திருவனந்தபுரம் அருகே மோதல்! -போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 4 முஸ்லிம்கள் பலி!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பீமாபள்ளி மற்றும் வலியதுறை பகுதியில் மீனவர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் வலியதுறை பகுதியில் மீனவர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் வலியதுறை பகுதியைச் சேர்ந்த சிலர் பீமாபள்ளி பகுதிக்குச் சென்று குடிபோதையில் ரகளை செய்துள்ளனர். இதனால் இருதரப்பினரி டையே மோதல் வெடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பீமாபள்ளியில் உள்ள வீடுகளுக்கு மீனவர்கள் தீ வைக்கப்பட்டது. இதில் 5 வீடுகள் தீயில் சாம்பலாயின. இதுபற்றி தகவல் அறிந்த தும் வலியதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசார் மீதும் அவர்கள் கல் வீசினர். இதில் இரண்டு உதவி ஆய்வாளர்கள் காயம் அடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு திருவனந்தபுரம் சஞ்சய் கவுல் விரைந்து சென்றார். கலவரத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் பீமாபள்ளி பகுதியைச் சேர்ந்த சிலர் வலியதுறை பகுதிக்குச் சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த 2 படகுகளுக்கு தீ வைத்தனர். இதனால் இருதரப்பினரும் மீண்டும் மோதிக் கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து போலீசார் கலவரக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதனிடையே பலியான 2 பேரின் உடலை சம்பவ இடத்தில் இருந்து போலீசார் எடுக்கவிடாமல் உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர். 

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஐந்து நாள் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

துறைமுகத்தில் மோட்டார் சைக்கிள் பேரணி

முற்றுபெற்று விட்டதா ஈழ விடுதலைப் போராட்டம்?

லண்டனில் த.மு.மு.க தலைவர்