அண்ணா சமாதியில் புதிய பராசக்தி

அபு ஹுசைன், துபை

கேள்வி: பல தொகுதிகளில் வாக்காளர்களுக்கு கோடி கோடியாக பணம் பட்டுவாடா செய்யப்பட உள்ளதாக செய்திகள் வருகின்றவே...?

பதில்: நாற்பது தொகுதிகளிலும் பணம் பட்டுவாடா செய்யப்பட உள்ளதாக செய்திகள் வருகின்றன. தேர்தல் ஆணையம் இவ்விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.

முகம்மது இப்ராகிம், பரங்கிப்பேட்டை

கேள்வி: தேர்தல் கள அனுபவத்தில் ம.ம.க.வினரின் உழைப்பு எப்படி இருக்கிறது?

பதில்: நமது தொண்டர்களின் அர்ப்பணிப்பு நமது கண்களை ஈரமாக்குகிறது. தங்கள் வருமானத்தையும், சொந்த வேலைகளையும் கூட பத்து நாட்களுக்கு ஒதுக்கி வைத்துவிட்டு அவர்கள் ஆற்றும் களப்பணி மகத்தானது. கூலிக்கு வேலை செய்யும் பிற கட்சித் தொண்டர்களுக்கு மத்தியில் தியாகத்துடனும், சமுதாய ஆர்வத்துடனும் அவர்கள் கடும் வெயிலில் காட்டும் களப்பணிகள் பிறருக்கு முன்மாதிரியாக இருக்கிறது. இத்தகைய சகோதரர்கள் இருப்பதால் தான், நமது கட்சி யாரையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டதாக இருக்கிறது.

எஸ். ரியாஸ், கரூர்

கேள்வி: ம.ம.க.வை மட்டும் குறிவைத்து ஜெயினுலாபிதீன் எதிர்ப்பு பிரச்சாரம் நடத்துவதை அவரது தொண்டர்கள் ஏற்கவில்லை போல் தெரிகிறதே...?

பதில்: ஒரு கவர்னர் பதவி, சவூதி அரேபியாவுக்கான தூதர் பதவி என இரண்டையும் நிராகரித்து, தனி அணியாக ம.ம.க. துணிந்து களம் கண்டிருக்கிறது. ஒரு தொகுதி அரசியலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வக்ப் வாரியத்தையும் தூக்கி எறிந்திருக்கிறோம்.

இந்தத் தியாகத்தையும், தன்மான அரசியலுக்கான முயற்சியையும், சமுதாய மக்களில் 99 சதவீதம் பேர் மனதார ஆதரிக்கிறார்கள். நம்மை விமர்சிப்பவர்கள் கூட நமது துணிச்சலைப் பாராட்டு கிறார்கள். அதனால்தான் வரவேற்பு இதுவரை இல்லாத அளவுக்கு பெருகுகிறது.

இந்நிலையில் நம் மீது அநியாயமாக அவதூறுகளைக் கூறி நமது தன்மான அரசியலை கொச்சைப்படுத்துபவர் களையும் இறைவனின் தீர்ப்புக்கே விட்டுவிடுகிறோம்.

தன்னோடு இருந்தவர்கள் இன்று மாபெரும் தலைவர்களாக மாறிய கோபத்தில் பொறாமையோடு செயல்படும் அவரை அவரது தொண்டர்கள் அடையாளம் கண்டு வருகிறார்கள். தனிப்பட்ட அவரின் விருப்பு வெறுப்புகளுக்கு இனியும் அவரது தொண்டர்கள் கட்டுப் பட மாட்டார்கள். அவரது பேச்சால் ஏற்பட்ட மக்கள் கோபத்தை அவரது தொண்டர்கள் எதிர்கொள்ள முடியாமல் சங்கடப்படுகிறார்கள். அவர்கள் சரியான பாதையின் பக்கம் விரைவில் திரும்புவார்கள்.

முத்து ஹஸன், நாகை

கேள்வி: ஜெயலலிதா பிரதமர் கனவில் மிதக்கிறாராமே...?

பதில்: ஹெலிகாப்டரில் பறப்பதால், மிதப்பது போல் கனவு காண்கிறார் போலும். அவரது கனவால் நாட்டுக்கு ஆபத்துவராமல் இருந்தால் சரி.

சாதிக் அலி, மலேசியா

கேள்வி: ஜெயலலிதா தொகுதி கொடுக்கவில்லை என்பதற்காக சில முஸ்­ம் அமைப்புகள் கருணாநிதி யிடம் சென்றுள்ளது குறித்து?

பதில்: போயஸ் தோட்டத்தில் காணாமல் போன பொருட்கள் கோபாலபுரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு மேல் எதுவும் சொல்வதற்கில்லை.

எஸ். ஜாகிர் உசேன், திருப்பத்தூர்
கேள்வி: இலங்கைத் தமிழர்களுக்காக கலைஞர் கருணாநிதி நடத்திய உண்ணாவிரதம் பற்றி?

பதில்: முன்பு கலைஞர் தயாரித்த பராசக்தி படம் மூன்று மணி நேரம் ஓடக்கூடியது. இப்போது அவரே நடித்த இலங்கைத் தமிழர்களுக்கான புதிய பராசக்தி படம் ஆறு மணி நேரம் ஓடியது. பராசக்தி, திரையரங்கில் ஓடியது. புதிய பராசக்தி படம் அண்ணா சமாதியில் ஒரே காட்சியோடு முடித்துக் கொள்ளப் பட்டது.
(மக்கள் உரிமை 05.51ல் வெளியான கேள்வி பதில்)

Comments

  1. வெற்றி பெற வாழ்த்துக்கள். மற்றும் எங்கள் துஆ.

    இலங்கை தமிழர் விடயத்தில் ம.ம.க நிலைபாடு?

    ReplyDelete
  2. http://www.tmmk.in/mmk/press/dinasudar.htm

    http://www.tmmk.in/mmk/press/13.htm

    மேற்கண்ட இரண்டு லிங்குகளையும் கிளிச் செய்து ம.ம.கவின் நிலைபாட்டினை தெரிந்து கொள்ளுங்கள்.
    உங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  3. Very Good website,

    Keep it up with more graphics and designs

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

துறைமுகத்தில் மோட்டார் சைக்கிள் பேரணி

முற்றுபெற்று விட்டதா ஈழ விடுதலைப் போராட்டம்?

லண்டனில் த.மு.மு.க தலைவர்