ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்! இதை நம்ப முடிகிறதா?

தமுமுக கோட்டையாகத் திகழும் மத்திய சென்னையில், துறைமுகத்தில் தமுமுக தொண்டர்களின் எண்ணிக் கையே பல ஆயிரம். அவர்களின் குடும்பத்தினர் ஓட்டுகள் பல பல ஆயிரம். இங்கு போஹ்ரா முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் ரயில் என்ஜினுக்கு ஓட்டு போட்டுள்ளார்கள். நாம் 25 ஆயி ரம் வாக்குகள் எதிர்பார்த்தோம். ஆனால் வாக்குப் பதிவு இயந்திரம் காட்டும் கணக்கு வெறும் 70 வாக்குகள் மட்டுமே.

பொள்ளாச்சி தொகுதியில் குனிய முத்தூர் பகுதி நமது முக்கிய ஆதரவு பகுதியாகும். இப்பகுதி நமது வேட்பாளர் உமர் அவர்களின் சொந்த ஊராகும். ஊர் மக்கள் இவர் மீது, அமைப்புக்கு அப்பாற்பட்டு அன்பாக இருப்பவர்கள். அங்கு நமக்கு போடப்பட்ட வாக்குகளில் 20 சதவீதம் கூட வாக்கு இயந்திரம் காட்டவில்லை.

ராமநாதபுரத்தில் தேவிப்பட்டினம், மண்டபம் பகுதிகளில் ஆயிரம், இரண்டா யிரம் என மக்கள் ரயில் என்ஜினுக்கு வாக்களித்துள்ளனர். ஆனால் வாக்குப் பதிவு இயந்திரத்தில் வந்த எண்ணிக் கையோ அரசுத் தரப்பின் அயோக்கியத் தனத்தை அப்படியே தோலுரித்துக் காட்டும் விதத்தில் இருந்தது.

Comments

Popular posts from this blog

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகளின் எண்ணிக்கை

அவதூறு பரப்புவோர் இறைவனை அஞ்சிக் கொள்ளட்டும்-தமுமுக தலைவர்

மருத்துவ கல்லூரி சேர்க்கை கலந்தாய்வுகளில் முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரட்சனைகள் குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் செயலாளர் முதல்வருக்கு கடிதம்