இந்தியாவின் தலித் பெரும் தலைவரும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் இந்த மக்களவைத் தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான ஹாஜிபூரில் தோல்வியைத் தழுவியிருக்கிறார். 1989ல் இதே தொகுதியில் ராம்விலாஸ் பாஸ்வான் பெற்ற வெற்றி அசாதாரணமானது. ஏறக்குறைய ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாஸ் வான், கின்னஸ் சாதனையாளர் களின் பட்டியலிலும் இடம் பெற்றார். 2009ல் நிகழ்ந்த தேர்தலில் அவரது 'செல்ல' ஹாஜிபூர் தொகுதியில் 37 ஆயிரம் வாக்கு கள் வித்தியாசத் தில் தோல்வியைத் தழுவியுள்ளார். வீட்டுக்கு வீடு பாஸ்வானின் புகைப்படம் தொங்கும் என்றும், ஹாஜிபூரின் மாணவர்கள், இளைஞர்கள் பாஸ்வான் படம் போட்ட பனியனை அணிந்து கொண்டு செல்வது வழக்கம் என்றும் பாஸ்வான் செல்வாக்கை சிலாகித்துப் பேசுவோர் உண்டு. அத்தனை செல்வாக்கு மிகுந்த பாஸ்வான் தற்போது தோல்வியைத் தழுவியிருக்கிறார். பாஸ்வானின் தோல்வி குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ''இது ஒரு விளையாட்டு போன்றது. அரசியலில் வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வரும்'' என்றார். தான் தோல்வி அடைந்தாலும் ஹாஜிபூர் மக்களுக் காக உழைப்பதை நிறுத்தப் ப...