வெற்றியின் படிக்கட்டு-மக்கள் உரிமை தலையங்கம்
15வது மக்களவைத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி பீடம் ஏறியிருக்கிறது. பா.ஜ.க.வுக்கும் காங்கிரசுக்கும் கொள்கைகளில் சிறிய அளவு வித்தியாசம்தான் இருந்தாலும், பாஜகவுக்கு காங்கிரசு கட்சி பரவாயில்லை என்ற அளவில் சிலர் நிம்மதி அடையலாம்.
எனினும் லாலுபிரசாத் யாதவ், முலாயம்சிங் யாதவ், இடதுசாரிகள், தெலுங்குதேசம் என மூன்றாவது, நான்காவது அணிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளைக் கொண்ட ஒரு புதிய அணி ஆட்சியமைத்திருந்தால் அது ஒடுக்கப் பட்ட, நலிந்த மக்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும்.
இது நடைபெறாவிட்டாலும், பாசிச சக்திகள் முடக்கப்பட்டது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
இன்றைய நிலையில் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையிலான ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சி பீஹாரில் 12 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியை சந்தித்திருக்கிறது. 1989ல் ராம்விலாஸ் பாஸ்வான் தனது சொந்தத் தொகுதியான ஹாஜிபூரில் நான்கரை லட்சத்துக் கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி ஏழு தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியை சந்தித்திருக்கிறது.
பணபலமும், படைபலமும் கொண்ட இக்கட்சி கள் கூட்டணி பலத்துடன் நின்று தோல்வியைத் தழுவியிருக்கும் போது மனிதநேய மக்கள் கட்சி தோல்வியடைந்தது ஆச்சரியமில்லை.
அரசியலில் தோல்விகள் தவிர்க்க முடியாதது. திமுக 1957ல் போட்டியிட்டபோது, வெறும் நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று பிற இடங்களில் படுதோல்வி அடைந் தது. டெபாசிட்டை பறிகொடுத்தது.
1991ல் பா.ம.க. ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதி யில் வெற்றி பெற்று பிற இடங்களில் படுதோல் வியை சந்தித்து டெபாசிட்டை இழந்தது.
பல அரசியல் கட்சிகள் தோல்வியைத் தழுவியிருக்கின்றன. பலர் படுதோல்விகளை சந்தித்திருக்கிறார்கள்.
டெபாசிட் தொகைகளை இழந்த கட்சிகள் பின்னாளில் ஆளுங்கட்சிகளாகவும், எதிர்க்கட்சி களாகவும் அதிகாரத்தை ஆட்டுவிக்கும் கட்சிகளாக வும் மாறியிருக்கின்றன.
இன்று தமிழகத்தில் பிரபல கட்சியாகத் திகழும் தே.மு.தி.க. இத்தேர்தலில் அனைத்து தொகுதிகளி லும் டெபாசிட்டை இழந்திருக்கிறது.
கட்சி ஆரம்பித்து தொடர் தோல்விகளை சந்தித்த மதிமுக வெகு காலத்திற்குப் பின்புதான் அரசியல் அங்கீகாரம் பெற்றது.
1991 சட்டமன்றத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே திமுக தப்பிப் பிழைத்தது.
1984 தேர்தலுக்குப் பின்னால் உ.பி. மாநிலத்தில் படுதோல்விகளையும், மந்தமான வாக்குகளையும் பெற்றுவந்த காங்கிரஸ் இப்போதுதான் 20 மக்களவைத் தொகுதிகளை வென்றிருக்கிறது.
இந்திரா காந்தி, காமராஜர், அண்ணா போன்ற பிரபலங்கள் எல்லாம் தேர்தலில் தங்கள் தொகுதி களில் தோற்றவர்கள் என்பதை நினைவூட்டு கிறோம்.
மாபெரும் அறிவுஜீவிகளாக கருதப்படும் ப.சிதம்பரமும், மன்மோகன்சிங்கும் ஒருமுறை நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டவர்கள் என்பதும், பிறகு அவர்கள் பிரதமராகவும், நிதியமைச்சராகவும் ஆனார்கள் என்பதும் வரலாறு.
இன்று பிரபல தலைவர்களாக உள்ள ஸ்டாலின், ஜெயலலிதா, வைகோ போன்றவர்கள் களத்தில் தோல்வி கண்டு மீண்டவர்கள்தான்.
தேர்தல் களம் என்பது தோல்வி, படுதோல்வி, விரக்தி, ஏமாற்றம் இவையாவையும் உள்ளடக் கியது என்பதை மறந்துவிடலாகாது. இதை ஒரு சவாலாக ஏற்றால்தான் அடுத்த வெற்றிகளைக் குவிக்க முடியும்.
தேர்தலைப் பற்றி மட்டுமே லட்சியமாகக் கொண்டவர்களுக்கும், போராட்ட வாழ்க்கையை அமைத்துக் கொண்டு லட்சியத்துக்காக அரசி யலுக்கு வந்திருக்கும் ம.ம.க. தொண்டர்களுக்கும் வித்தியாசம் உள்ளது.
இனிதான் நமக்கு பணிகள் அதிகமாக காத்திருக் கிறது. காடுகளைக் கடந்து விட்டோம். இனி மேடுகளைத் தாண்ட வேண்டும்.
போர் வீரர்களுக்கு ஓய்வில்லை. ம.ம.க.வினருக்கு தோல்வி இல்லை.
VARUKINTRA M.L.ASSEBLY ELECTION IUM THANITHO (or) KOOTANOYODA NIKKANUM
ReplyDeleteIPPTHAN NAM MULITHU KONDOM THONKUVATHRKU ENI VELAI ILLAI
தோல்வி வெற்றிக்கு முதல் படி என்பது என்னவோ வாஸ்தவம்தான், ஆனால் அந்த வெற்றியை அடைய நீர் எடுக்கபோகும் செயல்முறையும் சிறப்பாக, சமுதாயத்தில் உள்ள அனைவரும் ஆதரிக்க கூடிய விதத்தில் அமைய வேண்டும்.ஏனெனில் சிறுபான்மையினராக உள்ள நம் இஸ்லாமிய சமுதாயம் பல்வேறு அமைப்பு ரீதியாக பிளவுண்டு இருப்பதை எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் சரி செய்து தங்களை ஒரு வலுவான அமைப்பாக மாற்றுவதற்கான வழிமுறைகளை இப்பொழுதே ஆரம்பியுங்கள் இன்ஷா அல்லாஹ் வெற்றி கிட்டும்.
ReplyDeleteநாம் வெற்றிபெருவோம் என்று எண்ணி இந்த தேர்தல் களத்தை சந்திக்கவில்லை. நமது வாக்கு வங்கியை காட்டிவிட வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் தான் இந்த தேர்தலை நாம் சந்தித்தோம். ஆனால் நமது உன்னத லட்சியத்தை பல சூழ்சிகள் செய்து இந்த திமுக தலைமை நயவஞ்சகமாக நம்மை தோற்கடித்துவிட்டது. ஒட்டு எந்திரத்தில் செய்த தில்லு முல்லுகளின் மூலம் நமக்கு வாக்கு வங்கியே கிடையாது என்பது போன்ற தோற்றத்தை இன்று மக்கள் மத்தியில் உருவாக்கிவிட்டது. நமக்கு விழுந்த வாக்குகளை தங்களின் வாக்காக மாற்றி காட்டி வெற்றி பெற்றுவிட்டார்கள். இனிமேலும் தமுமுக இந்த ஆளும் கட்சியினரின் இந்த நயவஞ்சகத்தனத்திலிருந்து விழிப்படையாவிட்டால் மமக என்ற கட்சியை கலைப்பதை தவிர வேறு வழியே இல்லை சகோதரர்களே!
ReplyDeleteநீங்கள் வேண்டுமானால் தோல்வி வெற்றியின் முதல் படி என்று வீர வசனம் பேசலாம். எல்லா கட்சிகளும் எல்லா தலைவர்களும் தோல்வியிலிருந்து மீண்டு வந்தவர்கள் தான் என்று பட்டியலிட்டு எழுதலாம். ஆனால், அவர்கள் உன்மையிலேயே அப்படிப்பட்ட வாக்குகளை பெற்று, படிப்படியாக முன்னேறி பின்னர் வெற்றிக்கணியை சுவைத்தனர். ஆனால் நம்மை, துவக்கத்திலிருந்தே அடியோடு அழித்துவிட வேண்டும் என்று சூழ்ச்சி செய்து தோற்கடிக்கின்றனர். அவர்கள் கள்ள ஓட்டு போட்டால் கூட மண்ணித்து விடலாம். ஆனால் நமக்கு விழும் வாக்குகளை தனதாக்கிக்கொள்ளத் துடிக்கும் இந்த நயவஞ்சகர்களை எப்படி மண்ணிக்க முடியும் சகோதரர்களே?
எனவே, இந்த தேர்தல் தில்லுமுல்லுகளால் ஏற்பட்ட பாதிப்பு மற்றகட்சிகளைவீட நமக்குத்தான் மிக மிக அதிகம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஒரு பெரும் அரசியல் சக்தியாக உறுவெடுத்துக்கொண்டிருந்த மமகவை அடியோடு ஒழிக்கவேண்டும் என்பதற்காக பல சுயேட்சைகள் பெற்ற வாக்குகளைவீட நம்மை கீழே தள்ளி சதி செய்து படு தோல்வி அடையச் செய்துவிட்டனர்.
இந்த தேர்தல் எந்திரத்தில் செய்யப்படும் தில்லுமுல்லுகள் பற்றி கடந்த பத்து ஆண்டுகளாக ஜெயலலிதா வாய்கிழிய கத்தினார். ஆனால் யாரும் அதற்கு செவி சாய்க்கவில்லை. நாமும் அதற்கு விதிவிலக்கல்ல. காரணம் அவர் உன்மையையே சொன்னாலும் அவர் தோல்வியுரும் போது மட்டும் அதை பேசுவதும் பின்னர் அதை மறந்துவிடுவதும், அடுத்த தேர்தல் வந்ததும் அதே மின்னனு வாக்கு எந்திரத்தின் மூலமே தேர்தலை சந்திப்பதும் என்ற இரட்டை நிலைபாட்டால் தான் இவரது உன்மையான பேச்சு மக்களிடம் எடுபடவில்லை. அவர் சொன்ன உன்மையை கருனாநிதியாலேயே கிண்டலடிக்கப்பட்டு அந்த உன்மை பொய்யாகும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் அதே தவறை நாமும் செய்யாமல், இந்த தேர்தல் தோல்வியின் போது மட்டும் கத்திவிட்டு அடுத்த தேர்தலில் அதே எலக்ட்ரானிக் எந்திரத்தை வைத்து தேர்தலை சந்திப்பது மிக மிக முட்டாள்தனம் என்பதை மீண்டும் அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். ஒரு முஸ்லீம் இருமுறை ஏமாரமாட்டான் என்பது நபிமொழி.
பாமக நிறுவனர் இராமதாஸ் நேற்றைய பேட்டியில் (19-05-2009) மின்னனுவாக்குப்பதிவில் நடந்த தில்லுமுல்லுகளை நிரூபிக்க தயாராக இருப்பதாக பேட்டியளித்துள்ளார் (பார்க்க தினமலர்) எனவே இந்த விஷயத்தில் ஒத்தக்கருத்துள்ள கட்சிகளை ஒன்றினைத்து, இந்த எலக்ட்ரானிக் எந்திரத்தில் ஆளும்கட்சியினரால் ஏற்படுத்தப்படும் தில்லுமுல்லுகளை காரணம் காட்டி இந்த எலக்ட்ரானிக் எந்திரத்தை முழுமையாக ஒழித்துவிட்டு பழைய முறையின்படி ஒட்டுச்சீட்டின் மூலமே தேர்தலை நடத்தவேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும். அதையும் மீறி அவர்கள் அந்த எலக்ட்ரானிக் தேர்தல் எந்திரத்தின் மூலமே அடுத்தடுத்த தேர்தல்களை நடத்தினால் அனைவரும் ஒன்றினைந்து புறக்கணிக்க முன்வர வேண்டும். இதில தமுமுக முன்னின்று செயல்படவேண்டும். இல்லை என்றால் அடுத்த தேர்தலில் மமக இன்று கிடைத்த வாக்குகளைவீட இன்னும் குறைவான வாக்குகளைத்தான் பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஜெயலலிதா போன்று தோல்வியுறும்போது மட்டும் வாய்கிழிய கத்திவிட்டு அடுத்த தேர்தலில் அதே மின்னனு வாக்குப்பதிவை வைத்தே தேர்தலை சந்தித்தால் அதனால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை என்பதுடன், நீங்கள் எடுத்து வைத்த வாதத்திலேயே நீங்கள் பின்வாங்கிவிட்டீர்கள் என்ற நிலைதான் ஏற்படும் என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்ய விரும்புகின்றேன்.
இந்த இடத்தில் இன்னொன்றையும் பதிவு செய்துவிடுகின்றேன். இன்னும் சில மாதங்களில் தமிழகத்தின் 4 சட்டமண்றத்திற்கான இடைத்தேர்தல்கள் நடைபெற இருக்கின்றது. அந்த தேர்தல்களில் பழைய வாக்கு முறையான ஓட்டுச்சீட்டு முறையையே கொண்டுவர நமக்கு ஒத்த கட்சிகளுடன் சேர்ந்து முயற்சி எடுக்கவேண்டும். அதில் இந்த திமுகவிற்கு எந்த அளவுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கின்றது, எந்த அளவுக்கு ஓட்டு எந்திரத்தில் குளருபடி நடந்துள்ளது என்பது தெளிவாக தெரிந்துவிடும். அதற்கு முயற்சிப்பீர்களா?
இதே தளத்தில் உங்கள் பதிலை எதிர்பார்க்கின்றேன்.
வஸ்ஸலாம்,
அதிரை அப்துல்லாஹ், சென்னை – 1