சமுதாயத்தை தலைநிமிரச் செய்யுங்கள் தேர்தல் நிதி தாருங்கள்


சமுதாயத்தின் தன்மானத்தைக் காக்க போர்ப் பரணி பாடி புறப்பட்டு நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது மனிதநேய மக்கள் கட்சி. பண பலம், குண்டர் பலம் என அனைத்தையும் இறக்கிவிட்டு தன் தொண்டர்களுக்கு ஆட்டுக்கிடா விருந்து முதல் டாஸ்மாக் சரக்கு வரை சகல வசதிகளையும் செய்து கொடுத்து அதிரடியாக வலம் வரும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர் களுக்கு மத்தியில், கிடைத்த நேரத்தில் கிடைத்த உணவை சாப்பிட்டு, டீயையும் வடையையும் மட்டுமே பலநேரம் உணவாக உண்டு கூலி வாங்காமல் கொளுத்தும் வெயிலில் உற்சாகமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் நமது தொண்டர்கள். நமது வேட்பாளர் களும் வீதி வீதியாக சளைக்காமல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஜமாஅத் சந்திப்பு, முக்கியப் பிரமுகர்கள் சந்திப்பு என தூங்குவதற்கு நேரமின்றி துடிப்பாக உழைத்து வருகிறார்கள்.


ஆனால் தோள்பலம், தொண்டர் பலம் இருந்தும் பொருளாதார பலம் இல்லாததால் நமது பிரச்சாரப் பணிகளில் சிறு தொய்வு ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள அளவில் மூன்றில் ஒரு பகுதியைக் கூட நாம் இதுவரை செலவு செய்ய வில்லை என்பதுதான் உண்மை. விளம் பரங்கள், பிரச்சார செலவுகளுக்கு பொருளாதாரமின்மை பெரிய தடையாக இருக்கிறது. நமது தொண்டர்களும் தாய்மார்களும் சமுதாயச் சொந்தங்களும் தம்மால் இயன்ற அளவுக்கு உதவி வருகிறார்கள். தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லும் நமது வேட்பாளர்களிடமும், தொண்டர்களிடமும் தம்மால் இயன்றதை தேர்தல் நிதியாக கொடுத்து வருகிறார்கள். தமுமுக சகோதரர்கள் தங்கள் வீட்டு விசேஷங்களில் தேர்தல் நிதி வசலித்துத் தருகிறார்கள். நமது சகோதரர்களின் இந்தப் பணிகள் நம்மை நெகிழ்வடையச் செய்கிறது. எனினும் எறும்பு போல சிறுகச் சிறுக நாம் சேர்க் கும் தேர்தல் நிதி பெரும் பணக்கார முதலைகளோடு மோதும் நமக்கு போதாது. வாக்காளர்களுக்கு நாம் பணம் கொடுக்கப் போவதில்லை. ஆனால் நமது அன்றாடப் பிரச்சாரங்களுக்கும் விளம்பரங்களுக்கும் பெரும் பொருளாதாரம் தேவைப்படுகிறது.


சமுதாயத்தின் தனவந்தர்களே... நியாய உள்ளம் படைத்த வியாபார அன்பர்களே, தாய்மார்களே, சகோதரர்களே நீங்கள் அளிக்கும் நிதிதான் எங்கள் பணிகளை உற்சாகப்படுத்தும். வீரியமடையச் செய்யும். உங்கள் வாக்கு களோடு தேர்தல் நிதியையும் அளித்து சமுதாயத்தை தலைநிமிரச் செய்யுங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

Comments

Popular posts from this blog

துறைமுகத்தில் மோட்டார் சைக்கிள் பேரணி

முற்றுபெற்று விட்டதா ஈழ விடுதலைப் போராட்டம்?

லண்டனில் த.மு.மு.க தலைவர்