மயிலாடுதுறையில்: மணிசங்கர் அய்யர் தோற்றது ஏன்?


மயிலாடுதுறையில் மணிசங்கர் அய்யரைக் குறிவைத்து பிரச்சார யுத் தத்தை ம.ம.க. நடத்தியது. 15 ஆண்டு களாக எம்.பி.யாக இருந்த அய்யர் மயிலாடு துறையை துபாய் ஆக்குவேன் என்று சொல்லி அதனை பாலைவனமாக மாற்றியது, விவசாயிகள் நலனை புறக் கணித்தது போன்றவற்றை மையமாக வைத்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

வெற்றி பெற்றால் மயிலாடுதுறைக்கு என்ன செய்வோம் என்று ம.ம.க. வேட்பாளர் வெளியிட்ட தொகுதி தேர்தல் அறிக்கை மக்களை வெகுவாகக் கவர்ந்தது.

அய்யருக்கு எதிராக சரியான மாற்று பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்தான் என தொகுதி முழுக்க கருத்து பரவியது. 

மயிலாடுதுறையில் மணிசங்கர் அய்யர் தோற்ற தற்கு மனிதநேய மக்கள் கட்சியின் பிரச்சாரம்தான் காரணம் என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சுதர்சன நாச்சியப்பன் எம்.பி. தொலைக்காட்சி ஒன்றில் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதைத்தான் மே 17 அன்று ஹிந்து நாளிதழும், மே 18 அன்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழும் குறிப்பிட்டிருக்கிறது.

Comments

Popular posts from this blog

துறைமுகத்தில் மோட்டார் சைக்கிள் பேரணி

முற்றுபெற்று விட்டதா ஈழ விடுதலைப் போராட்டம்?

லண்டனில் த.மு.மு.க தலைவர்