Posts

வாக்குப்பதிவு மோசடியை எதிர்த்து வழக்குமனிதநேய மக்கள் கட்சி உயர்நிலைக்குழு முடிவு

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு 02.06.2009 அன்று ஒருங்கிணைப்பாளர் பேரா. முனைவர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் சென்னையில் கூடி தேர்தல் முடிவுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. ஜீன்-6ம் தேதி மாநிலச் செயற்குழுவை சென்னையில் கூட்டுவதெனவும், அதைத் தொடர்ந்து திருச்சி, மதுரை, கோவை, சென்னை ஆகிய இடங்களில் மண்டலப் பொதுக் குழுக்களை நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. வாக்குப்பதிவு எந்திர மோசடிகள் குறித்து வழக்கு தொடருவதோடு, இனிவரும் தேர்தல்களின் வாக்குப்பதிவு வாக்குச்சீட்டு மூலமே நடப்பதற்கு வலுவான முயற்சிகளை முன்னெடுப்பதென முடிவெடுக்கப்பட்டது. எதிர்வரும் இடைத்தேர்தல்கள் வாக்குச்சீட்டு முறையில் இல்லாமல் வாக்குபதிவு எந்திரமுறையிலேயே நடக்கும் என்றால், அதில் போட்டியிடாமல் இருக்க அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வேண்டுகோள் வைப்பது எனவும் முடிவெடுக்கப் பட்டது.

தமுமுக சார்பில் கோவை அரசு மருத்துவமனைக்கு உதவி

Image
கோவை மாவட்ட த மு மு க. சார்பில் 02-6-2009 அன்று கோவை அரசு மருத்துவமனைக்கு ருபாய் 25,000 மதிப்புள்ள நோயாளிகளுக்கான படுக்கை மெத்தைகள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் த மு மு க. மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அசரப் தலைமையில் நடந்தது.இதில் மாநில செயலாளர் கோவை உமர் நோயாளிகளுக்கான மெத்தைகளை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் குமரனிடம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தமுமுக மாவட்ட தலைவர் பசிர் அகமது. மாவட்ட செயலாளர் ஹமிது. மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் அப்பாஸ். துனை செயலாளர் ஷாஜகான்.மற்றும் ம.ம.க இளைஞர் அணி செயலாளர் அப்பாஸ், கோவை தங்கப்பா, கவிஞர் ஹக், நுர்தின், ஜாபர்சாதிக் ஆகியோர்கள் கலந்துகொண்டார்கள்.

ஊடகங்களை வெல்லுவோம் வாருங்கள்!

இன்று இன்பர்மேஷன் டெக்னாலஜி என்று சொல்லப்படக்கூடிய ஐ.டி துறைக்கு நிகராக வருமானத்தை அளிக்கக் கூடிய துறையாக மீடியா துறை இருந்து வருகிறது. ஆனால் இன்றைய அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர் உலகளவிலும் ஐ.டி துறை பின்ன டைவு அடைந்திருப்பதையும், பிரபல மான ஐ.டி நிறுவனங்களே தங்களின் ஊழியர்களை அன்றாடம் வெளியே அனுப்பி வருகிறது. ஆனால் அதற்கு பகரமாக ஊடகத்துறையின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றது. இந்த ஊடகத்துறையின் தொடர்பாக முதலில் என்னென்ன கல்விகள் தமிழகத்தில் இருந்து வருகின்றது என்று பார்க்கலாம். விஷுவல் கம்யூனிகேசன், ஜெர்னலிசம், எலக்ட்ரானிக்ஸ் மீடியா, மாஸ் மீடியா அண்ட் கம்யூனிகேசன்ஸ் ஆகிய படிப்புகளை தமிழ கத்தில் பல்வேறு பல் கலைக் கழகங்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் பயிற்று விக்கப்பட்டு வருகின்றன. விஷுவல் கம்யூனி கேஷன்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மீடியா ஆகிய இரண்டு படிப்பு களும் பி.எஸ்.சி., மற்றும் எம்.எஸ்.சி படிப்புகளாக வழங்கப்பட்டு வருகின்றன. பி.எஸ்.சி படிப்பதற்கு பிளஸ் டூவில் எந்த குருப் படித்தவர்களும் இதில் சேரலாம். அது போலவே இளநிலை பட்டம் முடித்தவர்கள் யார் வேண்டுமானாலு...

சொன்னதை செய்யுமா காங்கிரஸ்?

சமூக, பொருளாதார தளங்களில் இந்திய முஸ்லிம்களின் பிற்பட்டத் தன்மையை ஆய்வு செய்வதற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கடந்த ஆட்சிக் காலத்தில் நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப் பட்டது. அது தனது பரிந்துரைகளையும் சமர்பித்தது. நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிக்கப் பட்டப் பிறகும், சச்சார்க்குழு பரிந்துரைகளை நடைமுறைப் படுத்த ஐ.மு.கூட்டணி அரசு உரிய முயற்சிகளை எடுக்கவில்லை. சச்சார் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற டெல்லியில் த.மு.மு.க. மாபெரும் பேரணியையும் நடத்தியது. மத்திய அரசிடம் பல்வேறு வழிகளில் மன்றாடிப் பார்த்தும், சச்சார் குழு பரிந்துரைகளை நிறைவேற்றுவதற் கான அறிகுறி ஆட்சியின் அந்திமகாலம் வரை தென்படவில்லை. மறுபடியும், மத்தியில் பெரும்பான்மை ஆதரவோடு ஆட்சியைப் பிடித்திருக் கிறது காங்கிரஸ் கட்சி. சிறுபான்மை மக்களின் ஒட்டு மொத்த ஓட்டுக்களை பெற்றே அசுர பலத்தை பெற்றிருக்கிறது. இப்போதாவது காங்கிரஸ் சிறுபான்மை மக்களுக்கு தந்த வாக்குறுதிகளை நிறை வேற்ற வேண்டும். சிறுபான்மை முஸ்­ம் களின் கல்வி மற்றும் பொருளாதார நிலைகளை பற்றி ஆராய்ந்து அறிக்கை தந்த நீதிபதி சச்சார் கமிட்டியின் பர...

தமிழகத்தின் துணை முதல்வராக மு.க. ஸ்டாலின் மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து

தமிழகத்தின் துணை முதல்வராக மு.க. ஸ்டாலின் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை தமிழகத்தின் துணை முதல்வராக திமுகவின் பொருளாளரும், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சருமான சகோதரர் மு.க. ஸ்டாலின் அவர்களை அறிவித்த தமிழக முதல்வருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். சகோதரர் ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் துணை முதல்வராக சிறப்பாக பணியாற்றி, அரசு நிர்வாக பணிகளை சுறுசுறுப்பாக இயங்க வைத்து தமிழகத்திற்கு தொண்டாற்றிட வாழ்த்துகிறோம்.

பாஜக அணிக்கு தாவிய தெலுங்கானா கட்சி உடைகிறது!

ஆந்திராவில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதிக்கு (டி.ஆர்.எஸ்.) குறைந்த இடங்களே கிடைத்துள்ளதால் கட்சியின் அதிருப்தியாளர்களால் அக்கட்சி உடையும் நிலையில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கம் வேண்டும் என தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் கோரி வருகிறார். கடந்த தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்த இக்கட்சி, தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாத தால் அங்கிருந்து விலகியது. தெலுங்கு தேசம், இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து மூன்றாவது கூட்டணியின் சார்பில் இந்த தேர்தலில் போட்டியிட்டது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி. ஆனால் தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து கொண்டார் சந்திரசேகர ராவ். தங்களது கட்சித் தலைவரின் எதேச் சதிகாரப் போக்கால் அவரது கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். ஏற்கனவே சந்திரச...

Election-2009 வாக்குரிமை மறுக்கப்பட்ட தலித் மக்கள்!

Image
இரும்பு மங்கை என்றும் தலித் மக்களின் பெருந் தலைவி என்றும் மாயாவதி அகில இந்திய அளவிலும் புகழப்பட்டாலும் தலித் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் இன்னும் வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. விடுதலை பெற்ற 60 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்நாட்டின் உழைக்கும் வர்க்கத்தின் உரிமை மறுக்கப்படும் நிலை தொடர்ந்து வருகிறது. தலித் மக்களின் உரிமைகள் பறிக்கும் விவகாரங்கள் குறித்து தலித் உரிமை காக்கும் அமைப்பு 500 முறையீடுகளை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளது. 1)2009 மக்களவைத் தேர்தலில் ஏழை தலித் வாக்களிக்கச் சென்ற போது தடுத்து நிறுத்தியதாக உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த புள்ளிகள். 2) அரசியல்வாதிகள் 3) அரசியல் (கு) தொண்டர்கள் 4) தேர்தல் பணியாளர்கள் 5) காவல்துறை அதிகாரிகள் தலித் மக்களின் உரிமைகளை ஆதிக்க சாதிவெறியினர் ...