ராம்விலாஸ் பாஸ்வான்-சாதனை வெற்றியும் வேதனைத் தோல்வியும்!


இந்தியாவின் தலித் பெரும் தலைவரும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் இந்த மக்களவைத் தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான ஹாஜிபூரில் தோல்வியைத் தழுவியிருக்கிறார்.

1989ல் இதே தொகுதியில் ராம்விலாஸ் பாஸ்வான் பெற்ற வெற்றி அசாதாரணமானது. ஏறக்குறைய ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாஸ் வான், கின்னஸ் சாதனையாளர் களின் பட்டியலிலும் இடம் பெற்றார்.

2009ல் நிகழ்ந்த தேர்தலில் அவரது 'செல்ல' ஹாஜிபூர் தொகுதியில் 37 ஆயிரம் வாக்கு கள் வித்தியாசத் தில் தோல்வியைத் தழுவியுள்ளார். வீட்டுக்கு வீடு பாஸ்வானின் புகைப்படம் தொங்கும் என்றும், ஹாஜிபூரின் மாணவர்கள், இளைஞர்கள் பாஸ்வான் படம் போட்ட பனியனை அணிந்து கொண்டு செல்வது வழக்கம் என்றும் பாஸ்வான் செல்வாக்கை சிலாகித்துப் பேசுவோர் உண்டு.

அத்தனை செல்வாக்கு மிகுந்த பாஸ்வான் தற்போது தோல்வியைத் தழுவியிருக்கிறார்.
பாஸ்வானின் தோல்வி குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ''இது ஒரு விளையாட்டு போன்றது. அரசியலில் வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வரும்'' என்றார்.

தான் தோல்வி அடைந்தாலும் ஹாஜிபூர் மக்களுக் காக உழைப்பதை நிறுத்தப் போவதில்லை என்றார். அத்துடன் மதவாத பாசிச சக்திகளை எதிர்த்துப் போராடுவது தொடரும் என்றார் ராம்விலாஸ் பாஸ்வான்.

மத்திய அரசில் இடம்பெற்றால் தாங்கள் பிற்போக்கு மதவாத சக்திகளான விஸ்வ ஹிந்து பரிஷத், ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளை தடை செய்வோம் என தனது தேர்தல் அறிக்கையிலே குறிப்பிட்ட பாஸ் வானுக்கு, பல் வேறு நலத் திட் டங்களை வழங் கிய பாஸ்வானுக் குத்தான் ஹாஜி பூர் மக்கள் இவ்வாறு நன்றி(!)க்கடனை நிறை வேற்றியுள்ளனர்.

Comments

  1. MR. JAWAHIRULLAH GET 19,000.HOW TO EFFECT MR. MANISANKAR IYER.PMK VOTE FAVOUR TO ADMK SO OS MANIAN WIN.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகளின் எண்ணிக்கை

அவதூறு பரப்புவோர் இறைவனை அஞ்சிக் கொள்ளட்டும்-தமுமுக தலைவர்

மருத்துவ கல்லூரி சேர்க்கை கலந்தாய்வுகளில் முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரட்சனைகள் குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் செயலாளர் முதல்வருக்கு கடிதம்