பரப்புவோர் இறைவனை அஞ்சிக் கொள்ளட்டும்-தமுமுக தலைவர்

மருத்துவ கல்லூரி சேர்க்கை கலந்தாய்வுகளில் முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரட்சனைகள் குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் செயலாளர் முதல்வருக்கு கடிதம்